Advertisment

டூரிங் டாக்கீஸ்! கர்நாடாகாவில் "வாரிசு'க்கு தடை?

cc

கர்நாடாகாவில் "வாரிசு'க்கு தடை?

பான் இந்தியா படமாக தயாராகும் விஜய்யின் "வாரிசு' படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தடைகள் ஏற்பட்டதை பேசி சரிசெய்து மூச்சுவிடுவதற்குள், இப்போது கன்னட சினிமாவுலகிலிருந்து தடை ஏற்படப் போகிறதாம். அது வும் "வாரிசு' பட நாயகி ராஷ்மிகாவால் என்கிறது சினிமா வட்டாரம். விசாரித்ததில், கன்னட சினிமாவில் சமீபத்தில் வெளியான "கிர்க் பார்ட்டி' படத்தைப் பற்றியும், ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றுள்ள "காந்தாரா' படம் பற்றியும் எந்தவொரு கருத்தையும் ராஷ்மிகா பதிவிடவோ, வேறு எங்கேயாவது அதுபற்றி பேசியதையோ கன்னட சினிமா உலகம் கேட்கவில்லையாம். தன்னை அறிமுகப்படுத்திய கன்னட சினிமாவை ராஷ்மிகா மறந்துவிட்டார். அதனால் "கன்னட சினிமாவில் இனிமேல் ராஷ்மிகா நடிக்கக்கூடாது' என்கிற தீர்மானத்தைப் போடப் போகிறார்களாம். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் விஜய்யின் "வாரிசு'க்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்படலாம் என்கிறார்கள் கன்னட

கர்நாடாகாவில் "வாரிசு'க்கு தடை?

பான் இந்தியா படமாக தயாராகும் விஜய்யின் "வாரிசு' படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தடைகள் ஏற்பட்டதை பேசி சரிசெய்து மூச்சுவிடுவதற்குள், இப்போது கன்னட சினிமாவுலகிலிருந்து தடை ஏற்படப் போகிறதாம். அது வும் "வாரிசு' பட நாயகி ராஷ்மிகாவால் என்கிறது சினிமா வட்டாரம். விசாரித்ததில், கன்னட சினிமாவில் சமீபத்தில் வெளியான "கிர்க் பார்ட்டி' படத்தைப் பற்றியும், ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றுள்ள "காந்தாரா' படம் பற்றியும் எந்தவொரு கருத்தையும் ராஷ்மிகா பதிவிடவோ, வேறு எங்கேயாவது அதுபற்றி பேசியதையோ கன்னட சினிமா உலகம் கேட்கவில்லையாம். தன்னை அறிமுகப்படுத்திய கன்னட சினிமாவை ராஷ்மிகா மறந்துவிட்டார். அதனால் "கன்னட சினிமாவில் இனிமேல் ராஷ்மிகா நடிக்கக்கூடாது' என்கிற தீர்மானத்தைப் போடப் போகிறார்களாம். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் விஜய்யின் "வாரிசு'க்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்படலாம் என்கிறார்கள் கன்னட படவுலகைச் சேர்ந்தவர்களே.

Advertisment

cc

மீண்டும் கவுண்டமணி!

தமிழ் சினிமாவில் தனது டைமிங் கவுண்டராலும் நக்கல் கலந்த காமெடியாலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குமேல் கோலோச்சியவர் நடிகர் கவுண்டமணி. பின்பு சினிமாவை விட்டு விலகி யிருந்த கவுண்டமணி, 2015-ல் வெளியான "49-ஓ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து ஓரிரு படங்களில் நடித்த கவுண்ட மணி, சில காரணங்களால் அடுத் தடுத்த படங்களில் நடிக்கவில்லை.

Advertisment

இந்நிலையில் கவுண்டமணி மீண்டும் ஒரு கம்பேக் கொடுக்க வுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரி விக்கின்றன. அதன்படி "பழனிச்சாமி வாத்தியார்' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளார். இப்படத்தை "பேய காணோம்' படத்தை இயக்கிய செல்வ அன்பரசன் இயக்க, மதுரை செல்வம் தயாரிக்கிறார். கவுண்டமணி தனக்கே உரித்தான டைமிங் உடன் பழனிச்சாமி வாத்தியாராக மீண்டும் காமெடி பாடம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லனாகும் ஹீரோ!

"கைதி', 'மாஸ்டர்' விக்ரம், என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம்வரும் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜய்யின் 67-வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில் "தளபதி 67' படத்தை அடுத்து "கைதி 2' படத்தை எடுக்க திட்டமிட்டுள்ள லோகேஷ், அதற்கான வேலைகளையும் தொடங்கியுள்ளாராம்.

"கைதி'யின் சீக்குவலாக வெளி யான "விக்ரம்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் "கைதி 2'வில் இன்னும் பல பிரபலங்களை களமிறக்க முடிவுசெய்த லோகேஷ், ராகவா லாரன்ஸை வில்லனாக நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளாராம். அதற்காக அவரிடம் கதையைக் கூறி க்ரீன் சிக்னலும் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. "கைதி', "விக்ரம்' படங்களை இணைத்து லோகேஷ் யுனிவர்ஸாக உருவாக்கவுள்ள இப்படத்தில் இதுவரை கமல், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் இருந்தநிலையில் தற்போது அந்த லிஸ்டில் லாரன்ஸும் இணைந்துள்ள தாக தெரிகிறது.

cc

பாலிவுட்டில் ஜோ!

ஜோதிகா தனது செகண்ட் இன்னிங்ஸில், "நாச்சியார்', 'ராட் சசி', 'பொன்மகள் வந்தாள்' என தமிழ் மொழியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தவில்லை. அந்த குறையை தீர்க்க மற்றமொழி இயக்குனர்களிடம் கதை கேட்ட ஜோதிகா தற்போது மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக "காதல்' படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் தனது ஆட்டத்தை தொடரவுள்ளாராம். அதன்படி, பார்வையற்ற தொழிலதிபரும் பொல்லன்ட் இன்ஸ்டஸ்ட்ரீஸ் அதிபருமான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை, பாலிவுட்டில் பயோ க்ராஃபியாக உருவாகிறதாம். அந்த படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டம் தீட்டியுள்ளது. ஜோதிகா, தமிழில் அரை சதம் அடித்து தொடர்வதுபோல் மலையாளம் மற்றும் இந்தியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"டாடா'வாக சூர்யா!

"சூரரைப் போற்று' படம் மூலம் 5 தேசிய விருதுகளை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்த சுதா கொங்கரா, தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக்கில் பிசியாக உள்ளார். "சூரரைப் போற்று' வெற்றியால் பல தயாரிப்பாளர்கள் பயோகிராஃபி படங்களை எடுக்கச் சொல்லி சுதாவை நாடுகிறார்களாம். அதனால் மீண்டும் ஒரு பயோகிராஃபி படத்தை எடுக்க முடிவுசெய்துள்ள சுதா, பிரபல தொழிலதிபரான, ரத்தன் டாடாவின் வாழ்க்கையைப் படமாக்க முடிவு செய் துள்ளாராம். இதற்கான ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியுள்ள சுதா, "சூரரைப் போற்று' படத்தில் கேப்டன் கோபிநாத்தாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சூர்யாவையே இந்தக் கதையிலும் நடிக்கவைக்க திட்டமிட்டி ருக்கிறாராம். சூர்யாவும், தனக்கு முதல் முறையாக தேசிய விருது வாங்கி கொடுத்தது சுதா படம் என்பதால், இந்த படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லிவிடுவார் என்கின்றனர் சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

-கவிதாசன் ஜெ.

nkn301122
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe