அட்லீ புது காம்போ!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_173.jpg)
"மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் "மாவீரன்' படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக கமல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அதற்கடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க கல்யாணி பிரியதர்ஷ னும், ரித்து வர்மாவும் நடிக்கிறார்களாம். ஜி.வி.பிரகாஷ் இசை யமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள
அட்லீ புது காம்போ!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_173.jpg)
"மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் "மாவீரன்' படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக கமல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அதற்கடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க கல்யாணி பிரியதர்ஷ னும், ரித்து வர்மாவும் நடிக்கிறார்களாம். ஜி.வி.பிரகாஷ் இசை யமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல்முறையாக அட்லீ, சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இணையவுள்ள இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோ சான்ஸ்!
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, சமீபகாலமாக தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் கமிட்டான படங்களில் அவரால் கலந்துகொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே பாதி படப்பிடிப்பு முடிந்த விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படக்குழு சமந்தாவின் வரு கைக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து இந்தியிலும் படங்களை புக் செய்து வைத்திருந்தார் சமந்தா. இந்தநிலையில் அந்த பாலிவுட் படக்குழு சமந்தாவை, படப்பிடிப்புக்கு அழைக்க, அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகை யில் பதில் அளித் துள்ளாராம். தசை அலர்ஜி நோயிலிருந்து விடுபட சிகிச்சை பெற்று வருவதால் தற்போது எந்த படத்திலும் நடிக்க முடியாது என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியுள்ளாராம். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு சமந்தாவின் வருகைக்கு காத்திருக்கலாமா அல்லது வேறு கதாநாயகியை ஒப்பந்தம் செய்யலாமா என யோசித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றனர்.
டைரக்டர் கார்த்தி!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema2_42.jpg)
"சர்தார்', "பொன்னியின் செல்வன்' என தொடர் வெற்றிகளைக் கொடுத்த கார்த்தி, தற்போது "ஜப்பான்' படத்தில் நடித்துவருகிறார். ராஜுமுருகன் இயக்கிவரும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்தியின் 25வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் நடிப்பைத் தாண்டி அவ்வவ்போது பாடல்களைப் பாடி வரும் கார்த்தி அடுத்ததாக இயக்கத்திலும் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் திரை தொழில்நுட்பம் சம்பந்தமான படிப்பை முடித்த கார்த்தி, மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தார். ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்துப் படங்களிலும் நடித்து முடித்த பிறகு, தான் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்கவுள்ளாராம். ஏற்கனவே கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இயக்குவதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில்... தற்போது அந்த லிஸ்டில் கார்த்தியும் இணைந்துள்ளார்.
விஜய்யை இயக்கும் விஷால்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_127.jpg)
நடிப்பு, தயாரிப்பு என அடுத்தடுத்த துறைகளிலும் பயணிக்கும் விஷால் "துப்பறிவாளன் 2' படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முடிந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கி அந்தாண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து மேலும் இரண்டு படங்களை இயக்கவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். அதில் ஒரு படம் விலங்குகளை மையப்படுத்தின கதையாக இருக்கும் என தெரிவித்த அவர், மற்றொரு படம் தனது கனவுப் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அந்த கனவுப் படம், நடிகர் விஜய்யை மனதில் வைத்து ஒரு ரசிகனாக அவரே எழுதியுள்ளதாகவும், அந்த கதையை விரைவில் விஜய்யை சந்தித்து சொல்லவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு விஜய் ஓ.கே. சொல்லும்பட்சத்தில் அந்த படத்தையும் நானே இயக்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
-கவிதாசன் ஜெ.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us