செகண்ட் இன்னிங்ஸில் ஸ்ருதிஹாசன்!
தனது பழைய காதல் வாழ்க்கையிலிருந்தும் கொரோனாவிலிருந்தும் விடுபட்டு புத்துணர்ச்சியுடன் சிரஞ்சீவி, பிரபாஸ் என தனது செகண்ட் இன்னிங்ஸை ஸ்பீடாக ஆரம்பித்துள்ள ஸ்ருதிஹாசன், தனது காதல் வாழ்க்கையிலும் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். விஷூவல் ஆர்ட்டிஸ்டான தனது காதலர் சாந்தனு ஹஸாரிகா பற்றியும் அவருடன் நெருக்கமாக உள்ள படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ரஜினியுடன் பிரியங்கா!
"டாக்டர்', "எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து, குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ளார் நடிகை பிரியங்கா மோகன். இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், தற்போது இவர் "டான்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் சூழலில்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் பிரியங்கா நடிக்க உள்ள தாகத் தகவல் வெளியாகியுள்ளது.
"அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில், ரஜினியின் படத்தில் பிரியங்கா நடிப்பது சக நடிகைகள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளதாம்.
பொங்கலுக்கு "வாடிவாசல்!'
மிகப்பெரிய எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் "வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள தாம். இப்படத்தை "வி கிரியேஷன்ஸ்' சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு.செல்லப்பா எழுதிய ‘"வாடிவாசல்'’ நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை முடித்துள்ள வெற்றிமாறன், விரைவில் படப் பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டே இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் வெற்றிமாறன் "விடுதலை' படத்திலும், சூர்யா "எதற்கும் துணிந்தவன்' படத்திலும் பிஸியாக இருந்ததால் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இந்நிலையில், தற்போது பாலாவின் படத்தில் நடிக்க உள்ள சூர்யா, அந்த படத்தின் பணிகளை முடித்ததும் "வாடிவாசல்' படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தின் முதல் ஷெட்யூலில் ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகளைப் படமாக்கவுள்ள, சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகளை ஒன்றுதிரட்டி தென் தமிழகத்தில் படப்பிடிப்பு மேற்கொள்ள உள்ளாராம் இயக்குநர். கிராஃபிக்ஸ் காட்சிகளாக இல்லாமல் உண்மையாகவே காளைகளை வைத்து எடுத்தால்தான் பார்வையாளர்களுக் குச் சரியான உணர்வுகளைக் கடத்த முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையில் படம் ரிலீஸாக வாய்ப்புள்ளது என்கின்றனர் திரைத்துறை வட்டாரத்தினர்.
ராஜமௌலியுடன் இணையும் அல்லுஅர்ஜுன்!
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் ராம்சரண் -ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள ‘"ஆர்ஆர்ஆர்'’ படம் வரும் மார்ச் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபுவை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார் ராஜமௌலி. வனப்பகுதிக்குள் நடக்கும் சாகசங் களை மையமாக வைத்து உரு வாக்கப்பட உள்ள இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளைக் கவனித்து வரும் ராஜமௌலி, ஆப்பிரிக்க வனப்பகுதி களில் இதன் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத் துள்ளாராம்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அல்லுஅர்ஜுன் நடிக்கும் படத்தை ராஜமௌலி இயக்குகிறார் என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகி யுள்ளது. தற்போது, அல்லுஅர்ஜுன் நடித்துவரும் "புஷ்பா 2' இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ராஜமௌலியின் படத்தில் அவர் நடிக்க உள்ளாராம். பான் இந்தியா இயக்குநரான ராஜமௌலியுடன் ஏற்கனவே பான் இந்தியா ஹீரோ வாக உள்ள அல்லுஅர்ஜுன் இணைய வுள்ளார் என்ற இந்த செய்தி இப்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.
-எம்.கே.