Advertisment

டூரிங் டாக்கீஸ்! இரண்டாவது இன்னிங்ஸில் ஹாரிஸ்!

cc

இரண்டாவது இன்னிங்ஸில் ஹாரிஸ்!

2010-ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிஸியான முன்னணி இசையமைப்பாளராக அறியப்பட்டவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின் இசை கிட்டத்தட்ட ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கு ஒத்துப்போகும் என்பதால் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர் களும் தங்களின் படங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க மறுத்துவிட்டால் அடுத்து நேரடியாக செல்லும் இடம் ஹாரிஸ் ஜெயராஜ் அலுவலகமாகத் தான் இருக் கும். அந்த அளவுக்கு தனது இசை யால் திரையுலகை கட்டிப்போட்டு வைத் திருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரின் இசை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் ட்ரெண்டிற்கு ஏற்றவாறு தனது இசையில் மாற்றம் செய்து கொள்ளாததுதான் காரணம் என கூறப்படு கிறது. இதனிடையே அவரது ரசிகர்கள் சினிமாவில் அப் அண்ட் டவுன் இருக்கத்தான் செய்யும். ஏன் இளைய ராஜா, ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட டாப் இசையமைப்பாள ருக்கும் இந்த மாதிர

இரண்டாவது இன்னிங்ஸில் ஹாரிஸ்!

2010-ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிஸியான முன்னணி இசையமைப்பாளராக அறியப்பட்டவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின் இசை கிட்டத்தட்ட ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கு ஒத்துப்போகும் என்பதால் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர் களும் தங்களின் படங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க மறுத்துவிட்டால் அடுத்து நேரடியாக செல்லும் இடம் ஹாரிஸ் ஜெயராஜ் அலுவலகமாகத் தான் இருக் கும். அந்த அளவுக்கு தனது இசை யால் திரையுலகை கட்டிப்போட்டு வைத் திருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரின் இசை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் ட்ரெண்டிற்கு ஏற்றவாறு தனது இசையில் மாற்றம் செய்து கொள்ளாததுதான் காரணம் என கூறப்படு கிறது. இதனிடையே அவரது ரசிகர்கள் சினிமாவில் அப் அண்ட் டவுன் இருக்கத்தான் செய்யும். ஏன் இளைய ராஜா, ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட டாப் இசையமைப்பாள ருக்கும் இந்த மாதிரியான சிக்கல்கள் இருந்திருக்கிறது. ஆனால் அவர்களை நிரூபிக்க பலரும் வாய்ப்பு வழங்கிய நிலையில் ஹாரிஸுக்கு மட்டும் ஏன் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் "லெஜெண்ட்' படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஹாரிஸ், அடுத்து அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். "லெஜெண்ட்' படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்திருந் தாலும், அவரும் ஜெயம் ரவியின் படத்தைத்தான் முழுசாக நம்பியிருக்கிறாராம்.

மணிரத்னத்துக்காக குரல் கொடுக்கும் கமல்!

Advertisment

இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது "பொன்னியின் செல்வன்'. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து பெரும் பொருட் செலவில் இப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாக டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அது ரசிகர்களிடம் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. "பாகுபலி' போன்ற சரித்திரப் படங் களில் காட்டிய பிரமாண்டத்தை விட அதிகம் காட்ட வில்லை என்றாலும் பரவாயில்லை, அதற்கு இணையாக வாவது, பொன்னியின் செல்வன் படத்தில் காட்ட வேண்டும். ஆனால் டீசரை பார்க்கும்போது அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை என ரசிகர்கள் இணையத்தில் தங்களின் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே டீசரை விட படம் பிரமாண்ட மாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும் விதமாகவும் இருக்கும் என்று மணிரத்னம் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்ற னர். படத்தின் திரைக்கதை நரேஷன் பாணியில் நகர்வதால், பின்னணி குரல் கொடுக்க படக்குழு கமல்ஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளதாம். "பொன்னியின் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாவதால், மொழிக்கு ஏற்றவாறு நடிகர்களைத் தேர்வு செய்வதை விட இந்தியா முழுவதும் பரிச்சயமான கமல்ஹாசனை குரல் கொடுக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு இம்முடிவை எடுத்துள்ளதாம்.

தந்தையை பெருமைப்படுத்தும் சூரி!

soori

வித்தியாசமான வசன உச்சரிப்பாலும், தனது நகைச்சுவையாலும் கணிசமான ரசிகர்களை வைத்திருப் பவர் சூரி. காமெடி வேடத்தில் நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சூரி தனது மறைந்த தந்தையின் வாழ்க்கையைப் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம். சவாலான தனது தந்தையின் வாழ்க்கையைப் படமாக்க சரியான இயக்குநர் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று எண்ணிய சூரி, ராம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களிடம் இதைப்பற்றி கூறினாராம். கதையைக் கேட்ட இயக்குநர்கள், "நன்றாக இருக்கிறது, ஆனால் வேலைப்பளு அதிகமாக இருக்கிறது'' எனக்கூறி படத்தை இயக்க மறுத்துவிட்டார்களாம். இதனால் அப்செட்டில் இருந்த சூரி, "கத்துக்குட்டி' படத்தை இயக்கிய இரா.சரவணனை நாடியுள்ளார். கதையை நிதானமாக கேட்ட இரா.சரவணன் கடைசியில் க்ரீன் சிக்னல் காட்ட, சூரி தற்போது ஹேப்பி மோடில் உள்ளாராம்.

"சந்திரமுகி 2' ரா...ரா...!

Advertisment

cc

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் "சந்திரமுகி.' கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷா, சாய்பல்லவி உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் மறுக்கவே இறுதியாக லட்சுமி மேனனை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாம். முதல் பாகத்தை விட இப்படம் பிரமாண்டமாக தயாராக வுள்ளதாகவும், லாரன்ஸ் ரஜினியின் மகனாக நடிக்க வுள்ளதாகவும் கூறப்படுகிறது.

-அருண்பிரகாஷ்

nkn160722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe