Advertisment

டூரிங் டாக்கீஸ்! அப்செட் அமலாபால்!

ss

ணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ளது "பொன்னியின் செல்வன்'. இரு பாகங்களாக இப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையே, படத்திற்கான புரமோஷனும் தீவிரமாக உள்ளது.

Advertisment

cc

ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களை அழைத்து ஆடியோ லாஞ்ச் நடத்திய லைகா அண்ட் மணிரத்னம் டீம், முதல் வார வசூலாக பெருந்தொகையை எதிர்பார்த்துள்ளதாம். ஆடியோ லான்ஞ்சில் பேசிய ரஜினி, "இந்தப் படத்தில் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க, தான் விரும்பிய தாகவும்... ஆனால்

ணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ளது "பொன்னியின் செல்வன்'. இரு பாகங்களாக இப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையே, படத்திற்கான புரமோஷனும் தீவிரமாக உள்ளது.

Advertisment

cc

ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களை அழைத்து ஆடியோ லாஞ்ச் நடத்திய லைகா அண்ட் மணிரத்னம் டீம், முதல் வார வசூலாக பெருந்தொகையை எதிர்பார்த்துள்ளதாம். ஆடியோ லான்ஞ்சில் பேசிய ரஜினி, "இந்தப் படத்தில் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க, தான் விரும்பிய தாகவும்... ஆனால் மணிரத்னம் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். ரஜினி மட்டுமல்ல, பல நடிகர்களுக்கு இதுபோன்ற ஆதங்கம் உள்ளதாம். அதில் அமலாபாலும் ஒருவர். "பொன்னியின் செல்வன்' படத்திற்காக ஆடிஷன் கூட அமலாபால் போயிருக்கிறார். ஆனால், அந்த நேரத் தில் படம் தொடங்கவில்லை. பின்னர், 2021-ஆம் ஆண்டு மீண்டும் அமலாபாலுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அந்த நேரத்தில் நடிக்கும் மனநிலையில் இல்லை என்று கூறி அந்த வாய்ப்பை அமலாபால் நிராகரித்துவிட்டாராம். இதனால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்கிறார் அமலாபால். அதெப்படி வருத்தமில்லாமல் போகும்?

cc

Advertisment

வெப் சீரிஸ் என்ட்ரி!

டோலிவுட் மூலம் திரைத்துறையில் என்ட்ரியான இலியானா, "நண்பன்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிட்சயமானவர். அதன்பிறகு, பாலிவுட்டில் கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்பு கள் மூலம் முன்னணி நடிகை அந்தஸ்திற்கு உயர்ந்தார். சமீபகால இளம் நாயகிகளின் வரவால், தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். அதனால் வெப் சீரிஸ் பக்கம் தன்னுடைய வண்டியைத் திருப்பியிருக்கிறாராம் இலியானா. முன்னணி கதாபாத்திரத்தில் இலியானா நடிக்கவிருக்கும் இந்த சீரிஸை "தி ஃபேம் கேம்'’ சீரிஸை இயக்கிய கரிஷ்மா கோஹ்லி இயக்கவுள்ளாராம். நடிகர் கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் இந்தத் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

விஜய்க்காக வெயிட்டிங்!

தமிழ், மலையாளம், தெலுங்கு என இதுவரை 95 படங்களை தயாரித்துவிட்ட சூப்பர் குட் பிலிம், அந்த நிறுவனத்தின் 100-ஆவது படத்தில் விஜய்யை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறதாம். விஜய்யின் குட்புக்கில் இருக்கும் தயாரிப்பாளர்களில் ஆர்.பி.சௌத்ரியும் ஒருவர். "பூவே உனக்காக', "லவ் டுடே' என விஜய்யின் ஆரம்பகால படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸின் 85-ஆவது படமான "ஜில்லா'விலும் விஜய்தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த நிலையில், 100-ஆவது படத்திற்காகவும் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டுள்ளதாம் சூப்பர் குட் பிலிம்ஸ்.

டைரக்ஷனுக்கு திரும்பம் சிம்பு!

நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் சிம்பு. சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவான மூன்றாவது படமான "வெந்து தணிந்தது காடு' அண்மையில் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து யாருடன் சிம்பு கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம், மிஷ்கின், கோகுல், சுதா கொங்கரா என சிம்புவிடம் கதை சொன்ன இயக்குநர்களின் பட்டியல் நீள்கிறது. இதில் யாரை சிம்பு டிக் செய்வார் என்ற கேள்வியெழுந் துள்ள நிலையில்... ஒரு படத்தை இயக்கும் திட்டத்தில் சிம்பு உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சிம்புவே கதாநாயகனாக நடிக்கவும் உள்ளாராம். ஏற்கனவே "வல்லவன்' படத்தை இதேபோல சிம்பு இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் சிம்புவின் அடுத்த படமாக இருக்குமா அல்லது ஓரிரு படங்கள் நடித்துவிட்டு இந்தப் படத்தை இயக்குவாரா என்பது விரைவில் தெரியவரும்

-இரா.சிவா

nkn170922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe