Advertisment

டூரிங் டாக்கீஸ்! என்ன சமாச்சாரம? பாலிவுட் சமாச்சாரம்!

trisha

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட்டில் பிரபலமான இளம் ஹீரோ. மணிரத்னத்தின் "உயிரே' படத்தில் "தய்ய தய்யதய்ய தய்யா' பாடலுக்கு ஆடி சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மலைக்கா அரோரா.

Advertisment

மலைக்காவைவிட அர்ஜுன் 11 வயது இளையவர். ஆனாலும் இவர்களுக்கு இடையே இருக்கும் ஒருவித நெருக்க நட்பு... பலவித பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.

arjunkapoor

சல்மான்கானின் தம்பியும், டைரக்டருமான அர்பாஸும், மலைக்காவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 2016-ல் பிரிந்து வாழ துவங்கிய இவர்கள் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர். ஆனால் விவாகரத்து பெறுவதற்கு முன்பே... அர்ஜுனுடன் நட்பு வைக்கத்தொடங்கிவிட்டார் மலைக்கா.

Advertisment

குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட அர்ஜுன் ம

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட்டில் பிரபலமான இளம் ஹீரோ. மணிரத்னத்தின் "உயிரே' படத்தில் "தய்ய தய்யதய்ய தய்யா' பாடலுக்கு ஆடி சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மலைக்கா அரோரா.

Advertisment

மலைக்காவைவிட அர்ஜுன் 11 வயது இளையவர். ஆனாலும் இவர்களுக்கு இடையே இருக்கும் ஒருவித நெருக்க நட்பு... பலவித பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.

arjunkapoor

சல்மான்கானின் தம்பியும், டைரக்டருமான அர்பாஸும், மலைக்காவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 2016-ல் பிரிந்து வாழ துவங்கிய இவர்கள் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர். ஆனால் விவாகரத்து பெறுவதற்கு முன்பே... அர்ஜுனுடன் நட்பு வைக்கத்தொடங்கிவிட்டார் மலைக்கா.

Advertisment

குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட அர்ஜுன் முக்கிய காரணம் என்பதால்... "உன்னைக் கொன்றுவிடுவேன்'’’என அர்ஜுனை சல்மான் ஏற்கனவே சத்தம் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

ஆனாலும்... அர்ஜுனும், மலைக்காவும் நைட் பார்ட்டிகளில் “காக்டெயில்’ போல கலந்து கொள்கிறார்கள்.

அர்ஜுனின் அப்பா போனியின் தயாரிப்பில் சல்மான் ஏற்கனவே படங்கள் நடித்திருக்கிறார். இப்போது கடன் பிரச்சினைகளை சமாளிக்க சல்லுவிடம் கால்ஷீட் கேட்கிறது போனி தரப்பு. ஆனால்... இந்த கோபத்தில் பதில் சொல்லாமல் இருக்கிறார் சல்லு.

இதனால்... மகனைக் கூப்பிட்டு போனி கடுமையாக கண்டித்தும்கூட... மலைக்காவுடனான பழக்கத்தை அர்ஜுன் விடுவதாக இல்லை.

"அர்ஜுனை தங்கள் படத்தில் நடிக்க வைத்தால் சல்லுபாயின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே' என புதிய வாய்ப்புகளை அர்ஜுனுக்குத் தர தயாரிப்பாளர்கள் தயங்க... அர்ஜுனோ மலைக்காவுடன் நெருங்கிப்பழகக் கிடைத்திருக்கும் வாய்ப்பை விடுவதாக இல்லை!

பாலிவுட்டில் காரசாரமா பேசப்படுது இவங்க சமாச்சாரம்!

மல்லுவுட் சமாச்சாரம்!

மலையாள நடிகர் சங்கமான "அம்மா' மம்முட்டிக்கும், மோகன்லாலுக்கும் விதிகளை வளைத்து சப்போர்ட் செய்துவந்ததை எதிர்த்து கேட்டதால் திலகன் சினிமாவில் நடிக்க ஆயுட்கால தடைபோட்டனர். அந்த வேதனையிலேயே மறைந்தார் திலகன்.

நடிகையை பாலியல் ரீதியாக தாக்கிய வழக்கில் சிறை சென்ற திலீப்பை நடிகர் சங்க பொருளாளர் பதவியிலிருந்து நீக்கினார் அதன் தலைவராக இருந்த இன்னோசெண்ட். இப்போது தலைவராகியிருக்கும் மோகன்லால் தலைமையிலான நிர்வாகிகள் கூடி திலீப்பை மீண்டும் சங்கப் பதவியில் அமர்த்த முடிவெடுக்க... இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன், திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் ஆகியோர் "அம்மா'விலிருந்து விலகியுள்ளனர். மேலும் பல நடிகைகளும், நடிகர்களும் "அம்மா' மீது அதிருப்தியில் இருப்பதால்... அவர்கள் புதிய நடிகர் சங்க அமைப்பை ஏற்படுத்த ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்நிலையில்... மோகன்லாலின் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் இந்தப் பிரச்சினையில் குதித்து லாலுக்கு ஆதரவாக முழங்கி வருகிறார்கள்.

கோலிவுட் சமாச்சாரம்!

trisha

ஓய்வுக்காக அமெரிக்கா சென்றிருக்கும் த்ரிஷா... ரோஹர் ஸ்டேடியத்திலிருந்து 1168 உயரத்தில் தொங்கியபடி... சாகஸம் செய்திருக்கிறார். ஹோட்டல் ஒன்றில் டேபிள் புக் செய்த த்ரிஷா "இது இரண்டு பேருக்காக' என குறிப்பெழுதி... லவ் எம்பளத்தையும் பதிவு செய்து வலைப்பக்கத்தில் போட... "த்ரிஷா மறுபடி லவ்வுல...' என... யோசிக்க விட்டிருக்கிறார் ரசிகர்களை. இந்தச் சமயத்தில் ‘"பாகுபலி'’ ராணாவும் அமெரிக்காவில் இருந்தார். ஆனா... அவங்க ரெண்டுபேரோட காதல் பிரேக்-அப் ஆயிட்டதா சொன்னாங்களே...?

"ஜல்லிக்கட்டு' ஜூலி இப்போது "அனிதா எம்.பி.பி.எஸ்.' என்கிற "நீட்' சம்பந்தப்பட்ட படத்திலும், "அம்மன் தாயி' என்கிற பக்தி படத்திலும் நடித்துவருகிறார்.

மாடலிங் நடிகரான ஹாம்ரன் என்கிற தனது பாய் ஃப்ரெண்ட்டுடன் அந்தமான் சென்று தன் பிறந்தநாளை கொண்டாடி... ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட சாகஸ விளையாட்டும் விளையாடிவிட்டு வந்திருக்கிறார்.

"காலா' படம் பெரிய நஷ்டம் என வர்த்தக தரப்பும், ‘நஷ்டமில்லை’ என தயாரிப்பாளர் தனுஷும் சொல்கிறார்கள். சில ஏரியாக்களில் எம்.ஜி. எனப்படும் மினிமம் கியாரண்டி முறையில் படம் விநியோகிக்கப்பட்டது. அப்படி வாங்கிய தொகையில் ஒரு பகுதியை தனுஷ் ரிடர்ன் செய்ததாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

-ஆர்.டி.எ(க்)ஸ்

trisha nkn13.07.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe