விஜய்யுடன் இணையும் தோனி!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. "விஜய்யை வைத்து படம் எடுத்தால் எப்படியும் லாபம் எடுத்து விடலாம் என்ற எண்ணத்தால் விஜய்யின் கால்ஷீட் கிடைத்தாலே போதும்' என்று அவர் கேட்கும் சம்பளத்தைக் கொட்டித் தருவதற்கு தயாரிப்பாளர்க ளும் ரெடியாக இருக்கிறார்கள். இதில் தமிழைக் கடந்து மற்ற மொழி தயாரிப்பாளர்களும் விஜய்யை அணுகி வருகிறார்களாம். அந்த வகையில்தான் தற்போது விஜய் நடிக்கும் "வாரிசு' படத்தைப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். இவரின் வரிசையில் அடுத்தாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி விஜய்யுடன் இணையவுள்ளாராம். "தோனி எண்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி சில ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள தோனி, அடுத்ததாக விஜய்யை வைத்து திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளாராம். பொதுவாக தோனிக்கு வட இந்தியாவை விட தென
விஜய்யுடன் இணையும் தோனி!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. "விஜய்யை வைத்து படம் எடுத்தால் எப்படியும் லாபம் எடுத்து விடலாம் என்ற எண்ணத்தால் விஜய்யின் கால்ஷீட் கிடைத்தாலே போதும்' என்று அவர் கேட்கும் சம்பளத்தைக் கொட்டித் தருவதற்கு தயாரிப்பாளர்க ளும் ரெடியாக இருக்கிறார்கள். இதில் தமிழைக் கடந்து மற்ற மொழி தயாரிப்பாளர்களும் விஜய்யை அணுகி வருகிறார்களாம். அந்த வகையில்தான் தற்போது விஜய் நடிக்கும் "வாரிசு' படத்தைப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். இவரின் வரிசையில் அடுத்தாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி விஜய்யுடன் இணையவுள்ளாராம். "தோனி எண்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி சில ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள தோனி, அடுத்ததாக விஜய்யை வைத்து திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளாராம். பொதுவாக தோனிக்கு வட இந்தியாவை விட தென்னிந்தியாவில்தான் ரசிகர் கள் பட்டாளம் ஏராளம். அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் சொல்லவே தேவை இல்லை. அதனால், என்ட்ரியே அமர்க்களமாக இருக்கவேண்டும் எண்ணிய தோனி, முதல் படத்திற்காக விஜய்யை டிக் செய்துள்ளாராம். இப்படத்தை இயக்க தென்னிந்தியாவில் உள்ள சில முன்னணி இயக்குநர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் கமல்-அனிருத் கூட்டணி!
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் "ப்ரின்ஸ்' படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்தாக ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும்"எஸ்.கே 21' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை "ரங்கூன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது படக்குழுவில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம். அதாவது, "எஸ்.கே 21' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த வாய்ப்பை அனிருத்திடம் கொடுத்துள்ளாராம் கமல். இது குறித்து படக்குழுவின் நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தபோது, "விக்ரம்' படத்தின் வெற்றிக்கு இசை பெரும் பங்காற்றியது. அதற்கு காரணம் அனிருத் என்பதாலும், பெரும்பாலான வர்களால் அனிருத்தின் இசை கொண்டாடப்படுவதாலும் அவரை "எஸ்.கே 21' படத்திற்கு கமல் தேர்வு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் -அனிருத் கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்த வரலாறும் இம் முடிவிற்கு ஒரு முக்கிய காரணமாம்.
நயனுக்கு இணையாக தீபிகா படுகோனே!
தமிழில் விஜய்யை வைத்துத் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக இருக்கும் அட்லீ தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து "ஜவான்' என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். "ஜவான்' படத்தின் மூலம் அட்லீ மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டிற்கு நயன்தாரா புதுமுகம் என்பதால் "ஜவான்' படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தி ரசிகர்களிடையே பரிட்சியமான ஒருவரை நடிக்க வைக்கத் திட்டமிட்ட அட்லீ, பல தேர்வுகளுக்குப் பிறகு இறுதியில் தீபிகா படுகோனேவை ஓ.கே. செய்துள்ளாராம். இந்த குறித்து ஷாருக்கானிடம் கூறியதோடு, தீபிகாவை சந்தித்து ஒப்புதலும் வாங்கிவிட்டாராம் அட்லீ. படத்தில் நயன்தாராவுக்கு இணையான ஒரு வேடத்தில் தீபிகா வருவார் என்று கூறப்படுகிறது.
நெகட்டிவ் ரோலில் அஜித்!
இயக்குநர் எச்.வினோத் மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து "ஏ.கே.61' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்தி ரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்ப தாகக் கூறப்படுகிறது. இப்படத் தின் திரைக்கதை வங்கிக் கொள் ளையைச் சுற்றி அமைக்கப் பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் நடிகை மஞ்சுவாரியர் "ஏ.கே.61' படப்பிடிப்பில் இணைந் துள்ளார். தனிப்பட்ட காரணத்திற் காக ஐரோப்பா சென்றுள்ள அஜித், அங்குள்ள பைக் ரைடர்கள் குழுவுடன் இணைந்து பைக்கில் லண்டனைச் சுற்றிப்பார்த்து வருகிறார். இதனிடையே நேரத்தை வீணாக்காமல் "ஏ.கே.61' படக் குழுவினர் மஞ்சுவாரியரின் காட்சிகளைப் படமாக்கத் திட்ட மிட்டு அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டனர். அஜித் லண்டனிலிருந்து இந்தியா திரும்பியவுடன் அவருக்கும் மஞ்சுவாரியருக்குமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். படப் பிடிப்பு வேலைகள் இன்னும் அதிகம் இருப்பதால் தீபாவளிக்கு ரிலீஸாகாதாம்.
-அருண்பிரகாஷ்