Advertisment

டூரிங் டாக்கீஸ்! பா.ரஞ்சித் களத்தில் ராஷ்மிகா!

dd

டுக்கப்பட்ட மக்களின் குரலாக திரைத் துறையில் ஒலித்துவரும் பா.ரஞ்சித், தனது அடுத்த படத்திற்காக விக்ரமுடன் கைகோர்த்திருக்கிறார். விக்ரம் -பா.ரஞ்சித் கூட்டணி குறித்து முன்பே அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது பட வேலைகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. கே.ஜி.எஃப். பேக்ட்ராப்பில் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாம். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், படத்தின் கதாநாயகி குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Advertisment

dd

அதன்படி, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். கார்த்தி நடித்த "சுல்தான்' படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த ராஷ்மிகாவிற்கு, அந்தப் படம் பெரிய அளவில் கைகொடுக்க வில்லை. விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாரிசு படம் ஒர்க்அவுட்டானால் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற கணக்கோட

டுக்கப்பட்ட மக்களின் குரலாக திரைத் துறையில் ஒலித்துவரும் பா.ரஞ்சித், தனது அடுத்த படத்திற்காக விக்ரமுடன் கைகோர்த்திருக்கிறார். விக்ரம் -பா.ரஞ்சித் கூட்டணி குறித்து முன்பே அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது பட வேலைகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. கே.ஜி.எஃப். பேக்ட்ராப்பில் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாம். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், படத்தின் கதாநாயகி குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Advertisment

dd

அதன்படி, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். கார்த்தி நடித்த "சுல்தான்' படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த ராஷ்மிகாவிற்கு, அந்தப் படம் பெரிய அளவில் கைகொடுக்க வில்லை. விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாரிசு படம் ஒர்க்அவுட்டானால் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற கணக்கோடு கோலிவுட் இயக்குநர்களிடம் கதை கேட்கிறாராம் ராஷ்மிகா.

நட்புக்காக ஷாருக்குடன் விஜய்!

"ராஜா ராணி' படத்தின் மூலம் அறிமுகமாகி வெறும் நான்கு படங்களிலேயே கேரியர் க்ராப்பில் இமாலய வளர்ச்சி கண்டுள்ள அட்லீ, பாலிவுட் கிங் ஷாருக்கானை வைத்து "ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். படத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு, பட வேலைகளில் அட்லீ மும்முரம் காட்டிவரும் நிலையில், "ஜவான்' படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, "ஜவான்' படத்தில் நடிகர் விஜய் கௌரவ தோற் றத்தில் நடிக்க உள்ளாராம். ஷாருக்கானுடன், விஜய்க்கு நல்ல ரிலேஷன்ஷிப் உள்ளதால் அட்லீ கேட்ட உடனே விஜய் ஓ.கே. சொல்லியுள்ளார். அதுமட்டுமல்ல, தனக்கு சம் பளமும் வேண்டாம் எனக் கூறி விட்டாராம். அடுத்த மாத இறுதியில் அல் லது செப்டம்பர் தொடக்கத்தில் மொத்த "ஜவான்' படக்குழுவும் சென்னை வந்து, ஷாருக்-விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளதாம்.

பாலிவுட் பிரபலங்களுடன் முருகதாஸ்!

Advertisment

"துப்பாக்கி', "கத்தி' படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர் கொடுக்கும் உறுதியோடு விஜய்யுடன் இணைந்தார் ஏ.ஆர். முருகதாஸ். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. சம்பள விஷயத்தில் சன் பிக்சர்ஸுடன் முரண்பாடு ஏற்பட... கதை விஷயத்தில் விஜய் குறுக்கிட... ஒருகட்டத்தில் கடுப்பான முருகதாஸ் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு, அனிமெட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன் படுத்தி குரங்கை மையமாக வைத்து ஒரு படத்தை அவர் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், அது குறித்து எந்தத் தகவலும் வெளி யாகவில்லை. இந்தச் சூழலில், ஏ.ஆர்.முருக தாஸின் அடுத்த படம் குறித்து ஒரு லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, தன்னுடைய அடுத்த படத்தை முருகதாஸ் இந்தியில் இயக்க இருக்கிறாராம். அந்தப் படத்தில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கானும் சல்மான் கானும் இணைந்து நடிக்கவுள்ளனராம். இதற்கான முன்னெடுப்பை அமீர்கான் எடுத்த தாகக் கூறப்படுகிறது. 1995-ஆம் ஆண்டு வெளி யான "கரண் அர்ஜுன்' படத்தில் ஷாருக்கும் சல்மானும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு சில படங்களில் சிறு பகுதியில் மட்டும் நடித் திருந்தனர். ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி முழுநீள திரைப்படத்திற் காக மீண்டும் இணைய இருப்பது பாலிவுட் ரசி கர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டை வியக்க வைத்த தனுஷ்!

cc

"அவெஞ்சர்ஸ்'’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத் தில் உருவாகியுள்ள "தி க்ரே மேன்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக் கிறார். நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்திற்காக எடுக்கப்பட்ட இப்படம், ஜூலை 22-ஆம் தேதி வெளியானது. படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாலிவுட்டில் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பட ப்ரோமோஷனில் பேசிய ரயன் காஸ்லிங், நடிகர் தனுஷை புகழ்ந்து தள்ளிவிட் டார். எத்தனை முறை டேக் எடுத்தாலும் தவறே செய்யாமல் தனுஷ் நடித்தாராம். தனிப்பட்ட முறையில் அவரை ரொம்பவும் பிடித்துவிட்டதால் தனுஷை எதிரியாக நினைத்துக் கொண்டு நடிக்க, கடினமாக இருந்ததாக ரயன் காஸ்லிங் தெரிவிக்க... அந்தப் பேட்டியைக் கண்டு தனுஷ் ரசிகர்கள் எக்ஸைட்டாக, அன்றைய தினம் முழுவதும் சோசியல் மீடியாவில் அந்த வீடீயோதான் வைரல் கன்டன்ட்.

-இரா.சிவா

nkn230722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe