பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களில் நடித்த சஞ்சய்தத்திற்கு, தற்போது தென்னிந்திய சினிமாக்களிலும் மவுசு கூடியுள்ளது. பெரும் வெற்றி பெற்ற "கே.ஜி.எஃப் 2' படத்தில் ஹீரோ யஷ்ஷுக்கு இணையாக சஞ்சய்தத் நடித்திருந்ததுதான் காரணம். இதனால் அவரது மார்க்கெட் வேல்யூவும் கூடவே, வில்லன் கதாபாத்திரம் என்றாலே தென்னிந்திய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சஞ்சய்தத்தைத்தான் முதல் சாய்ஸாக தேர்ந்தெடுக் கிறார்களாம்.
இந்நிலையில் சஞ்சய்தத் தனுஷுக்கு வில்லனாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள "வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், "கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குநரான சேகர்கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதால், அதற்கேற்றவாறு நடிகர்களை தேர்வுசெய்து வருகிறதாம் படக்குழு. இப்படத்தின் கதை வரலாற்றுப் பின்னணியில் உருவாவதாகவும், கதைப்படி பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரம் ஒன்று இருப்பதாகவும், அதற்காகவே படக்குழு, சஞ்சய் தத்தை தேர்வு செய்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில்... விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திசை மாறும் லோகேஷ்!
"விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் 67-ஆவது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், இயக்கத்தை தாண்டி, தற்போது வேறு துறையிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள லோகேஷ், முதலில் இரண்டு படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். அதில் முன்னணி ஹீரோவான விக்ரம் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிக்கும் படங்களை தயாரிக்கவுள்ளார். இதில் விக்ரம் நடிக்கும் படத்தை லோகேஷின் உதவியாளர்களில் ஒருவரான மகேஷ் சுப்பிரமணியம் இயக்க, லாரன்ஸ் நடிக்கும் படத்தை லோகேஷின் நண்பரான இயக்குநர் ரத்னகுமார் இயக்கவுள்ளார். இரண்டு வேறு, வேறு இன்ட்ரஸ்டிங்கான கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருத்தத்தில் ஐஸ்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் தமிழில் உருவாகும் பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படி லீட் ரோலில் இவர் நடித்துள்ள "டிரைவர் ஜமுனா', "சொப்பன சுந்தரி' உள்ளிட்ட சில படங்கள், நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியிடும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் திரையரங்கு களில் படம் வெளியாகாமல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாவதால், விளம்பரம் இல்லாமல் தங்களுக்கு வியாபாரம் சற்று குறைவதாகக் கருதுகிறார்களாம் முன்னணி ஓ.டி.டி. நிறுவனங்கள். மேலும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களையே வாங்கி வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இந்தத் தகவல் ஐஸ்வர்யா ராஜேஷின் காதுகளுக்கு செல்ல, பயங்கர வருத்தத்தில் உள்ளாராம். இதனால் தன் மீதும், தனது கதைத் தேர்வின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் "டிரைவர் ஜமுனா', 'சொப் பன சுந்தரி' உள்ளிட்ட படங்களை திரை யரங்கில் வெளியிடவும் யோசித்துவருகிறாராம்.
ஹாலிவுட்டை மிரட்டும் அயலான்!
சிவகார்த்திகேயன், மடோன் அஷ்வின் இயக்கும் "மாவீரன்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே கடந்த 2 ஆண்டு களுக்கு முன்ன தாக சிவகார்த்திகேயன் "இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய இயக்கு நரின் "அயலான்' படத்தில் நடித்து வந்தார். தொடர்ந்து நடைபெற்று வந்த இப்படத்தின் பணிகள், பட்ஜெட் பிரச்சனை காரண மாக திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு சில காரணங் களால் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்த அயலான் படப் பணிகள் சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தை, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள தாம். உலகப் புகழ்பெற்ற "அவதார்' படத்தில் பணியாற்றிய சி.ஜி. பணியாளர்களை இப்படத்திலும் பணியாற்ற வைத்துள்ளதாக கூறப் படுகிறது. மேலும், ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள், ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவுக்கு உருவாக்கப்பட்டு வருவதாகவும் படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
-கவிதாசன் ஜெ.