ஜூனியர் என்.டி.ஆருடன் ஜூனியர் ஸ்ரீதேவி!
பாலிவுட்டைத் தொடர்ந்து மற்ற மொழிப் படங்களில் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்டபோதெல்லாம் "மணந்தால் மகாதேவி... இல்லையேல் மரணதேவி' என பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில்... "அறிமுகமானால் விஜய் தேவரகொண் டாவுடன்தான்; இல்லையேல் வரமாட்டேன்' என்று சொல்லிக்கொண்டு திரிந்தார் ஸ்ரீதேவியின் புத்திரி ஜான்வி கபூர். என்ன நடந்ததோ... ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடிக்கவிருந்த அலியாபட், கர்ப்பமானதன் காரணமாக விலகிக் கொள்ள... ஜான்வி ஒப்பந்தமாகியிருக் கிறார். காரணம், விஜய் தேவரகொண்டா வின் அடுத்தபடத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்திருந்த வேளையில்... விஜய்யோ, சாரா அலிகான் பக்கம் தன் கவனத்தைத் திருப்ப... "ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்'' என்கிற கதையாக ஜூனியர் என்.டி.ஆ
ஜூனியர் என்.டி.ஆருடன் ஜூனியர் ஸ்ரீதேவி!
பாலிவுட்டைத் தொடர்ந்து மற்ற மொழிப் படங்களில் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்டபோதெல்லாம் "மணந்தால் மகாதேவி... இல்லையேல் மரணதேவி' என பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில்... "அறிமுகமானால் விஜய் தேவரகொண் டாவுடன்தான்; இல்லையேல் வரமாட்டேன்' என்று சொல்லிக்கொண்டு திரிந்தார் ஸ்ரீதேவியின் புத்திரி ஜான்வி கபூர். என்ன நடந்ததோ... ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடிக்கவிருந்த அலியாபட், கர்ப்பமானதன் காரணமாக விலகிக் கொள்ள... ஜான்வி ஒப்பந்தமாகியிருக் கிறார். காரணம், விஜய் தேவரகொண்டா வின் அடுத்தபடத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்திருந்த வேளையில்... விஜய்யோ, சாரா அலிகான் பக்கம் தன் கவனத்தைத் திருப்ப... "ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்'' என்கிற கதையாக ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாகிவிட்டார் ஜான்வி கபூர்.
இந்தியில் என்ட்ரியாகும் சூர்யா!
கோலிவுட் நடிகர்கள் சமீப காலமாக பிறமொழிப் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜய்சேதுபதி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் தற்போது சூர்யாவும் இணைந்துள்ளார். "சூரரைப் போற்று', "ஜெய் பீம்' படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான சூர்யா, தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். பிரபல இந்தி இயக்குநர் ஃபரூக்கபீர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அது உறுதியாகும் பட்சத்தில் சூர்யா பாலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் முதல் படமாக இது அமையலாம். இதனிடையே "சூரரைப் போற்று'’ படத்தின் இந்தி ரீமேக்கில் கௌரவ வேடத்தில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உற்சாகத்தில் காஜல் ரசிகர்கள்!
கமல்ஹாசன், காஜல் அகர்வாலை வைத்து இயக்குநர் ஷங்கர் "இந்தியன் 2' படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில்... இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக "இந்தியன் 2' படப்பிடிப்பு தடைப்பட்டுப் போனது. இதனால் மீண்டும் தொடங்கப்படுமா என பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.
தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப் பட்டதை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்பட்டது. இதனிடையே கௌதம் கீச்சிலுவை திருமணம் செய்துகொண்ட காஜல் கருவுற்றிருந்த நிலையில் "இந்தியன் 2' படத்திலிருந்து விலகியதாகவும், மேலும் அவருக்குப் பதில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளி யானது. ஆனால் இதனை மறுத்துள்ள காஜல், செப்டம்பர் 13-ல் "இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஓ.கே. சொன்ன ப்ரியாமணி!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இந்திய அளவில் ஹிட்டடித்த படம் "புஷ்பா'. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகத்தின் ஆரம்பகட்டப் பணிகளை சுகுமார் மேற் கொண்டு வருகிறார். "புஷ்பா' படத்தை மேலும் மெருகேற்ற நினைத்த சுகுமார், விஜய்சேது பதியை திரைக்கதைக்குள் கொண்டுவந்துள்ளா ராம். இந்த கதாபாத்திரம் பகத் பாசிலுக்கு உயர் அதிகாரி என்றும், படத்தின் கதையை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு வலுவான ஃபீமேல் லீட் தேவைப்படுவதால் ப்ரியாமணியை நாட, அவரும் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம்.
உலக நாயகனுடன் சிம்பு!
மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு "வெந்து தணிந்தது காடு', "பத்து தல' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து சிம்பு அடுத்தாக கமலுடன் இணைந்து பணியாற்ற வுள்ளாராம். "விக்ரம்' கொடுத்த வெற்றியால் குஷியாக இருக்கும் கமல், தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் இளம் நடிகர்களை வைத்து படம் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் சிவகார்த்திகேயன், உதயநிதி வரிசையில் கமல் அடுத்ததாக சிம்புவை தேர்வு செய்துள்ளாராம். இதற்கான கதைத் தேர்வில் சிம்புவும், கமலும் ஈடுபட்டு வருவ தாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
-அருண்பிரகாஷ்