Advertisment
ss

விக்ரம் வேதாவுடன் வேதாளம்!

cc

"வலிமை' படத்தைத் தொடர்ந்து ’"ஏ.கே. 61'’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் அஜித். இடையே நேரம் கிடைத்தால் ஃபாரின் ட்ரிப்பும் அடிக்கிறார். அஜித்திற்கு பைக்கில் வேர்ல்ட் டூர் போகும் ஆசை உள்ளதாம். அதற்கான ஒத்திகையாகத்தான் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கிருக்கும் பைக்கர்களோடு ஆலோசிக்கிறாராம். சரி விஷயத்துக்கு வருவோம். எச்.வினோத் படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவனுடன் அஜித் இணைய இருப்பதும், அஜித்தின் 62-ஆவது படமாக உருவாக வுள்ள இந்தப் படத்தை லைகா தயாரிக்கவுள்ளதும் அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்திற்கு பிறகு யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளார் அஜித்? அடுத்த படத்திற்காக "விக்ரம் வேதா' இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரியை டிக் செய்திருக்கிறாராம் அஜித். "விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை முடித்துவிட்டு அஜித் படத்திற்கான வேலைகளை புஷ்கர்-காயத்ரி தொடங

விக்ரம் வேதாவுடன் வேதாளம்!

cc

"வலிமை' படத்தைத் தொடர்ந்து ’"ஏ.கே. 61'’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் அஜித். இடையே நேரம் கிடைத்தால் ஃபாரின் ட்ரிப்பும் அடிக்கிறார். அஜித்திற்கு பைக்கில் வேர்ல்ட் டூர் போகும் ஆசை உள்ளதாம். அதற்கான ஒத்திகையாகத்தான் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கிருக்கும் பைக்கர்களோடு ஆலோசிக்கிறாராம். சரி விஷயத்துக்கு வருவோம். எச்.வினோத் படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவனுடன் அஜித் இணைய இருப்பதும், அஜித்தின் 62-ஆவது படமாக உருவாக வுள்ள இந்தப் படத்தை லைகா தயாரிக்கவுள்ளதும் அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்திற்கு பிறகு யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளார் அஜித்? அடுத்த படத்திற்காக "விக்ரம் வேதா' இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரியை டிக் செய்திருக்கிறாராம் அஜித். "விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை முடித்துவிட்டு அஜித் படத்திற்கான வேலைகளை புஷ்கர்-காயத்ரி தொடங்க உள்ளனராம்.

Advertisment

"பண்ட்'-ஐ மூட் "அவுட்டாக்கிய' ஊர்வசி!

cc

"தி லெஜண்ட்'’ படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான ஊர்வசி ராவ்டேலா பாலிவுட்டில் ரொம்பவும் பிரபலம். இவர் நடிகை மட்டுமல்ல, மாடலும்கூட. அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டியால் பாலிவுட் வட்டாரமும் கிரிக்கெட் வட்டாரமும் சலசலப்பாகியுள்ளது. தனக்கு வந்த லவ் ப்ரோபசல் குறித்து பேசிய ஊர்வசி ராவ்டேலா, தன்னைச் சந்திப்பதற் காக ஆர்.பி. டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்து 10 மணி நேரம் காத்திருந்ததாகவும், வேலைப்பளு காரணமாக அவரைச் சந்திக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். பின், மும்பை வரும்போது சந்திக்கலாம் என்று கூறி சில காலம் கழித்து இருவரும் மும்பையில் சந்தித்ததாகக் கூறினார். அந்த நபரின் முழுப்பெயரைக் குறிப்பிடாமல் மிஸ்டர் ஆர்.பி. என்று ஊர்வசி ராவ்டேலா கூறியதுதான் தற்போதைய சலசலப்புக்கு காரணம். ஊர்வசி ராவ்டேலாவும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டும் சில காலம் டேட் செய்ததாக ஏற்கனவே ஒரு பேச்சு உண்டு. அதனால் பேட்டியில் ஊர்வசி, ஆர்.பி. என்று குறிப்பிட்டதும் நெட்டிசன்கள் ரிஷப் பண்டை கிண்டல் செய்து மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். அதில் கடுப்பான ரிஷப் பண்ட் "விளம்பரத்திற்காகவும் தலைப் புச் செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பதற் காக பொய் சொல்வதைப் பார்க்க வேடிக்கையாக உள்ளது. என்னைத் தனியாக விடுங்கள் சகோதரி, பொய்களுக்கும் அளவு உள்ளது'’எனத் தன்னு டைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். பின், சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை அவர் நீக்கி விட்டார். ரிஷப் பண்ட் தன்னுடய பதிவில் சகோதரி என்று குறிப்பிட்ட நிலையில், பதிலுக்கு "சின்னப் பையா உன் பெயரை நான் கெடுக்க விரும்பவில்லை' என ரக்ஷாபந்தன் வாழ்த்தோடு ஊர்வசி ராவ் டேலாவும் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்.

Advertisment

ராஜ்கமல் தயாரிப்பில் உதயநிதி!

"விக்ரம்' வெற்றிக் குப் பிறகு பரபரப்பு மோடி லேயே இருக்கும் ராஜ்கமல் நிறுவனம், அடுத்தடுத்து இளம் ஹீரோக்களை புக் செய்து படத் தயாரிப் பில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறது. சிவகார்த்திகேயன், சிம்புவிடம் கால்ஷீட் வாங்கியுள்ள ராஜ்கமல், விஜய்யின் கால்ஷீட்டை வாங்கும் முயற்சியிலும் உள்ளதாம். இதற்கிடையே, ரெட் ஜெயன்ட்டின் 15ஆவது நிறைவு விழா மேடையிலேயே, உதயநிதி ஸ்டாலின், ராஜ்கமல் தயாரிப்பில் ஒரு படம் பண்ண இருப்பதாக கமல் அறிவித்தார். தற்போது அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ளதாம். "கிடாரி' படத்தை இயக்கிய பிரசாந்த் முருகேசன்தான் அந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.

வருத்தத்தல் வணங்கான்!

சினிமா எடுப்பதில் ஒவ்வொருக்கும் ஒரு பாணி உண்டு. ஒரு படத்தை வருடக்கணக்கில் எடுப்பதுதான் இயக்குநர் பாலா பாணி. அண்மைக்காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த பாலாவை அழைத்து கால்ஷீட் கொடுத்த சூர்யா, அவரது இயக்கத்தில் "வணங்கான்' படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஒரு ஷெட்யூல் முடிந்த நிலையில், சின்ன பிரேக்விட்டது படக்குழு. விரைவில் அடுத்த ஷெட்யூல் தொடங்கும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அது இன்னும் சில மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கதை விஷயத்தில் இயக்குநர் பாலாவிற்கே இன்னும் தெளிவில்லாத நிலை உள்ளதாம். அதனால் சில கதாசிரியர்களோடு விவா தித்து கதையை மேம் படுத்திவருகிறாராம். இத னால் அப்செட்டில் இருக் கும் சூர்யா, சிறுத்தை சிவா படத்தை முடித்து விட்டு "வணங்கான்' படத் திற்கு வரலாமா என்ற யோசனையில் இருக்கிறா ராம். மாறுவார்னு எதிர் பார்க்கப்பட்ட பாலா கொஞ்சமும் மாறவில்லை என்று முணுமுணுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

-இரா.சிவா

nkn170822
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe