எகிறும் சம்பளம்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_176.jpg)
"பிரேமம்' படம் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தனுஷின் "கொடி' படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார். இதனிடையே, மலை யாளத்தைத் தொடர்ந்து இவர் நடித்த தெலுங்குப் படங்கள் வெற்றி பெறவே அடுத்தடுத்து முன்னணி கதா நாயகர்களுடன் நடிக்க கமிட் டாகி வருகிறாராம். தொடர்ந்து படங்கள் வெற்றி பெறுவதால் குஷி யில் இருக்கும் அனுபமா, இதுதான் நல்ல சான்ஸ் என்று தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காகக் கூட்டியுள்ளாராம். தயாரிப்பாளர் களும் அனுபமாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளதால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம்.
மிஷ்கினுடன் மக்கள் செல்வன்!
தென்னிந்திய மொழி களைத் தாண்டி பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில் தமிழில் "விடுதலை', தெலுங்கில் "மைக்கேல்', இந்தியில் "ஜவான்', "மும்பைக்கார்', "மெர்ரி கிறிஸ்துமஸ்' என ஒரு பெரிய லிஸ்டையே கைவசம் வைத்துள் ளார். இதுமட்டுமல்லாமல் மணி கண்டன், ஆறுமுககுமார் என அடுத்தடுத்து பிரபல இயக்குனர் களுடன் பயணிக்க இருக்கிறா ராம். இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்கத் திட்டமிட்டுள் ளார்களாம். அதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் மிஷ்கின் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், "வி கிரியேஷன்ஸ்' பேனரில் தயாரிப்பாளர் தாணு இப்படத்தை தயாரிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப் படுகிறது.
மீண்டும் இயக்குநர் தனுஷ்!
நடிப்பு, தயாரிப்பு, பாடல் எழுதுவது, பாடுவது என அடுத் தடுத்த தளங்களில் பயணித்த தனுஷ், "ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இப்படம் ரசிகர்கள் மனதை வெகுவாகக் கவர்ந்த நிலையில்... அடுத்ததாக எப்போது படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவானது. பின்பு விஷ்ணுவிஷாலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து நடிப்பில் அதிக கவனம் செலுத்திய தனுஷ், தற்போது "கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்திற்கு தயாராகவுள் ளார். இதனிடையே "கேப்டன் மில்லர்' படத்தின் இடைவெளியில், அவர் அடுத்து இயக்கவுள்ள படத்தின் கதை விவாதத்தில் உதவி இயக்குநர்களுடன் ஈடுபட்டு வருகிறாராம். மேலும் திரைக்கதை எழுதும் பணியையும் தொடங்கி யுள்ளாராம். முதல் படத்தில் காதல் ஜானரை கையில் எடுத்த தனுஷ், இப்படத்தில் எந்த ஜானரை எடுக்க திட்டமிட்டுள்ளார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_130.jpg)
13 கெட்டப்பில் சூர்யா!
"வணங்கான்' படத்திலிருந்து விலகிய சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் "சூர்யா 42' படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, முக்கிய கதாபாத்தி ரத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், 3டி முறையில் சரித்திர கதையாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக இலங்கை செல்லவுள்ளார்களாம். கிட்டத்தட்ட 60 நாட்கள் நடக்கவுள்ள இந்த ஷெட்யூலில் படத்தின் முக்கியமான போர்ஷனை படமாக்கவுள்ளார் கள். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாவதாகவும், இதில் சூர்யா 13 கெட்டப்புகளில் நடிப்ப தாகவும் கூறப்படுகிறது.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/cinema-t.jpg)