மலையாளக் கரையோரம் கமல்!
"இந்தியன் 2' படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார். இதனிடையே, ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து படங்களை வைத்திருக்கும் கமலஹாசனை, மோகன்லாலுடன் ஒரு மலையாள படத்தில் நடிக்க வைக்க பிரபல மலையாள இயக்குநர் -ஜோ ஜோஸ் பெலிச்சேரி அணுகியுள்ளாராம். 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கும் -ஜோ ஜோஸ் பெலிச்சேரி, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமலை நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளாராம். அதற்காக சமீபத்தில் கமலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு கமல் ஓகே சொல்லும் பட்சத்தில் 'உன்னைப்போல் ஒருவன்' படத்திற்கு பிறகு 13 வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலும், கமலும் ஒன்றாக திரையில் தோன்றவுள்ளது குறிப்பிடத் தக்கது.
காக்கி தனுஷ்!
அஜித்தை வைத்து "துணிவு' படத்தை இயக்கியுள்ள ஹெச்.வினோத், அடுத்ததாக யோகி பாபுவுடன் ஒரு படமும், கமலை வைத்து ஒரு படமும் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஹெச்.வினோத், தனுஷுடன் கூட்டணி அமைக்கவுள்ளாராம். இது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, ஆமாம் என்றவர்கள், படம் குறித்து ஒரு சுவாரசிய தகவலையும் நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_129.jpg)
இந்த படம் உண்மைக் கதையைத் தழுவி உருவாவதாகவும், அதில் தனுஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள தனுஷ், அதற் காகத் தன்னை தற்போதிலிருந்தே தயார் செய்துகொண்டிருக்கிறாராம். தற்போது "கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துவரும் தனுஷ், இதன் பணிகளை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குநர் சேகர்கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன்பிறகே ஹெச்.வினோத்தின் படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் மயிலு பொண்ணு!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_175.jpg)
நடிகை ஸ்ரீதேவி -தயாரிப்பாளர் போனிகபூரின் மகளான ஜான்விகபூர், இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். "பவால்' மற்றும் "மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' படத்தில் நடித்து வரும் ஜான்விக்கு, "குஞ்சன் சக்ஸீனா' படத்தை தவிர எந்த படமும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் தீவிர யோசனையில் இருந்த ஜான்விக்கு சீனியர் நடிகைகள், "ஏன் நீ தென்னிந்திய படங்களில் நடிக்கக்கூடாது, அங்கு நடிகைகளுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது' என அட்வைஸ் செய்ய, அதை எப்படி செயல்படுத்தலாம் என திட்டமிட்டு ஜான்வி முதற்கட்டமாக தமிழ்ப் படமான "கோலமாவு கோகிலா', மலையாள படமான "ஹெலன்' உள்ளிட்ட படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். இதுவும் எதிர்பார்த்த அளவு வொர்கவுட் ஆக வில்லை என்பதால், தற்போது நேரடி தென்னிந்திய படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். அதற்காக பல தென்னிந்திய இயக்குனர்களிடம் கதை கேட்கும் பணியில் ஜான்வி இறங்கி யிருக்கிறாராம்.
"புஷ்பா' இயக்குநர் படத்தில் பிரபாஸ்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema2_44.jpg)
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரபாஸ், தற்போது நாக் அஸ்வின் இயக்கும் "ப்ராஜெக்ட் கே', பிரசாந்த் நீல் இயக்கும் "சலார்', ஓம் ராவத் இயக்கும் "ஆதி புருஷ்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இதில் "ஆதி புருஷ்' படம் அடுத்த ஆண்டு மத்தியில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிரபாஸ், 'புஷ்பா' ஹிட் படத்தை கொடுத்த சுகுமார் இயக்கத் தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இப்படம் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்படவுள்ளாதாம். அதற்குள் "புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தினை முடித்து திரைக்கு கொண்டுவர சுகுமார் திட்டமிட்டிருக் கிறாராம்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/cinema-t_7.jpg)