Advertisment

டூரிங் டாக்கீஸ்! கோலிவுட்டின் ராசாத்தி!

shysha

கோலிவுட்டில் லேட்டஸ்ட்டாக சாயிஷாவுக்குத்தான் மவுசு.

சிம்ரத்தனமாக இடுப்பை நெளித்து சாயிஷா ஆடும் ஆட்டத்துக்கும், வெள்ளாவியில் வெளுத்த மாதிரியான நிறத்துக்கும் இளம் ஹீரோக்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

Advertisment

shayisha

சாயிஷா தன் உடலை ‘"சொன்னபடி கேளு... மக்கர் பண்ணாதே'’என ரப்பரைப்போல் வளைத்து ஆடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவும் செம ஹிட்.

Advertisment

குறிப்பாக "வனமகன்'’படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக சாயிஷா நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறாதபோதும்... சாயிஷாவின் திறமைகளை சக ஹீரோக்களிடம் பரப்பியவர் ஜெயம்ரவி.

கோலிவுட்டில் லேட்டஸ்ட்டாக சாயிஷாவுக்குத்தான் மவுசு.

சிம்ரத்தனமாக இடுப்பை நெளித்து சாயிஷா ஆடும் ஆட்டத்துக்கும், வெள்ளாவியில் வெளுத்த மாதிரியான நிறத்துக்கும் இளம் ஹீரோக்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

Advertisment

shayisha

சாயிஷா தன் உடலை ‘"சொன்னபடி கேளு... மக்கர் பண்ணாதே'’என ரப்பரைப்போல் வளைத்து ஆடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவும் செம ஹிட்.

Advertisment

குறிப்பாக "வனமகன்'’படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக சாயிஷா நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறாதபோதும்... சாயிஷாவின் திறமைகளை சக ஹீரோக்களிடம் பரப்பியவர் ஜெயம்ரவி.

இதன் காரணமாக நடிகர் சங்க கட்டட நிதிக்காக பிரபுதேவா இயக்கத்தில் விஷாலும், கார்த்திக்கும் சம்பளம் வாங்காமல் நடிக்க திட்டமிடப்பட்ட "கறுப்புராஜா வெள்ளைராஜா'’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாயிஷா.

ஆனால் இந்தப் படம் கைவிடப்பட்டது.

ஒரு நடிகையின் முதல்படம் ரொம்பவே சுமாரான ஓட்டம், இரண்டாவது படம் கைவிடப்பட்டது‘ என்றால்... அந்த நடிகையின் ராசியை விமர்சனம் செய்து ஒதுக்கிவிடுவார்கள்.

ஆனால் சாயிஷாவின் முகராசி... அவருக்கு தொடர்ந்து படங்கள் கிடைத்தபடியே இருக்கிறது.

"கறுப்புராஜா வெள்ளைராஜா'வில் இந்த வெள்ளைவெளேர் ரோஜாவுடன் டூயட் பாட முடியாத கார்த்தி... தனது அண்ணன் சூர்யா தயாரிப்பில் "கடைக்குட்டி சிங்கம்'’படத்தில் சாயிஷாவுடன் டூயட் பாடியிருக்கிறார்.

‘கடைக்குட்டியில் இந்த வெள்ளக்கட்டியின் நடிப்பைப் பார்த்த சூர்யா, தனது 37-வது படமான... கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் சாயிஷாவுடன் டூயட் பாடுகிறார்.

ஆர்யா "கஜினிகாந்த்'’படத்தில் சாயிஷாவுடன் டூயட் பாடியிருக்கிறார்.

விஜய்சேதுபதி தனது தயாரிப்பில், தான் நடித்துத் தயாரித்திருக்கும் "ஜூங்கா'’படத்தில் சாயிஷாவுடன் டூயட் பாடியிருக்கிறார்.

பாலிவுட்டின் பழைய சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரான திலீப்குமாரின் பேத்தியான சாயிஷாதான் இனி கோலிவுட்டின் ராசாத்தியாக இருக்கலாம்.

பாலிவுட்டின் ராசாத்தியா?

jansi

விரைவில் வெளியாகவிருக்கிறது "மயிலு'’ ஸ்ரீதேவியின் மூத்த மகளான "சின்ன மயில்'’ஜான்வி நடிகையாக களமிறங்கியிருக்கும் "தடக்'’ படம். (தடக் -இதயத்துடிப்பை குறிப்பது)

எல்லோரும் இதயத்துடிப்பு எகிற காத்திருக்கிறார்கள் ஜான்வியின் நடிப்பைப் பார்க்கவும்... புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவும்.

"சைரத்'’என்கிற மராத்தி மொழிப்படத்தை ஜான்வியுடன் பார்த்த ஸ்ரீதேவி... “"நீ சினிமாவில் இப்படியான கதை கொண்ட ஒரு படத்தில்தான் அறிமுகமாகவேண்டும்'’என ஜான்வியிடம் சொன்னார்.

அம்மா மறைந்தாலும்... அம்மாவின் ஆசையைப் போலவே "சைரத்'’படத்தின் ரீ-மேக்கான ‘"தடக்'தான் முதல்படமாக அமைந்தது மகளுக்கு.

பட வெளியீட்டுக்கான கவுண்ட்-டவுன் தொடங்கிவிட்டது.

இந்தப் படத்தை, சிறப்புக் காட்சியில் பார்த்த சில சினிமா புள்ளிகளிடம் ஜான்வியின் நடிப்பு குறித்து கலவையான விமர்சனங்கள் வந்திருக்கும் நிலையில்...

"விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு... நான் என் அம்மா ஆசைப்பட்ட ஒரு கதை மூலம் நடிகையாகியிருக்கிறேன். அவரின் ஆசி எனக்கு உண்டு'’எனச் சொல்லியுள்ளார் ஜான்வி.

மயிலு பெத்தது மயிலாத்தானே இருக்கும்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn10.07.2018 touringtalkies
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe