Advertisment

டூரிங் டாக்கீஸ்! மீண்டும்!

ss

மீண்டும்!

cc

Advertisment

ங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் "இந்தியன் 2'’ படப்பிடிப்பு, 2019-ல் ஆரம்பித்து, பல்வேறு காரணங்களால் இடையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில்... கடந்த 25-ம் தேதி முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. கமல், அமெரிக்காவில் இருப்பதால் அவர் இல்லாத மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். தற்போது ரகுல் பிரீத்சிங்கும் "இந்தியன் 2'-ல்’ இணைய... அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

நெக்ஸ்ட்!

cc

நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு ஒருவழியாக "கோப்ரா' ரிலீஸான திருப்தியில் இருக்கும் விக்ரம், பா.ரஞ்சித் படத்திற்காக தயாராகிவருகிறார். அவரின் 61

மீண்டும்!

cc

Advertisment

ங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் "இந்தியன் 2'’ படப்பிடிப்பு, 2019-ல் ஆரம்பித்து, பல்வேறு காரணங்களால் இடையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில்... கடந்த 25-ம் தேதி முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. கமல், அமெரிக்காவில் இருப்பதால் அவர் இல்லாத மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். தற்போது ரகுல் பிரீத்சிங்கும் "இந்தியன் 2'-ல்’ இணைய... அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

நெக்ஸ்ட்!

cc

நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு ஒருவழியாக "கோப்ரா' ரிலீஸான திருப்தியில் இருக்கும் விக்ரம், பா.ரஞ்சித் படத்திற்காக தயாராகிவருகிறார். அவரின் 61-ஆவது படமாக கே.ஜி.எஃப் பேக்ட்ராப்பில் பிரம்மாண்ட படமாக உருவாகவுள்ளது. இதன் பிறகு "கோப்ரா' இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணவிருக்கிறாராம் விக்ரம். "கோப்ரா' படத்தின்போதே இருவருக்கும் இடையே சில மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் மீண்டும் ஒரு படத்திற்காக இந்தக் கூட்டணி இணைய வுள்ளதாம். அந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இந்நிலையில், பிரபல கன்னட இயக்குநர் பவன் குமாரிடம் விக்ரம் கதை கேட்டிருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. பவன்குமார் இயக்கிய "லூசியா', "யூ டர்ன்' படங்கள் கன்னடத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தவை. இந்த இரு படங்களும் தமிழில் "எனக்குள் ஒருவன்', "யூ டர்ன்' என ரீமேக் செய்யப்பட்டுள்ளன. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரை வைத்து "த்வித்வா' என்ற படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் பவன் ஈடு பட்டிருந்த நிலையில், புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். அதன் பிறகு, அந்தக் கதையை பவன் கிடப்பில் போட்டி ருந்தார். தற்போது அது விக்ரமிடம் சொல்லப் பட்டதாகவும், அந்தக் கதையாகக்கூட இருக்கலாம் என்றும் சொல்கிறது கோலிவுட் வட்டாரம்.

பலப்பரீட்சை!

Advertisment

dd

எச்.வினோத் -போனிகபூர் -அஜித் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமான ’"ஏ.கே. 61'-’ன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. படத்தின் டைட்டில் தொடங்கி நடிகர்கள் விவரம் வரை எதையும் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தப் படத்தை முடித்துவிட்டு விக்னேஷ்சிவன் இயக்கத்தில் லைகாவுடன் இணைய வுள்ளார் அஜித். இதுவரையில்லாத அளவு பெருந்தொகையை இந்தப் படத்திற்காக சம்பளமாக வாங்கியுள்ளாராம். படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க வாய்ப்புள்ளதாம். அண்மையில் விக்னேஷ்சிவன் -ஐஸ்வர்யாராயை சந்தித்து, இது தொடர்பாக டிஸ்கஸ் செய் திருக்கிறார். பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பெற்றால் அஜித்திற்கு ஜோடியாவார் ஐஸ்வர்யா ராய். அஜித்தைப் பற்றிய மற்றொரு செய்தி... அஜித்தின் ’ஏ.கே.61-ம், விஜய்யின் "வாரிசு'ம் பொங்கல் வெளி யீடாக ஒரே தினத்தில் களத்தில் குதிக்க வாய்ப்பிருப்பதாக கோலிவுட்டின் பிஸினஸ் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. கடைசியாக விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் ஒரே தினத்தில் வெளியாகின. அதன் பிறகு, ஒரேதின ரிலீஸை இருவரும் தவிர்த்துவந்த நிலையில்... தற்போது இந்தப் பேச்சு அடிபடுகிறது.

பாடம்!

cc

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் வெளியான "லைகர்' படம் அட்டர் ப்ளாப். மைக் டைசன், விஜய் தேவரகொண்டாவின் சிக்ஸ்பேக் பிசிக் என பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியானது. முதல் காட்சி முடிவிலேயே ரசிகர்கள் கதிகலங்கி வெளியேவர... அன்று இரவே பல தியேட்டர்கள் காற்றுவாங்க ஆரம்பித்தன. முன்னதாக, பட புரோமோஷனின்போது படங்களை புறக்கணிக்க கோரும் சமீபத்திய ட்ரெண்டிங் குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, "என்னுடைய உழைப்பின் மீது நம்பிக்கை உள்ளது. யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்' எனக் கூறியிருந்தார். "இந்த திமிர் பேச்சுதான் படத்தின் தோல்விக்கு காரணம்' என மும்பை திரையரங்க உரிமையாளர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவை கடுமையாகச் சாடினார். இதையடுத்து, அவரை நேரில் சந்தித்து விளக்கமளித்த விஜய் தேவரகொண்டா, அவர் காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கிக்கொண்டார். "கவனமாக பேசவில்லை என்றால் அமீர்கான், அக்ஷய் குமார் நிலைதான் விஜய் தேவரகொண் டாவுக்கும்' என்கிறார்கள் சோசியல் மீடியா தட்பவெட்பம் அறிந்த வர்கள்.

-இரா.சிவா

nkn030922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe