Advertisment

டூரிங் டாக்கீஸ்! கல்லூரி மாணவனாகும் அருள்நிதி!

cc

கல்லூரி மாணவனாகும் அருள்நிதி!

cc

Advertisment

காலேஜ் ஒன்றில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மாணவர் கள் சேர்ந்து கண்டுபிடிக்கும் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் "டி பிளாக்' படத்தில் கல்லூரி மாணவனாக அருள்நிதி (இதற்காக 10 கிலோ வரை எடைகுறைப்பு செய்து) நடித் துள்ளாராம். "என்ன சொல்லப் போகிறாய்' படத்தில் அஸ்வின் ஜோடியாக நடித்த அவந்திகா மிஸ்ரா, இதில் அருள்நிதி ஜோடியாகியிருக்கிறார். "இந்தப் படம் வெளி வந்தால் கண்டிப்பாக பல பட வாய்ப்புகள் கிடைக்கும்'' என குஷியாகக் கூறுகிறார் அவந்திகா!

கன்னட ஸ்டார் வாரிசுடன் சூப்பர் ஸ்டார்!

"அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் "தலைவர் 169' படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இப் படத்தில் முன்னணி கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. வழக்கம்போல இதுவும் உறுதிப் படுத்தப்படாத தக வலாகவே இருந்

கல்லூரி மாணவனாகும் அருள்நிதி!

cc

Advertisment

காலேஜ் ஒன்றில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மாணவர் கள் சேர்ந்து கண்டுபிடிக்கும் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் "டி பிளாக்' படத்தில் கல்லூரி மாணவனாக அருள்நிதி (இதற்காக 10 கிலோ வரை எடைகுறைப்பு செய்து) நடித் துள்ளாராம். "என்ன சொல்லப் போகிறாய்' படத்தில் அஸ்வின் ஜோடியாக நடித்த அவந்திகா மிஸ்ரா, இதில் அருள்நிதி ஜோடியாகியிருக்கிறார். "இந்தப் படம் வெளி வந்தால் கண்டிப்பாக பல பட வாய்ப்புகள் கிடைக்கும்'' என குஷியாகக் கூறுகிறார் அவந்திகா!

கன்னட ஸ்டார் வாரிசுடன் சூப்பர் ஸ்டார்!

"அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் "தலைவர் 169' படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இப் படத்தில் முன்னணி கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. வழக்கம்போல இதுவும் உறுதிப் படுத்தப்படாத தக வலாகவே இருந்த சூழலில்... இப்படத் தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை சிவராஜ் குமாரே உறுதிப்படுத்தி யுள்ளார். பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய சிவராஜ்குமார், "இப்படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்ததோடு, படத்தின் படப்பிடிப்பு குறித்தும் ஒரு புதிய தகவலைக் கூறியுள்ளார். அதன்படி, ரஜினியுடன் சிவராஜ்குமார் நடிக்கும் காட்சிகள் செப்டம்பர் மாதம் படமாக்கப்பட உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு பெங்களூரு அல்லது மைசூரில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என ஏற்கனவே வெளியாகியிருந்த தகவல் இதன்மூலம் தற்போது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல் நெல்சன் டீமும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறதாம்.

க்யூவில் நிற்கும் கைதி-2

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குநர் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத்ஃபாசில் நடிப்பில் வெளி யான "விக்ரம்', 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் படத்தின் தயாரிப்பாள ரான கமல், படக்குழுவினருக்கு பல்வேறு காஸ்ட்லியான கிஃப்ட்களையும் வழங்கி வருகிறார். இந்நிலையில், தனது முந்தைய படமான "கைதி'யின் கதையை இப்படத்தின் கதையோடு இணைத்து தனக்கான ஒரு யூனிவெர்ஸையே உருவாக்கி ரசிகர்களை பிரமிக்க வைத்த லோகேஷ், கதைக்குள் சூர்யாவையும் கொண்டு வந்து, அடுத்த பார்ட் எப்போது வரும் என இப்போதே ரசிகர்களைக் காத்திருக்கச் செய்திருக்கிறார். இதனிடையே "விக்ரம்' படத்திற்குப் பிறகு விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. ட்விட்டரில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய இயக்குநர் லோகேஷ், "கைதி' படத்தில் இறந்துபோன அர்ஜுன் தாஸின் கேரக்டர் இப்படத்தில் எப்படி மீண்டும் உயிருடன் வந்தது என்ற ரசிகரின் கேள்விக்குப் பதிலளிக்கை யில், "கைதி 2' படத்தில் இதுகுறித்து விவரிக்கப்படும் எனக் கூறியிருந்தார். அவரின் இந்த பதிலை வைத்து, அடுத்ததாக "கைதி 2'தான் வரப்போகிறது என ரசிகர்கள் யூகித்துக் கொண்டிருக்கையில், "கைதி - 2' படத்தின் பணிகளை ஏற்கனவே லோகேஷ் தொடங்கிவிட்டார் என்கின்றன சினிமா வட்டாரங்கள். விஜய் படத்தின் ரிலீஸுக்கு பிறகு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகுமாம்.

பலத்த பாதுகாப்பில் "தளபதி 66'

Advertisment

cc

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் "தளபதி 66' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட் டோர் நடித்து வருகின்றனர். இதில் விஜய் யுடன் மகேஷ்பாபு சிறப்புத் தோற்றத்தில் ஒரு காட்சியில் நடிக்கவுள்ளதாக அண்மை யில் வெளியான தகவல், ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை தற்போதே எகிறவைத்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் அண்மையில் இணையத்தில் கசிந்து படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஏற்கனவே படப்பிடிப்புத் தளத்தில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது கசிந்து வந்த சூழலில், தற்போது வீடியோக்களே வெளி யாவதால், படக்குழு படப்பிடிப்புத் தளத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மொபைல் ஃபோன்கள் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள தாம். மேலும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டுள்ள படக்குழு, அவையும் முன்கூட்டியே கசிந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு விஷயங்களில் தீவிரம் காட்டி வரு கிறதாம்.

-எம்.கே.

nkn150622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe