Advertisment

டூரிங் டாக்கீஸ்! தயாரிப்பாளர் கீர்த்தி!

c

தயாரிப்பாளர் கீர்த்தி!

cc

Advertisment

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ், தமிழில் மாரி செல்வராஜ், உதயநிதி கூட்டணியில் உருவாகும் "மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள் ளார். இதனை தொடர்ந்து ஜெயம் ரவியின் "சைரன்' படத்தில் நடித்துவரும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நானியின் "தசரா' மற்றும் "வேதாளம்' படத்தின் ரீமேக்கான "போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக நடித்தும் வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது நடிப்பைத் தாண்டி தயாரிப்பாளராக வேண்டும் என முடிவெடுத்துள்ளார் ôம். தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து நல்ல வலுவான கதைகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என ஆசைப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகளை தொடங்கிய கீ

தயாரிப்பாளர் கீர்த்தி!

cc

Advertisment

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ், தமிழில் மாரி செல்வராஜ், உதயநிதி கூட்டணியில் உருவாகும் "மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள் ளார். இதனை தொடர்ந்து ஜெயம் ரவியின் "சைரன்' படத்தில் நடித்துவரும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நானியின் "தசரா' மற்றும் "வேதாளம்' படத்தின் ரீமேக்கான "போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக நடித்தும் வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது நடிப்பைத் தாண்டி தயாரிப்பாளராக வேண்டும் என முடிவெடுத்துள்ளார் ôம். தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து நல்ல வலுவான கதைகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என ஆசைப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகளை தொடங்கிய கீர்த்திசுரேஷ், நடிப்பதுபோகக் கிடைக்கும் நேரங்களில் பல்வேறு இயக்குநர்களிடம் தயாரிப்புக்கு கதை கேட்டு வருகிறாராம். .

சூர்யா அவுட்! அதர்வா இன்!

பாலா இயக்கத்தில் "வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, திடீரென்று படத்திலிருந்து விலகியது ரசிகர் களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலா தரப்பும், சூர்யா தரப்பும் சுமுகமாகப் பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம் என அறிக்கை வெளியிட்டாலும், கோலிவுட்டில், பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, படத்தின் கதையில் குளறுபடி என பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

"வணங்கான்' படத்தை விட்டு சூர்யா விலகினாலும், படப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என பாலா தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஹீரோ தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். அதன் படித் தனக்கு நெருக்கமான வட்டாரம் மற்றும் தன் படங் களின் மூலம் பெயர் பெற்ற நடிகர்கள் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாலா, அதர்வாவை "வணங்கான்' படத்தில் நடிக்க வைக்க முடிவு செய் துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதர்வா கரியரில் பாலா இயக்கிய "பரதேசி' படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இந்தப் படத்தில் அதர்வாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத் தக்கது.

யோகபாபு!

அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கியுள்ள "துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் படத்தின் பணிகள் மற்றும் புரமோஷன்களில் படு பிஸியாக இருந்து வருகிறார் எச்.வினோத். மூன்றாவது முறையாக அஜித்-எச்.வினோத் கூட்டணியில் வெளியாகவுள்ளதாலும் விஜய்யின் "வாரிசு' படத்துடன் வெளியாகவுள்ளதாலும் படத்தை வரவேற்க இப்போதிலிருந்தே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

ajith

இதனிடையே, எச்.வினோத் அடுத்தாக யாருடன் இணையவுள்ளார் என்ற கேள்வி உலா வந்த நிலையில் கமல்ஹாசனுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி சத்தமே இல்லாமல் யோகிபாபுவிடம் ஒரு கதையைச் சொல்லி ஓ.கே. வாங்கி வைத்துள்ளாராம் எச்.வினோத். அதனால் எச்.வினோத், அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி விலகி, தற்போது எந்தப் படத்தை அடுத்தாக இயக்குவார் என்ற கேள்வி பரவிவருகிறது. ஆனால் கமலின் படத்தை முடித்த பிறகுதான் யோகி பாபு படத்தை இயக்குவார் என சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. இது குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்தமாத தொடக்கத்திலோ வெளியாக லாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது வேற மாதிரி!

இந்த ஆண்டு "எஃப்.ஐ.ஆர்', "கட்டா குஸ்தி' என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள விஷ்ணுவிஷால் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத் தில் "லால் சலாம்' படத்தில் முதன் மை கதாபாத்திரத்தில் நடிக்க வுள்ளார். இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க விருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து விஷ்ணுவிஷால், இயக்குநர் ராம் குமார் படத்தில் கமிட்டாகியுள்ளாராம். இது தொடர்பாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, இதனை உறுதி செய்த அவர்கள், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவித்த னர். அதோடு, இவர்கள் கூட்டணியில் வெளியான படங்க ளான "முண்டாசுப்பட்டி' காமெடி ஜானரிலும், "ராட்சசன்' சைக்கோ த்ரில்லர் ஜானரிலும் அமைந்ததால் மூன்றாவது முறையாக இணையவுள்ள இப்படத்தில் இதுவரை எடுக்காத ஒரு ஜானரில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூடுதல் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

-கவிதாசன் ஜெ.

nkn101222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe