Advertisment
cc

ஹ்யூமா குரேஷியின் "டபுள் எக்ஸல்!'

cc

Advertisment

ரஜினியுடன் "காலா', அஜித் துடன் "வலிமை' படங்களில் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி பாலிவுட்டில் "டபுள் எக்ஸல்' படத்தை தனது கனவுப் படமாக கூறியுள்ளார். உருவக் கேலி, உடல் எடையை முன்வைத்து உருவாகியுள்ள இப்படம் குறித்து பேசிய ஹூமா குரேஷி, "பெண்களாகிய நாங்கள், ஒவ் வொருநாளும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறோம். உருவக் கேலி என்பது அனைத்து பெண்களுக்கும் பொதுவானதாக மாறிவிட்டது. உருவக் கேலி நமக்குள் ஆழமாகப் பதிந்து விட்டது. உருவக் கேலி என்பது ஒரு வரின் நம்பிக்கையை முழுமையாக சிதைத்துவிடுகிறது. இந்தப் பிரச் சினையை மையப்படுத்திய திரைப் படத்தில் நடித்ததில் எனக்கு திருப்தி யாக உள்ளது'' என்றவர், இந்தப் படத்திற்காக உடல் எடையை கூட்டி யுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ட்வீட்டால் டேமேஜ் ஆன ஹ்ருத்திக்!

ff

ஹ்யூமா குரேஷியின் "டபுள் எக்ஸல்!'

cc

Advertisment

ரஜினியுடன் "காலா', அஜித் துடன் "வலிமை' படங்களில் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி பாலிவுட்டில் "டபுள் எக்ஸல்' படத்தை தனது கனவுப் படமாக கூறியுள்ளார். உருவக் கேலி, உடல் எடையை முன்வைத்து உருவாகியுள்ள இப்படம் குறித்து பேசிய ஹூமா குரேஷி, "பெண்களாகிய நாங்கள், ஒவ் வொருநாளும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறோம். உருவக் கேலி என்பது அனைத்து பெண்களுக்கும் பொதுவானதாக மாறிவிட்டது. உருவக் கேலி நமக்குள் ஆழமாகப் பதிந்து விட்டது. உருவக் கேலி என்பது ஒரு வரின் நம்பிக்கையை முழுமையாக சிதைத்துவிடுகிறது. இந்தப் பிரச் சினையை மையப்படுத்திய திரைப் படத்தில் நடித்ததில் எனக்கு திருப்தி யாக உள்ளது'' என்றவர், இந்தப் படத்திற்காக உடல் எடையை கூட்டி யுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ட்வீட்டால் டேமேஜ் ஆன ஹ்ருத்திக்!

ff

அமீர்கான், நாகசைதன்யா, கரினாகபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான "லால் சிங் சத்தா', பாக்ஸ் ஆபீஸில் அட்டர் ப்ளாப். உலகம் முழுவதும் பல அவார்டுகளை அள்ளிய "ஃபாரஸ்ட் கம்ப்' என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்கான இப்படம், ஓ.கே. ரகமாக இருந்தாலும், அமீர்கானின் முந்தைய பேட்டி மற்றும் அதையொட்டிய சர்ச்சை காரணமாக ஓரணியில் திரண்டு படத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர் பாலிவுட் ரசிகர்கள். 180 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட "லால் சிங் சத்தா' இதுவரை 45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். "படத்தை புறக்கணிக்க வேண்டாம்' என அமிர்கான், கரினாகபூர் ஆகியோர் கேட்டுக்கொண்ட போதிலும் பாதி தியேட்டர்கள் காற்று வாங்குகிறது. இந்தச் சூழலில், ஹ்ருத்திக் ரோஷன் போட்ட ஒரு ட்விட்டால் அமீர்கானின் கழுத்தை குறிவைத்த அம்பு, தற்போது ஹ்ருத்திக் பக்கம் திரும்பியிருக்கிறது. "லால் சிங் சத்தா சிறப்பாக இருக்கிறது, அனைவரும் திரையரங் கில் தவறாமல் பாருங்கள்' என ஹ்ருத்திக் ரோஷன் ஒரு ட்வீட் போட... கடுப்பான "லால் சிங் சத்தா' எதிர்ப்பாளர் கள், "விரைவில் வெளியாகவுள்ள ஹ்ருத்திக்கின் "விக்ரம் வேதா' படத்தை புறக்கணிக்க வேண்டும்' என ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

விஜய்யோடு மோதும் கௌதம் மேனன்!

Advertisment

dd

கடன் பிரச்சினை மற்றும் ஃபார்ம் அவுட்டால் தடுமாறி வந்த கௌதம் மேனனுக்கு ஐசரி கணேஷின் நிறுவனத் தின் மூலமான என்ட்ரி, சுக்கிர பார்வையாக அமைந்தது. வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸில் அடுத் தடுத்து மூன்று படங்கள் கமிட்டான கௌதம் மேனன், கடன் பிரச்சனையில் இருந்து மீண்டதோடு, முழு உற்சாகமாக இயங்க ஆரம்பித்தார். அதுபோக, நடிப்பதற்கு வந்த வாய்ப்புகளையும் கச்சிதமாகப் பயன்படுத் திக்கொண்டார். சம்பள விஷயத்தையும் கோடிகளில்தான் டீல் செய்கிறாராம். லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட் டணியில் அடுத்ததாக உருவாகும் படத்தில் ஆறு வில்லன்கள் நடிக்க இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதில் ஒரு வில்லனாக கௌதம் மேனன் நடிக்க வாய்ப் பிருக்கிறதாம். கிடைக்கும் பட்சத்தில் விஜய்க்கு வில்லனாவார் கௌதம் மேனன்.

மதுவுக்கு 'NO' சொன்ன சிம்பு!

சிம்பு குறித்து ஒரு லேட்டஸ்ட் தகவலொன்று கிடைத்துள்ளது. பிரபல மதுபான நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க சிம்புவை அணுகி, பெரிய தொகையை சம்பளமாக பேசியிருக்கிறது. மதுபானங்களை ஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடிக்க விரும்பாத சிம்பு, சற்றும் தாமதிக்காமல் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். சிம்புவின் இந்தச் செயலால் நெகிழும் அவரது ரசிகர்கள், "ஆன்லைன் ரம்மி, பான்மசாலா விளம் பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் சிம்புவை பார்த்து திருந்த வேண்டும்' என்கின்றனர்.

பிரபாஸ் ரசிகர்கள் கவனத்திற்கு!

கே.ஜி.எஃப். படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல் மீதும் ஹோம்பாலே நிறுவனத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தக் கூட்டணியில் பிரபாஸ் நடிப்பில் "சலார்' படம் உருவாகிவருகிறது. கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தோடு சேர்ந்து "சலார்' வேலைகளையும் பிரசாந்த் நீல் கவனித்துவந்த நிலையில், கே.ஜி.எஃப்.2-வுக்கு பிறகு "சலார்' வேலைகள் வேகமெடுத்துள்ளன. இந்த நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி உலகம் முழு வதும் "சலார்' வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித் திருக்கிறது. பட அப்டேட் கொடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை கடிதம் எழுதியும் எந்த அப்டேட்டையும் வெளி யிடாமல் மௌனம் காத்துவந்த படக்குழு, ஒருவழியாக தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது.

-இரா.சிவா

nkn200822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe