Advertisment

டூரிங் டாக்கீஸ்! பிக்பாஸுடன் த்ரிஷா!

cc

பிக்பாஸுடன் த்ரிஷா!

"பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் "தி ரோட்' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் த்ரிஷாவுக்கு, விஜய் -லோகேஷ் கனகராஜ் பட வாய்ப்பும், அஜித் -விக்னேஷ் சிவன் பட வாய்ப்பும் வந்ததாம். அதில் விஜய்க்கு ஓ.கே. சொல்லி விட்டாராம். அஜித் படத்திற்கு பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

Advertisment

cc

இந்த நிலையில், கமல் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திலும் த்ரிஷாவை நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெறுகிறதாம். மணிரத்னம் -கமல் கூட்டணி ப்ராஜெக்ட் என்பதால் த்ரிஷாவும் இதற்கு ஓ.கே. சொல்லிவிடுவார் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை சம்மதம் சொல்லும் பட்சத்தில் "மன்ம

பிக்பாஸுடன் த்ரிஷா!

"பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் "தி ரோட்' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் த்ரிஷாவுக்கு, விஜய் -லோகேஷ் கனகராஜ் பட வாய்ப்பும், அஜித் -விக்னேஷ் சிவன் பட வாய்ப்பும் வந்ததாம். அதில் விஜய்க்கு ஓ.கே. சொல்லி விட்டாராம். அஜித் படத்திற்கு பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

Advertisment

cc

இந்த நிலையில், கமல் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திலும் த்ரிஷாவை நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெறுகிறதாம். மணிரத்னம் -கமல் கூட்டணி ப்ராஜெக்ட் என்பதால் த்ரிஷாவும் இதற்கு ஓ.கே. சொல்லிவிடுவார் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை சம்மதம் சொல்லும் பட்சத்தில் "மன்மதன் அம்பு', "தூங்காவனம்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கமலுடன் இணையவுள்ளார் திரிஷா.

Advertisment

தயாராகும் துருவ்!

"கர்ணன்' படத்தை அடுத்து பா.ரஞ்சித் தயாரிப்பில், துருவ்விக்ரமை வைத்து ஒரு படம் பண்ண ரெடியானார் மாரி செல்வராஜ். கபடி வீரராக துருவ் நடிப்ப தாகவும் அதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தை தள்ளி வைத்துவிட்டு உதயநிதியை வைத்து "மாமன்னன்' படத்தை தொடங்கினார். இப்படத்தை அடுத்து துருவ்விக்ரம் படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்த்தநிலையில் "வாழை' என்ற தலைப்பில் ஒரு படத்தை தற்போது உருவாக்கிவருகிறார்.

cc

"வாழை' பட அறிவிப்பு வெளி யானபோது துருவ்விக்ரம் படம் எப்போது ஆரம்பிப்பார் அல்லது கைவிடப்பட்டதா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் உலாவரத் தொடங்கின. இந்த கேள்வி களுக்கு பதிலளிக்கும்விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. "வாழை' படத்தை முடித்துவிட்டு, அடுத்து துருவ்விக்ரம் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் மாரி செல்வராஜ். இப்படத்திற்காக தற்போது மீண்டும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம் துருவ்விக்ரம். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.

வில்லனாகும் அமீர்கான்?

கே.ஜி.எஃப். படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரஷாந்த் நீல், தற்போது பிரபாஸ் நடிக்கும் "சலார்' படத்தை இயக்கி வருகிறார். ஸ்ருதி ஹாசன், பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படமாக உருவாகிறது.

c

தன் படங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து வருகிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல். அந்த வகையில் சஞ்சய்தத், பிரித்விராஜ் உள்ளிட்ட பிரபலங்களைத் தொடர்ந்து தனது அடுத்தபடமான ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கானை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளாராம். அதற்காக அமீர்கானையும் அணுகி வருகிறாராம். பிரஷாந்த் நீலின் முடிவிற்கு அமீர்கான் செவிசாய்த்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

"ரெயின்போ காலனி-2'!

செல்வராகவன் இயக்கிய "7ஜி ரெயின்போ காலனி', "புதுப்பேட்டை', "ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட சில படங்கள் இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அப்படங்களின் இரண்டாம் பாகத்தையும் எடுக்குமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதை பூர்த்திசெய்யும் வகையில் "ஆயிரத்தில் ஒருவன் 2' உருவாகுவதாக கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், செல்வராகவன் இயக்கிய மற்றொரு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த "7ஜி ரெயின்போ காலனி' படம்தான் அப்படம். இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக தற்போது செல்வராகவனிடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறாராம். முதல் பாகத்தில் நடித்த ரவிகிருஷ்ணாவையே இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க ஏ.எம். ரத்னம் முடிவெடுத்துள் ளாராம்.

-கவிதாசன் ஜெ.

nkn070123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe