Advertisment

டூரிங் டாக்கீஸ்!

66

கசமுசா இல்ல... காமெடிதான்!

கோலிவுட்டின் செல்ல சுந்தரி ஐஸ்வர்யா ராஜேஷ் "சொப்பன சுந்தரி' படத்தில் நடிப்பதை நினைத்து ரசிகர்கள் வேறுமாதிரி நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்தப் படத்தின் ஐஸ்வர்யா முதன்முறையாக காமெடி வேடத்தில் நடிக்கவிருக் கிறார். "டார்க் காமெடி' ஜானரில் உருவாகும் இப்படத்தை, "லாக்கப்' படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். தற்போது தான் நடித்துவரும் "டிரைவர் ஜமுனா' படம் முடிந்த பிறகு, இந்தப் படத்திற்கான கால்ஷீட்டைக் கொடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா.

Advertisment

cc

ரஜினி Vs அரவிந்த்சாமி!

"அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர்' படத்தில் நடித்துவருகிறார். இது நடிகர் ரஜினியின் 169லிஆவது படமாகும். ரஜினிக்கு கதை சொல்லி கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியச

கசமுசா இல்ல... காமெடிதான்!

கோலிவுட்டின் செல்ல சுந்தரி ஐஸ்வர்யா ராஜேஷ் "சொப்பன சுந்தரி' படத்தில் நடிப்பதை நினைத்து ரசிகர்கள் வேறுமாதிரி நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்தப் படத்தின் ஐஸ்வர்யா முதன்முறையாக காமெடி வேடத்தில் நடிக்கவிருக் கிறார். "டார்க் காமெடி' ஜானரில் உருவாகும் இப்படத்தை, "லாக்கப்' படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். தற்போது தான் நடித்துவரும் "டிரைவர் ஜமுனா' படம் முடிந்த பிறகு, இந்தப் படத்திற்கான கால்ஷீட்டைக் கொடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா.

Advertisment

cc

ரஜினி Vs அரவிந்த்சாமி!

"அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர்' படத்தில் நடித்துவருகிறார். இது நடிகர் ரஜினியின் 169லிஆவது படமாகும். ரஜினிக்கு கதை சொல்லி கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி, கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலர் காத்திருப்பதால், அடுத்த படத்தில் யாருடன் ரஜினி இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இவர்களை ஓவர்டேக் செய்திருக்கிறார் "டான்'’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. இதற்கு காய் நகர்த்தியது லைகா நிறுவனமாம். சிபி இயக்கிய "டான்' வசூல் ரீதியாக பெருந்தொகையை கல்லா கட்டியது. இதையடுத்து, அடுத்த படத்திற்காக சிபியை புக் செய்திருந்தது லைகா. ரஜினி -லைகா -சிபி கூட்டணி, தற்போது இணையவுள்ளதாம். இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க வாய்ப்பிருக்கிறது.

சம்பளத்தில் கட்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் வெளியான "லைகர்' படம் அட்டர் ப்ளாப். சுமார் 125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், வெறும் 55 கோடி மட்டுமே கலெக்ட் செய்துள்ளதாம். இந்தத் தோல்வி பூரி ஜெகன் னாத் -விஜய் தேவரகொண்டா கூட்டணியில் உருவாக இருந்த அடுத்த படத்தையும் பாதித் துள்ளது. பூரி ஜெகன்னாத் -விஜய் தேவர கொண்டா கூட்டணியில் "ஜனகணமன'’ என்ற படம் உருவாக இருந்தது. இந்தப் படத்தை ‘"லைகர்'’ படத்தில் முதலீடு செய்திருந்த மை ஹோம் குரூப் நிறுவனம் தயாரிக்க இருந்தது. "லைகர்' ரிசல்ட்டால் அந்த நிறுவனம் பின்வாங்கிவிட்டதாம். இதற்கிடையே, "லைகர்' படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் கணிசமான தொகையை தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுக்க விஜய் தேவரகொண்டா முடிவெடுத்துள்ளாராம்.

அனுபமாவின் ஆசை!

ss

Advertisment

அகமத் இயக்கத்தில் ஒரு படம், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம், ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஒரு படம் என படுபிஸியாக இருக்கிறார் ஜெயம் ரவி. இதில், ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் "சைரன்' படம் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட். படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா என இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாக படக்குழு அண்மை யில் அறிவித்திருந்தது. படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு போலீஸ் வேடமாம். "கொடி', "தள்ளிப்போகாதே' என சில தமிழ்ப் படங்களில் அனுபமா நடித்திருந்தாலும் டோலிவுட் டில் கிடைத்த இடம் இன்னும் அவருக்கு கோலிவுட்டில் கிடைக்கவில்லை. கோலிவுட்டிலும் வலம்வர வேண்டும் என்பதுதான் அவரது தற்போதைய இலக்காம்.

"தல' புது அறிவிப்பு!

எச்.வினோத் -போனி கபூர் கூட்டணியில் மூன்று படங்கள் முடித்த கையோடு விக்னேஷ் சிவன் -லைகா கூட்டணியில் இணையவுள்ளார் அஜித். அதன் பிறகு, மீண்டும் "சிறுத்தை' சிவா பக்கமே அஜித் வண்டியை திருப்பியிருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பிருக்கிறதாம். இந்தத் தகவல் வெளியானது முதல் மகிழ்ச்சியில் உள்ளனர் "தல' ரசிகர்கள்.

டைட் பண்ணும் டோலிவுட்!

டோலிவுட்டிற்கு புத்தொளி பாய்ச்சுவது போல சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறது அங்கிருக்கும் தயாரிப்பாளர் சங்கம். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளத்தை குறைப்பது, ஓ.டி.டி. ரிலீஸுக்கான கட்டுப்பாடுகள் உட்பட பல புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளனவாம். குறிப்பாக, நடிகர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் சம்பளத்தை இனி தயாரிப்பாளர்கள் வழங்கக்கூடாது என்ற முக்கிய முடிவையும் எடுத்துள்ளார்கள். சில நடிகர், நடிகைகள் பல உதவியாளர்களை அழைத்து வருவதால் அவர்களுக்கான செலவே நாள் ஒன்றுக்கு பல லட்சங்களைத் தாண்டுகிறதாம். டோலிவுட் தயாரிப்பாளர்களின் இந்த முடிவு அங்கிருக்கும் நடிகர்களுக்கு மட்டுமின்றி டோலி வுட் தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுத்துக் கொண்டிருக்கும் நம்மூர் நடிகர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளதாம். இந்தப் புதிய விதி களை கோலிவுட் தயாரிப்பாளர்களும் பரிசீலிக்கும் முடிவில் உள்ளனராம்.

-இரா.சிவா

nkn100922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe