Advertisment

டூரிங் டாக்கீஸ்!

cc

ரஜினியுடன் சிவகார்த்திகேயன்

சிவா இயக்கத்தில் "அண்ணாத்த' படத்தில் நடித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், அதன் ரிலீசுக்கு பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்து வந்தார். அதன்பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் "தலைவர் 169' படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு முன்னரே வந்தாலும், நெல்சன் "பீஸ்ட்' பட வேலைகளில் பிஸியாக இருந்து வந்ததால், அடுத் தடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை.

Advertisment

தற்போது "பீஸ்ட்' படம் திரை யரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நெல்சன் - ரஜினி படம் குறித்த புதிய தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. அவற்றின்படி, இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப் பிருப்பதாகக் கூறப்படுகிறது. நெல்சனின் "டாக்டர்' படத்தில் ஹீரோவாக வும், "கோலமாவு கோகி

ரஜினியுடன் சிவகார்த்திகேயன்

சிவா இயக்கத்தில் "அண்ணாத்த' படத்தில் நடித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், அதன் ரிலீசுக்கு பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்து வந்தார். அதன்பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் "தலைவர் 169' படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு முன்னரே வந்தாலும், நெல்சன் "பீஸ்ட்' பட வேலைகளில் பிஸியாக இருந்து வந்ததால், அடுத் தடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை.

Advertisment

தற்போது "பீஸ்ட்' படம் திரை யரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நெல்சன் - ரஜினி படம் குறித்த புதிய தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. அவற்றின்படி, இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப் பிருப்பதாகக் கூறப்படுகிறது. நெல்சனின் "டாக்டர்' படத்தில் ஹீரோவாக வும், "கோலமாவு கோகிலா', "பீஸ்ட்' படத்தில் பாடலாசிரியராகவும் இருந்த சிவகார்த்திகேயன் இந்த புதிய படத்தில் ஒரு கேமியோ கொடுக்க விருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, இப்படத்தின் பணிகளை நெல்சன் வரும் மே மாதம் முதல் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரத் தினர் தெரிவிக்கின்றனர்.

போதை வழக்கில் நடிகை நிஹாரிகா

cc

டந்த ஆண்டு அக்.02 அன்று மும்பையில் இருந்து, கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன் படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலர் மும்பையில் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த நள்ளிரவு விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். இந்த சோதனையில் கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு, போதை விருந்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்

இதில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள் நிஹாரிகா, பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்திரி மகள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங் களின் வாரிசுகளும் அடக்கம். இதன்பிறகு கைது செய்யப்பட்ட வர்களை நிபந் தனையின் பேரில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்த காவல்துறையினர், அனைவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், போதை மருந்து பயன்படுத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது எனவும் தெரிவித் துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நிஹாரிகா கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

பாலிவுட்டில் சமந்தா

cc

மிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தாவுக்கு "ஃபேமிலி மேன் 2' தொடர் மற்றும் "புஷ்பா' படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டிலும் ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நாகசைதன்யா உடனான விவாகரத்துக்குப் பிறகு, தனி வீட்டில் மும்பையில் குடியேறி பாலிவுட்டில் நடிக்க முடிவெடுத்திருந்த அவர், அதற்காக மும்முரமாக வீடு தேடும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். இதுவரை மும்பையில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அவர், தற்போது மும்பை கடற்கரை பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அபார்ட்மெண்டில் சுமார் நான்கு கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன. கட்டுமான பணிகள் முடிந்தவுடன் விரைவாக அந்த வீட்டில் குடியேறத் திட்டமிட்டுள்ள சமந்தா, பாலிவுட்டில் நடிக்க சில கதைகளையும் கேட்கத் துவங்கியுள்ளாராம்.

எதிர்பார்ப்பில் "கேப்டன்'

"எனிமி' படத்திற்குப் பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் படம் "கேப்டன்'. இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஆர்யா, சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் ஏற்கனவே வெளியான "டெடி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்போதே இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் "கேப்டன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. அப்போஸ்டரில் ஆர்யா கையில் துப்பாக்கியுடன் மாஸாக நின்றுகொண்டிருக்கையில், அவரின் பின்புறம் ஹாலிவுட் பிரிடேட்டர் படத்தில் வருவதுபோன்ற மான்ஸ்டர் ஒன்றும் இருக்கிறது. "டிக் டிக் டிக்', "மிருதன்', "டெடி' எனப் பல புதுமையான படைப்புக்களைக் கொடுத்துள்ள சக்தி சௌந்தர்ராஜன், "கேப்டன்' படத்தில் பிரிடேட்டர் போன்ற ஒரு மான்ஸ்டரை மையமாக வைத்து எடுக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன.

-எம்.கே

nkn090422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe