Advertisment

டூரிங் டாக்கீஸ்!

ss

டும்... டும்... ஆசையில் தமன்னா!

தமிழில் முன் னனி ஹீரோக்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி யாக நடித்து பிரபலமான தமன்னா, சமீபகாலமாக இந்தி மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் போதிய வாய்ப்பு கிடைக் காததால் மற்ற மொழி படங்களில் ஆர்வம் காட்டிவருவ தாகக் கூறப்படுகிறது. மேலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்தும் நடித்துவருகிறார். திரைத்துறையில் 15 வருடங்களுக்கு மேல் பயணிக்கும் தமன்னா வுக்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

Advertisment

t

இந்நிலையில் தமன்னா, திருமணம் செய்துகொள்ளவும், தாயாக வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து மனம்திறந்த தமன்னா, "எனது நேரத்தை சொந்த வாழ்க்க

டும்... டும்... ஆசையில் தமன்னா!

தமிழில் முன் னனி ஹீரோக்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி யாக நடித்து பிரபலமான தமன்னா, சமீபகாலமாக இந்தி மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் போதிய வாய்ப்பு கிடைக் காததால் மற்ற மொழி படங்களில் ஆர்வம் காட்டிவருவ தாகக் கூறப்படுகிறது. மேலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்தும் நடித்துவருகிறார். திரைத்துறையில் 15 வருடங்களுக்கு மேல் பயணிக்கும் தமன்னா வுக்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

Advertisment

t

இந்நிலையில் தமன்னா, திருமணம் செய்துகொள்ளவும், தாயாக வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து மனம்திறந்த தமன்னா, "எனது நேரத்தை சொந்த வாழ்க்கையில் கூட ஒதுக்கமுடியாத சூழ்நிலையிலும், பெற்றோரிடம் கூட தொலை பேசியில் பேச முடியாத நிலையிலும் இருக் கிறேன். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். அதனால் எனது சந்தோஷம் எல்லாம் படப் பிடிப்புத் தளத்தில் தான் இருக் கிறது. இந்த தொழிலை சிறப்பாக செய்வதற்கு ரசிகர்களின் ஆதரவும் பெற்றோரின் அன்பும்தான் காரணம். அதனால் அவர்களை என்றும் மறக்க மாட்டேன்'' என்கிறார்.

தமிழில் தோனி!

"கேப்டன் கூல்' என்று ரசிகர்களால் அழைக் கப்படும் எம்.எஸ்.தோனி, கிரிக்கெட்டை தாண்டி "தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் "ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப் படத்தை தயாரித்தது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மட்டுமில்லாமல் "ப்ளேஸ் டு க்ளோரி' (இப்ஹக்ஷ்ங் ற்ர் ஏப்ர்ழ்ஹ்) என்ற ஆவணப்படத்தையும் "தி ஹிடன் இந்து' (பட்ங் ஐண்க்க்ங்ய் ஐண்ய்க்ன்) என்ற புராணத்தை அடிப்டையாகக் கொண்ட ஒரு திரில்லர் படத்தையும் விரைவில் வெளியிடவுள்ளது.

தோனி தனது நிறுவனம் சார்பாக தமிழில் முதல் திரைப்படத்தை தயா ரிக்கவுள்ளராம். இப்படத்தை சாக்ஷியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாக்கத் திட்டமிட்டுள் ளார்களாம். மேலும் "அதர்வா -தி ஆர்ஜின்'’ எனும் கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்குகிறா ராம். இப்படத்திற்காக தமிழில் முன்னணி ஹீரோக் களுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறா ராம் தோனி. முன்னதாக தமிழில் டாப் ஹீரோவாக வலம்வரும் விஜய்யை வைத்து தோனி படம் தயா ரிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தனுஷுடன் கன்னட ஹீரோ!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சந்தீப் கிஷான், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட் டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது.

கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் நடிக்கிறாராம். முன்னதாக இயக்குநர் அருண்மாதேஸ்வரன், சிவராஜ்குமாரை சந்தித்து கதை கூறியுள்ளாராம். அருண் கதை கூறிய விதம் சிவராஜ்குமாருக்கு மிகவும் பிடித்துப்போனதாம். அதனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிராமிய காம்போ!

80களில் "எங்க ஊரு காவல்காரன்', "கரகாட்டக்காரன்', "தங்க மான ராசா' என பல ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ராம ராஜன், தற்போது "சாமானியன்' படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப் படத்தின் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Advertisment

tt

இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜாவை கமிட் செய்துள்ள தாம் படக்குழு. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதால் இளையராஜாவை கமிட் செய்தால் படத்தின் பாடல்கள் ஹிட்டடிக்கும் என ராமராஜனுக்கு, அவரது நெருங்கிய வட்டாரங் கள் பரிந்துரைத்துள்ளார்களாம். அதனால் இளைய ராஜாவை நாடியுள்ளாராம் ராமராஜன். ராமராஜனுடன் இருக்கும் நட்பின் காரணமாக இளையராஜாவும் க்ரீன் சிக்னல் தந்துள்ளாராம். ஏற்கனவே இவர்கள் காம்போ வில் வெளியான பல பாடல்கள் ஹிட்டடித்த நிலையில்... இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கவிதாசன் ஜெ.

nkn291022
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe