நாவல் ஆவல்!
நாவல்களைத் தழுவி திரைப்படமாக்கி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறச் செய்பவர் வெற்றிமாறன். தொடர்ந்து அதே பாணியைப் பின்பற்றி வரும் வெற்றிமாறன், தற்போதும் கூட "துணைவன்' என்ற நாவலை மையப்படுத்தி விஜய்சேதுபதி, சூரியை வைத்து "விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் வெற்றிமாற னின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, மீண்டும் ஒரு நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டுள்ள வெற்றிமாறன் எழுத்தாளர் இமையம் எழுதிய "செல்லாத பணம்' என்ற நாவலை படமாக்கும் உரிமை யையும் கைப்பற்றியுள்ளாராம். திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிக்கல்கள், அதனால் அவர் எடுக்கும் முடிவுகளை மையமிட்ட கதையின் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த நாவல் "சாகித்ய அகாடமி' விருது வென்றது என்பது கூடுதல் சிறப்பு. இந்த நாவல் படமாக வந்தால், பல விருதுகளையும், விமர்சனங்களையும் பெறும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் வெற்றிமாறன் சூர்யாவுடனான "வாடிவாசல்' படத்தை முடித்த பிறகே, இந்த படத்தின் பணியை கவனிப்பார் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.
கமல் கதையில் கமல்!
ஷங்கர்-கமல் கூட்டணியில் உருவாகிவரும் "இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. "விக்ரம்' படத்தின் வெற்றியாலும், அடுத்து அவருக்கு இருக்கும் லைன்-அப்பாலும் அவரது படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கமல் அடுத்ததாக மலையாள இயக்குனர் மகேஷ்நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டே கமல் அறிவித்திருந்தார். இந்த படத்தின் கதையை கமலே எழுதியிருக்கிறாராம். ஆனால், அதன் பிறகு அந்தப் படம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், படம் கைவிடப் பட்டதாக தகவல்கள் தீயாய் பரவ தொடங்கின. அதற்கேற்றாற்போல் கமலும், மணிரத்னத்துடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார், இடையில் ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் மகேஷ்நாராயணன் படம் கைவிடப்படவில்லை எனக் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, கமல்ஹாசன் வேறு படங்களில் பிசியாக இருப்பதால், அந்த படங்களை முடித்து விட்டு இந்தப் படத்துக்கான பணிகளில் கவனம் செலுத்தவுள்ளதாகவும், அதனால் இப்படம் சற்று தாமதமாகத் தொடங்க விருக்கிறது என்றும் பகிர்ந்துகொண்ட படக்குழு தரப்பு, வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண் டுள்ளது.
ப்ரியா என்ட்ரி!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_124.jpg)
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "வாரிசு' படம், அஜித்தின் "துணிவு' படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள் ளது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள "தளபதி 67' பட பூஜையை சமீபத்தில் சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் சிம்பிளாக நடத்தியுள்ள னர். இந்நிலையில் சத்தமே இல்லாமல் ஒரு நடிகையை படத்திற்கு புக் செய்துள்ளார்களாம். மேலும் படத்தின் பூஜையில் அந்த நடிகை கலந்துகொண்டிருந்தாராம். யார் அந்த நடிகை என்று ஆச்சர்யத்துடன் விசாரித்தபோது, வேற யாரும் இல்ல நம்ம ப்ரியா ஆனந்த் என்று பகிர்ந்துகொண்ட கோலிவுட் வட்டாரத்தினர், அவரின் ரோல் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர். ஏற்கனவே கதாநாயகியாக த்ரிஷாவும்,
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_170.jpg)
வில்லனாக இந்தி நடிகர் சஞ்சய்தத்தும், அர்ஜுனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில்... தற்போது ப்ரியாஆனந்தும் இணைந்திருப்பது "தளபதி 67' படத்தில் இன்னும் யார், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
பாலிவுட்டில் போட்டி!
"கோமாளி' படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்க நாதன் இயக்கத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்ற "லவ் டுடே' படம், கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுனாக மாறியது. டோலிவுட்டின் கவனத்தைப் பெற்று அண்மையில் டப் செய்யப்பட்டு வெளியான "லவ் டுடே', தமிழைப் போலவே அங்கேயும் இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலிலும் கணிசமான தொகையையும் ஈட்டி வருகிறதாம். இப்படி கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய சினிமாவில் பலரது கவனத்தைப் பெற்ற "லவ் டுடே' தற்போது பாலிவுட்டின் கதவையும் தட்டியிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தை அங்கு டப் செய்யாமல் ரீமேக் செய்ய பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்கள் முந்தியடிப்பதாக கூறப்படுகிறது. இதில் பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்கவுள்ளார். இயக்குநர் யார் என்ற தகவல் இன் னும் வெளியாக வில்லை.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/cinema-t_2.jpg)