பாலிவுட்டை போட்டுடைத்த மல்லிகா!
பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் தமிழில் "தசாவதாரம்' படத்தில் நடித்துள்ளார். சிம்புவின் "ஒஸ்தி' படத்தில் "கலாசலா கலாசலா...'’ ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் ஆடி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டி பாலிவுட் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
"அப்படி என்ன சொன்னார்?'
"நான் ஒத்துழைக்கவில்லை என்பதற்காக பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் என்னுடன் நடிப்பதை தவிர்த்துவிட்டனர். அவர்களது கட்டுப்பாட்டில் யார் இருப்பார்களோ, அவர்களுடன் நடிக்கவே விரும்புகிறார்கள். "அதிகாலை 3 மணிக்கு கால் செய்து ஒரு நடிகர் என்னுடைய வீட்டிற்கு வா' என்றால் நீங்கள் செல்ல வேண்டும். நீங்கள் மறுத்துவிட்டால் அந்தப் பட வாய்ப்பு உங்களுக்கு இருக்காது. நான் அந்த மாதிரி ஆள் கிடையாது''’என ஓபனாக போட்டு உடைத்துவிட்டார். பாலிவுட்டின் உண்மை முகத்தை மல்லிகா ஷெராவத் துணிச்சலுடன் அம்பலப்படுத்தியுள்ளதாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தாலும், வாய்ப்பு குறைந்த பிறகு இப்படி பேட்டி கொடுப்பது "அட்டென்ஷன் சீக்கிங் ஸ்டண்ட்' என சிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர்.
ஐ லவ் இந்தியா... அமீர் உருக்கம்!
ஹாலிவுட்டில் 1994-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘"ஃபாரஸ்ட் கம்ப்'’ படத்தின் இந்தி ரீ-மேக்காக "லால் சிங் சத்தா' உருவாகியுள்ளது. படத்தை அத்வைத் சந்தன் இயக்க, அமீர்கான் ஹீரோவாக நடித்துள்ளார். ரிலீஸ் தேதி நெருங்கியதால் உற்சாகமாக ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கிய படக்குழு, படத்தை புறக்கணிக்கக் கோரும் திடீர் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கால் அதிர்ச்சி மோடுக்குச் சென்றுள்ளதாம். இந்தியாவில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்துவருவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் அமீர்கான் கூறியிருந்தார். அதேபோல, தங்களுடைய குழந்தையின் பாதுகாப்பு கருதி இந்தியாவை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரது முன்னாள் மனைவி கிரன்ராவ் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இந்த இரு கருத்துகளும் அப்போது பெரும் சர்ச்சையானது. அதன்பிறகு, அமீர்கான் படங்கள் வெளியாகும் போதெல்லாம் இத்தகைய புறக்கணிப்பு கோரிக்கை எழுந்த நிலையில்... இந்த முறை சற்று வலுவாக எழுந்துள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள அமீர்கான், "இப்படியான பிரச்சாரத்தை பரப்பும் சிலர், நான் இதயப்பூர்வமாக இந்தியாவை நேசிக்கவில்லை என நம்புகிறார்கள். ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. நான் நாட்டை மிகவும் நேசிக்கிறேன். தயவுசெய்து என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள்''’எனக் கேட்டுக்கொண்டுள்ளார். "தாக்கட்', "ஷம்ஷேரா' படங்களின் தோல்வியால் பாலிவுட் இன்டஸ்ட்ரியே டல்மோடில் இருக்கும் சூழலில், இப்படியொரு ட்ரெண்டிங் கிளம்பியிருப்பது படக் குழுவினருக்கு கிலியை ஏற்படுத்தி யுள்ளதாம்.
வேகமெடுக்கும் துருவ நட்சத்திரம்!
"கோப்ரா' படத்தை நிறைவுசெய்துள்ள விக்ரம், அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளும் நடந்துவருகின்றன. இந்தப் படம் ஆரம்பிப்பதற்குள் ஃபினான்சியல் பிரச்சனையால் முடங்கிக் கிடக்கும் "துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக்க விக்ரம் திட்டமிட்டுள்ளாராம். கௌதம்மேனன் இயக்கிவந்த இந்தப் படத்தில் 20 சதவிகித ஷூட்டிங் மட்டுமே எஞ்சியுள்ளதாம். அதனை முடித்துக் கொடுத்துவிட்டு பா.ரஞ்சித் படத்தில் கவனம் செலுத்துவதுதான் விக்ரமின் தற்போதைய திட்டமாம்.
-இரா.சிவா
_______________________
கமலுடன் வலிமையான கூட்டணி!
"வலிமை' படத்தைத் தொடர்ந்து, "ஏ.கே. 61' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் எச்.வினோத். ஹைதராபாத் ஷெட்யூல் நிறைவடைந்த நிலையில், சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை டைரக்ட் செய்துள்ள எச்.வினோத், அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது தொடர்பாக எந்தவித அறிவிப்புகளும் தற்போதுவரை வெளியாகாத நிலையில், அடுத்த படம் விஜய் சேதுபதியுடன் இருக்கலா மென்ற பேச்சு நீண்ட நாட்களாக அடிபடுகிறது. இந்த நிலையில், லேட்டஸ்ட் தகவலொன்று கிடைத்துள்ளது. எச்.வினோத் அண்மையில் கமலை சந்தித்து ஒரு கதையைச் சொல்லி யிருக்கிறார். அந்தக் கதை கமலுக்கு பிடித்துப்போக, உடனே ஓ.கே. சொல்லிட் டாராம். விஜய்சேதுபதியுடனான படத்திற்குப் பிறகு இந்தப் படம் தொடங்குமா அல்லது "ஏ.கே. 61'-ஐ முடித்த கையோடு இந்தப் படத்தை எச்.வினோத் கையிலெடுப் பாரா என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும். கமலின் லைன்அப்பில் அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் பழைய கமிட்மெண்ட்ஸ் முடிந்த பிறகே இந்தப் படம் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.