Advertisment

டூரிங் டாக்கீஸ்! மீண்டும் கமல் Vs வி.சே!

cc

மீண்டும் கமல் Vs வி.சே!

மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கிவரும் "துணிவு' படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரையில் வெளியாகவுள்ளது. அதே சமயம் தனது அடுத்த பட வேலைகளிலும் நேரத்தை ஒதுக்கி கவனம் செலுத்தி வருகிறாராம்.

Advertisment

cc

அதன்படி, அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படமும், கமல்ஹாசனை வைத்து ஒரு படமும் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில்... தற்போது இரண்டு நடிகர்களையும் ஒரே படத்தில் நடிக்கவைக்க எச்.வினோத் திட்டமிட்டுள்ளாராம். இது தொடர்பாக கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது, கமலின் 233-வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், இதில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்கள். ஏற்கனவே "விக்ரம்' படத்தில் இரண்டுபேரும் நடித்துள்ளத

மீண்டும் கமல் Vs வி.சே!

மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கிவரும் "துணிவு' படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரையில் வெளியாகவுள்ளது. அதே சமயம் தனது அடுத்த பட வேலைகளிலும் நேரத்தை ஒதுக்கி கவனம் செலுத்தி வருகிறாராம்.

Advertisment

cc

அதன்படி, அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படமும், கமல்ஹாசனை வைத்து ஒரு படமும் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில்... தற்போது இரண்டு நடிகர்களையும் ஒரே படத்தில் நடிக்கவைக்க எச்.வினோத் திட்டமிட்டுள்ளாராம். இது தொடர்பாக கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது, கமலின் 233-வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், இதில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்கள். ஏற்கனவே "விக்ரம்' படத்தில் இரண்டுபேரும் நடித்துள்ளதால், அந்த சாயல் தனது படத்தில் இல்லாதவாறு திரைக்கதை எழுதி வருகிறாராம் எச்.வினோத். இப்படத்தின் அறிவிப்பு அடுத்த மாத தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வெளியாகலாம் என கூறப்படுகிறது.

திரும்ப வந்துட்டேன்!

முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர்களில் முக்கியமானவர் சசிகுமார். அவர் இயக்கிய "சுப்ரமணியபுரம்' இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து "ஈசன்' படத்தை இயக்கியிருந்தாலும் முதல் படமே அவருக்கு முகவரியாக மாறியுள்ளது.

Advertisment

இந்நிலையில் பிசியாக நடித்துவரும் சசிகுமார், அவரது வண்டியை மீண்டும் இயக்கம் பக்கம் திருப்பியுள்ளார். அதன்படி, வண்டியை திருப்பியதுடன் அதன் வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளார். ஆம்... இப்படத்திற்கான ப்ரீ புரொடக் ஷன்ஸ் பணிகளில் தனது இயக்குநர் டீமுடன் முழு வீச்சில் இறங்கியுள்ளார். ஆனால் அதில் அவர் ஹீரோவாக நடிக்க வில்லை எனவும், புது முகங்கள் நடிக்க இருப்ப தாகவும் தகவல் பகிர்ந் துள்ளார் சசிகுமார். இதனால் மீண்டும் இயக்கத்தில் கம்பேக் கொடுக்கவுள்ள சசிகுமாரின் படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

தக் லைஃப் தமன்னா!

மிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட தமன்னா, தற்போது டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் மற்ற மொழிப் படங்களில் ஆர்வம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. திரைத்துறையில் 15 வருடங்களுக்கு மேலாக பயணித்து வரும் தமன்னா, தனது மார்க்கெட் பீக்கில் இருந்த சமயத்தில் சில நடிகர்களோடு கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் திருமணம் குறித்து எந்த தகவல் பரவினாலும் அமைதியாகவே இருந்தார்.

cc

இந்நிலையில், தமன்னா திருமணம் குறித்த தகவல் சமீப காலமாக அதிகம் பார்க்கமுடிகிறது. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை தமன்னா திருமணம் செய்யவுள்ளதாக அண்மையில் செய்திகள் தீயாய் பரவின. எந்த ஒரு விஷயத்தையும் சாஃப்ட்டாக அணுகும் தமன்னா, இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்து, தக் லைஃப் ரிப்ளை கொடுத்துள்ளார். என்னவென்றால், "ஆம் நான் திருமணம் செய்யவுள்ளேன். இதோ அந்த பிரபல தொழிலதிபர்'' எனச்சொல்லி அவரே ஆண் கெட்டப்பில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, "இது வெறும் வதந்திதான்...' என கலாய்த்துள்ளார். இதெல்லாம் சினிமாத்துறையில் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும், அதனால் நடிப்பில் கவனம் செலுத்து என சீனியர் நடிகைகள் தமன்னாவுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.

5...6...7...8...!

மிழ்த் திரையுலகில் படங்களைத் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களும் அதிகம் வெளியாகி வருகிறது. திரைப்படத்தில் பேச முடியாத, காட்ட முடியாத சில கதைகளை வெப் சீரிஸ்களில் சொல்லலாம். இந்த அட்வான்டேஜ் இருக்கும் காரணத்தால் பல இயக்குநர்கள் தங்கள் கதையை வெப் சீரிஸாக எடுக்கலாம் என முடிவுசெய்து வருகிறார்கள். அந்த வகையில் நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இயக்குநர் பாலாவிடம் உதவியாளராக இருந்த மிருதுளா இயக்கியிருந்த வெப் சீரிஸ் "ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்'. கடந்த 18-ஆம் தேதி பிரபல ஓ.டி.டி. தளத்தில் வெளியான இந்த சீரிஸ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் சினிமா விமர்சகர்களாலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

-கவிதாசன் ஜெ.

nkn231122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe