Advertisment

டூரிங் டாக்கீஸ்! -ஒரு நடிகையின் வாக்குமூலம்!

touringtalkies

ஒரு கிசுகிசு!

மேல்நாட்டு உணவுப் பொருள் ஒன்றையும் லோக்கல் சிறுவர்களையும் இணைத்து படம் எடுத்து பேர் வாங்கிய டைரக்டர்... தனது மூன்றாவது படத்தை எடுக்கவிருக்கிறார். இதற்காக... சாலிகிராமத்தில் பதினெட்டு மாடி கட்டடத்தில் ஒரு அலுவலகம் போட்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க... வடக்கத்தி புதுமுக நடிகை ஒருவரை தேர்வு செய்திருக்கும் டைரக்டர்... கடந்த ஆறு மாதங்களாக... அந்த புதுமுக நடிகையை தன் அலுவலகத்திலேயே தங்கவச்சிருக்கார்.

Advertisment

‘"காக்கா முட்டை'ன்னா கண்டுக்காம இருக்கலாம். பொன்முட்டையோ என்னவோ... அதுதான் இம்புட்டு அக்கறையோட அடைகாக்குறார்னு பே

ஒரு கிசுகிசு!

மேல்நாட்டு உணவுப் பொருள் ஒன்றையும் லோக்கல் சிறுவர்களையும் இணைத்து படம் எடுத்து பேர் வாங்கிய டைரக்டர்... தனது மூன்றாவது படத்தை எடுக்கவிருக்கிறார். இதற்காக... சாலிகிராமத்தில் பதினெட்டு மாடி கட்டடத்தில் ஒரு அலுவலகம் போட்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க... வடக்கத்தி புதுமுக நடிகை ஒருவரை தேர்வு செய்திருக்கும் டைரக்டர்... கடந்த ஆறு மாதங்களாக... அந்த புதுமுக நடிகையை தன் அலுவலகத்திலேயே தங்கவச்சிருக்கார்.

Advertisment

‘"காக்கா முட்டை'ன்னா கண்டுக்காம இருக்கலாம். பொன்முட்டையோ என்னவோ... அதுதான் இம்புட்டு அக்கறையோட அடைகாக்குறார்னு பேசுறவங்க... பேசத்தான் செய்றாங்க.

Advertisment

ஒரு முயற்சி!

காக்கா முட்டை’ டைரக்டர் மணிகண்டன் ‘"கடைசி விவசாயி'’என்கிற படத்தை இயக்குகிறார். தேனி மாவட்ட பகுதிகளில் லொகேஷன் பார்த்திருக்கிறார். படத்தில் லைவ் சவுண்ட்டை ரெக்கார்ட்பண்ணி பயன்படுத்த முயற்சித்து வருகிறார். இதற்காக... படப்பிடிப்பு நடக்கப்போகும் லொகேஷன்களுக்கு சவுண்ட் இஞ்ஜினியர் டீமை அழைத்துக் கொண்டுபோய் ஆய்வு செய்திருக்கிறார்.

ஒரு விவாதம்!

"பிக்பாஸ் சீஸன்-1'ல் கலந்துகொள்ள விரும்பினேன். என்னை அழைத்து நேர்முகத் தேர்வு செய்தனர். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. "பிக்பாஸ் சீஸன்-2'ல் கலந்துகொள்ள விரும்பினேன். என்னை அழைத்து நேர்முகத் தேர்வு செய்தனர். எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் முதல் நேர்முகத் தேர்வின்போது ஒருவித மகிழ்ச்சி இருந்தது. இரண்டாவது நேர்முகத் தேர்வின்போது நான் மிக அசௌகர்யமாக உணர்ந்தேன்’என தெலுங்கு பிக்பாஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் விஷாலின் "ஆம்பள'’உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை மாதவிலதா. ‘"பிக்பாஸில் பங்கேற்கவும் அட்ஜஸ்ட்மெண்ட்டா?'’என ஒரு விவாதம் தெலுங்குப் பக்கம் தீவிரமாக நடக்கிறது.

ஒரு ஒப்பந்தம்! ஒரு காதல்!

ஹாலிவுட் சினிமா மற்றும் சீரியலில் நடித்துவரும் 35வயதான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான நிக் ஜோனஸ் எனும் 25 வயது இளைஞருடன் டேட்டிங் செய்துவருகிறார்.

“ஆமாம்... நட்பை தாண்டி சீரியஸான உறவில் இருக்கிறார்கள் இருவரும்’’ என நிக்கின் மாஜி காதலியும், ஆஸ்திரேலிய பாடகியுமான டெல்டா குட்ரெம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நிக்கும், பிரியங்காவும் ஒன்றாக... அமெரிக்காவிலிருந்து மும்பை வந்தார்கள். பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிக்கை, பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா சந்தித்துப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்பின்... பிரியங்காவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான பரினிதி சோப்ரா உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் சிலருடன்... நிக்கும், பிரியங்காவும் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர்.

மும்பையில் நூறுகோடி ரூபாய் மதிப்பில் பிரியங்கா வாங்கியிருக்கும் வீட்டின் கிரஹப்பிரவேசத்தில் கலந்துகொள்ளத்தான் நிக் மும்பை வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது

ஒரு வாக்குமூலம்!

"டோலிவுட்டில் நடிகைகளுக்கு நிகழும் பாலியல் அநீதிகளை நான் வெளிப்படுத்தி வருவதால்... எனக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. செலவுக்குக் காசில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்'’

-நடிகை ஸ்ரீரெட்டி

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn03.7.2018 touringtalkies
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe