Advertisment

TOURING TALKIES! வரும்... ஆனா இப்ப வராது!

cc

ர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'பாஸ் (எ) பாஸ்கரன்' படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தில் ஆர்யா, நயன்தாரா இடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் சந்தானத்தின் காமெடி மீட்டரைத் தாண்டி ஓர்க் அவுட்டானதால் இன்றைக்கும் பலரது ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது இந்தப் படம். இந்த நிலையில், 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக ஒரு தகவல் கிடைக்க... அந்த ப்ராஜெக்ட் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தோம். 'பாஸ் (எ) பாஸ்கரன் 2' நிச்சயம் உருவாகுமாம், அதே நேரத்தில் தற்போது அதற்கான வேலைகள் எதுவும் தொடங்கவில் லையாம். இயக்குநர் ராஜேஷ், ஹன்சிகாவை வைத்து ஒரு வெப்சீரிஸ் இயக்கிவருகிறார். அதை முடித்துவிட்டு ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறாராம். இந

ர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'பாஸ் (எ) பாஸ்கரன்' படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தில் ஆர்யா, நயன்தாரா இடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் சந்தானத்தின் காமெடி மீட்டரைத் தாண்டி ஓர்க் அவுட்டானதால் இன்றைக்கும் பலரது ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது இந்தப் படம். இந்த நிலையில், 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக ஒரு தகவல் கிடைக்க... அந்த ப்ராஜெக்ட் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தோம். 'பாஸ் (எ) பாஸ்கரன் 2' நிச்சயம் உருவாகுமாம், அதே நேரத்தில் தற்போது அதற்கான வேலைகள் எதுவும் தொடங்கவில் லையாம். இயக்குநர் ராஜேஷ், ஹன்சிகாவை வைத்து ஒரு வெப்சீரிஸ் இயக்கிவருகிறார். அதை முடித்துவிட்டு ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறாராம். இந்த கமிட்மெண்ட்ஸ் முடிந்த பிறகுதான் 'பாஸ் (எ) பாஸ்கரன்' சீக்குவலுக்கான வேலைகள் தொடங்கவுள்ளதாம்.

புலம்ப விட்டுட்டியே ஷம்ஷேரா!

Advertisment

ரண் மல்கோத்ரா இயக்கத்தில், ரன்பீர் கபூர், வாணி கபூர், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'ஷம்ஷேரா' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியானது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரன்பீர் கபூரின் படம் திரையரங்கில் வெளியாவதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக படம் பாக்ஸ் ஆபீசில் ஃப்ளாப்பானது. கமர்ஷியலாக பெரிய ஹிட்டை எதிர்பார்த்த படக்குழு, அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது. திட்டமிட்டு பரப்பப்பட்ட நெகட்டிவ் ரிவியூஸ்தான் இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, படத்தை ட்ரோல் செய்து நிறைய மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஒருகட்டத்தில் கடுப்பான இயக்குநர் கரண் மல்கோத்ரா, ஷம்ஷேரா படத்திடம் பேசுவதுபோல ஒரு பதிவினை தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "ஷம்ஷேரா, நீ எப்போதும் இருப்பது போல கம்பீரமானவன். இந்தத் தளத்தில் உன் மீது அன்பு, வெறுப்பு, இழிவு காட்டப்படுகிறது. இந்த வெறுப் பைக் கையாள முடியாமல் நான் அமைதி காத்ததற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய அந்த பலவீனத்திற்கு மன்னிப்பே கிடையாது. இப்போது நான் உன்னுடன் இருக்கிறேன். நீ நான் இயக்கிய படம் என்பதில் பெருமை கொள்கிறேன். இனி எல்லாவற் றையும் சேர்ந்தே எதிர்கொள் வோம்'’என உருக்கமாகக் குறிப் பிட்டுள்ளார். அதேபோல, படத்தைப் பார்க்காமலேயே நிறைய பேர் வெறுப்பை வெளிப்படுத்துவ தாக நடிகர் சஞ்சய் தத்தும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப் படுத்தியிருக்கிறார்.

CC

வீடு வரை உறவு!

டைவர்ஸுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் பிஸியாகியுள்ள சமந்தா, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் மூலம் தன்னுடைய லைன்அப்பை டைட்டாக வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழியில் இருந்து வாய்ப்பு வந்தாலும் சம்பள விஷயத்தில் கறார் காட்டுகிறாராம். அதற்கு சம்மதம் என்றால் கதையை உடனே டிக் செய்கிறாராம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற கணக்கில் இடையிடையே விளம்பரப் படங்களிலும் நடிக்கிறார். சரி, விஷயத்துக்கு வருவோம்... சமந்தா ஹைதராபாத்தில் வீடு வாங்கியுள்ளாராம். அது, அவரும் நாகசைதன்யாவும் வசித்த பழைய வீடாம். கல்யாணமான கையோடு நாகசைதன்யா -சமந்தா தம்பதி ஹைதராபாத்தில் சொகுசு வீடு வாங்கி, அதில் வசித்து வந்தனர். இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்ததும் அந்த வீட்டை விற்றுவிட்டனர். தற்போது அந்த வீட்டை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கி யிருக்கும் சமந்தா, தன்னுடைய அம்மாவோடு அங்கு வசிக்கிறாராம்.

மீண்டும் வழக்கு திரைப்படம்!

ஜெய் பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த தா.செ.ஞானவேல், மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஜீவஜோதி - சரவணபவன் ராஜகோபால் வழக்கை அவர் படமாக்க இருக்கிறாராம். படத்திற்கு "தோசா கிங்' எனப் பெயரிட்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த ஜங்கிலி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக் கிறது. "ஜெய் பீம்' வெற்றிக்குப் பிறகு சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்குவதற்கான வேலைகளில் இருக்கும் ஞானவேல் அந்தப் படத் தை முடித்து விட்டு, "தோசா கிங்' படத்தை இயக்கவுள்ளா ராம். இந்தப் படம் தமிழ், இந்தி உட்பட 7 மொழி களில் உருவாகும் என்பது கூடுதல் தகவல்.

-இரா.சிவா

nkn030822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe