Advertisment

டூரிங் டாக்கீஸ்! வெற்றி கைகூடுமா?

cc

வெற்றி கைகூடுமா?

காமெடியனாக பல படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோவாக நடித்துவரும் சந்தானம் "கிக்' படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற நடிகர்கள் படத்தில் நடிக்கமாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டான ரூலை பின்பற்றி வந்த சந்தானம், அஜித் -விக்னேஷ்சிவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இருப்பினும் தற்போது ஹீரோவாகவே முழு கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்ஆண்டனியை வைத்து "இந்தியா பாகிஸ்தான்' படத்தை இயக்கிய ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். படத்தின் படப்பிடிப்பு சத்தமே இல

வெற்றி கைகூடுமா?

காமெடியனாக பல படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோவாக நடித்துவரும் சந்தானம் "கிக்' படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற நடிகர்கள் படத்தில் நடிக்கமாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டான ரூலை பின்பற்றி வந்த சந்தானம், அஜித் -விக்னேஷ்சிவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இருப்பினும் தற்போது ஹீரோவாகவே முழு கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்ஆண்டனியை வைத்து "இந்தியா பாகிஸ்தான்' படத்தை இயக்கிய ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். படத்தின் படப்பிடிப்பு சத்தமே இல்லாமல் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறதாம். இப்படமும் வழக்கம்போல சந்தானம் ஸ்டைலில் காமெடி கலந்த படமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. சந்தானத்தின் கடைசி 3 படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தேடிக்கொடுக்காத நிலையில், இப்படம் அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisment

cc

தனுஷ்-துஷாரா காம்போ!

"சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான துஷாரா விஜயன், அடுத்ததாக மீண்டும் பா.ரஞ்சித்தின் "நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் அழுத்தமான முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் துஷாராவுக்கு தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களே அதிகம் தேடி வருகிறது. தற்போது தனுஷ் மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ள நிலையில், அதில் நடிக்க துஷாராவுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பிற்கு சற்றும் யோசிக்காமல் ஓ.கே. சொல்லிவிட்டார் துஷாரா. தனுஷ் இயக்கம் என்பதினாலும், கதாபாத்திரம் மிகவும் பிடித்துப் போய்விட்டதாலும் உடனே தலையசைத்துவிட்டார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விஷ்ணுவிஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. வசந்தபாலன் இயக்கும் "அநீதி' படத்தில் நடித்துள்ள துஷாரா, தற்போது பாலாஜிமோகன் இயக்கும் "காதல் கொஞ்சம் தூக்கலா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு தனுஷ் இயக்கும் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நானும் ஹீரோதான்!

"கனா' படத்தின் மூலம் தயாரிப்பாள ராகவும் பயணிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா', "வாழ்' என கடைசியாக அவர் நடித்த "டான்' படம் வரை தயாரித்திருந்தார். இதையடுத்து புதிதாக ஒரு படத்தை தயாரித்து வருகிறார். கடந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட "கூழாங்கல்' படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்க சூரியை அணுக... சூரியும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். படப்பிடிப்பை மதுரையில் தொடங்கி நடத்தி வருகிறார்கள். வெற்றிமாற னின் "விடுதலை' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக் கிறார் சூரி.

போலீஸ் வில்லன் பிரசன்னா!

தமிழ் சினிமா வில் ஹீரோவாக வலம் வந்த பிரசன்னா "அஞ்சாதே', 'திருட்டுப் பயலே 2' உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக மிரட்டியிருந்தார். வில்லன் கதாபாத்திரம் எது வந்தாலும் அதனையும் ஏற்றுக்கொள் கிறாராம். தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் படத் தில் வில்லனாக நடித்து வருகிறார். மலையாளத்தில் "கிங் ஆஃப் கோதா' என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத் தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் பிரசன்னாவும் பவர்ஃபுல்லான நெகட்டிவ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரம் என்பதால் இயக்குநர் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை படமாக்கிவருகிறார். இந்தப் படம் வெளியான பிறகு தமிழிலும் மலையாளத்திலும் தனது மார்க்கெட் உயரும் என உற்சாகத்தில் இருக்கிறார் பிரசன்னா.

-கவிதாசன் ஜெ.

nkn180123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe