Advertisment

டூரிங் டாக்கீஸ்! கமிட்டான கல்யாணி!

dd

கமிட்டான கல்யாணி!

cc

Advertisment

சிவகார்த்திகேயனின் "ஹீரோ' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து, பின்பு சிம்புவின் "மாநாடு' படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்ற கல்யாணி பிரியதர்ஷன், அதற்கடுத்து எந்த தமிழ் படத் திலும் கமிட்டாக வில்லை. தொ டர்ந்து மலையாளத் தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கல்யாணி நடிக்க படத்தை கார்த்திக் வேலப்பன் என்பவர் இயக்குகிறாராம். கார்த்திக் வேலப்பன், அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் . மேலும் "கண்ணும் கண்ணும் கொள்ளை யடித்தால்' படத்தில் துல்கரின் நண்பனாக நடித்த வி.ஜே. ரக்ஷன், இப்படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப் பட்டுள

கமிட்டான கல்யாணி!

cc

Advertisment

சிவகார்த்திகேயனின் "ஹீரோ' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து, பின்பு சிம்புவின் "மாநாடு' படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்ற கல்யாணி பிரியதர்ஷன், அதற்கடுத்து எந்த தமிழ் படத் திலும் கமிட்டாக வில்லை. தொ டர்ந்து மலையாளத் தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கல்யாணி நடிக்க படத்தை கார்த்திக் வேலப்பன் என்பவர் இயக்குகிறாராம். கார்த்திக் வேலப்பன், அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் . மேலும் "கண்ணும் கண்ணும் கொள்ளை யடித்தால்' படத்தில் துல்கரின் நண்பனாக நடித்த வி.ஜே. ரக்ஷன், இப்படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது.

ஓ.கே. சொன்ன விஷால்!

விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் "மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். வில்லனாக எஸ்.ஜே சூர்யாவும் கதாநாயகியாக ரித்து வர்மாவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 65 சதவீதம் முடிந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கி வருகிற மார்ச்சில் முடிகிறதாம். கடந்த மாதம் வெளியான "லத்தி' படம் எதிர்பார்த்த அளவு போகாததால் இப்படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறாராம் விஷால். இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து "அடங்கமறு' படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். முன்னதாக அவர் விஷாலை சந்தித்து ஒரு கதை கூற, அந்த கதை விஷாலுக்கு மிகவும் பிடித்துப்போக, உடனே ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அந்த சமயத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளதால், கார்த்திக் தங்கவேல் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போனதாம். இந்த நிலையில் 'மார்க் ஆண்டனி' படத்தை முடித்து கொடுத்துவிட்டு கார்த்திக் தங்கவேல் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளாரர். இப்படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பாக கதிரேசன் தயாரிக்க, வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கு வதற்கான முதற்கட்ட பணிகளில் இயக்கு நர் கார்த்திக் தங்கவேல் தயாராகி யுள்ள நிலையில்... விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்க லாம் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.

சூப்பர் அறிவிப்பு!

cc

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் "ஜெயிலர்' படத்தில், ரஜினியுடன் இணைந்து பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்து வரும் நிலையில் பிரபல மலையாள பட நடிகர் மோகன்லாலும் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இன்னும் 40 சதவீத படப்பிடிப்பு மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினி, அதில் ஒன்றாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மற்றொரு படத்தை, 'டான்' பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என கூறப்பட்ட நிலையில் அவர் தற்போது இயக்கவில்லையாம். இந்த நிலையில் "ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல், சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதை கூற... அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து போனதாம். இதனால் விரைவில் இருவரும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "ஜெய் பீம்' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு உண்மைக் கதையைத் தழுவி "தோசை கிங்' என்ற தலைப்பில் இந்தியில் படம் எடுத்துவரும் ஞானவேல், ரஜினியிடம் கூட்டணி அமைக்கும்பட்சத்தில் அந்த கதை உண்மைக் கதையை தழுவியதாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இப்போதிலிருந்தே எழத் தொடங்கியுள்ளது.

கே.ஜி.எஃப்.

3... 4... 5!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எஃப்' பாகம் 1 மற்றும் 2 இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப "கே.ஜி.எஃப்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கே.ஜி.எஃப்.பின் 3ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பை 2025ல் தொடங்கி 2026ஆம் ஆண்டில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் இப்படம் தொடர்ந்து ஐந்து பாகங்களாக உருவாகுவதாகவும் , அதற்கு அடுத்த பாகத்தில் யஷ் நடித்த "ராக்கி பாய்' கதாபாத்திரத்தில் வேறொரு நடிகர் மாற்றப்படுவார் என்றும் கன்னட திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-கவிதாசன் ஜெ.

nkn140123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe