"மங்காத்தா 2'
"மாநாடு' திரைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அசோக்செல்வன், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் உருவாகி யுள்ள "மன்மத லீலை'’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. இந்நிலையில், வெங்கட்பிரபு வின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கு நடிகர் நாகசைதன்யா வை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளாராம் வெங்கட் பிரபு. பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான இவரிடம் வெங்கட் பிரபு அண்மையில் ஒரு கதையைக் கூறியுள்ளாராம். அந்த கதை அவருக்குப் பிடித்துப்போகவே, நடிப்பதற்கு உடனடியாக ஓ.கே. சொல்லியுள்ளாராம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகவுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தானா ஹீரோயினாக நடிக்க வாய்ப் புள்ளதாகக் கூறப்படுகிறது. வெங்கட்பிரபுவின் இந்த புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ள சூழலில், "மங்காத்தா' படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையையும் அவர் ரெடி செய்துள்ளாராம். அஜித் ஒப்புக்கொண்டால் உடனே ஷூட்டிங் போக இயக்குநர் தரப்பு தயாராக உள்ளதாகக் கூறுகின்றன சினிமா வட்டாரங்கள்.
ராஜூமுருகனுடன் இணையும் கார்த்தி!
"குக்கூ', "ஜோக்கர்', "ஜிப்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளவர் ராஜூமுருகன். ஜிப்ஸி' படத்தைத் தொடர்ந்து இவர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், இதில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், அதன்பிறகு இப்படம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில்... தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி கார்த்தி -ராஜூமுருகனின் புதிய படம் மே மாதம் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழு ஸ்க்ரிப்டையும் தயார்செய்து முடித்துள்ளாராம் ராஜூமுருகன். ஏப்ரல் மத்தியில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான "தோழா' படத்திற்கு ராஜூமுருகன்தான் வசனம் எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமந்தாவின் வைரல் பதிவு!
நடிப்புத்துறையில் உள்ள பெண்களின் குணநலன்களை அவர்கள் அணியும் ஆடைகளின் அடிப்படையிலும், அவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளி யிடும் புகைப்படங்களின் அடிப்படையிலும் மதிப்பிடும் வழக்கம் தற்போதைய டிஜிட்டல் உலகில் அதிகரித்து வருகிறது. ஆரோக்கிய மற்ற இந்த மதிப்பீடுகளால் மனதளவில் பாதிக்கப்படும் பல நட்சத்திரங்கள், அவ்வப் போது இம்மாதிரியான கருத்துக்களுக்கு பதிலடி கொடுப்பதுண்டு. அந்தவகையில் அண்மையில் தனது உடைக்காக விமர்சனங் களைச் சந்தித்த சமந்தா, அதற்கு பதிலடி தரும் வகையில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலானது.
நடிகை சமந்தா சமீபத்தில் பச்சை நிற கவுன் அணிந்து விழா ஒன்றில் கலந்துகொண்டார். அவ்விழாவில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்றியபோது, அதற்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்களும் வந்தன. அந்த கருத்துக்களுக்குப் பதிலடி தரும் விதமாக சமந்தா வெளியிட்ட பதிவில், "ஒரு பெண்ணாக, மதிப்பிடப்படுதல் என்றால் என்ன என்பதை நான் நேரடியாக அறிந்திருக்கிறேன். பெண் களின் உடை, அவர்களின் இனம், கல்வி, சமூக அந்தஸ்து, தோற்றம், தோலின் நிறம் என இதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இப்போது நாம் 2022-ஆம் ஆண்டில் இருக்கிறோம். ஒரு பெண்ணை, அவளின் ஆடைகளின் அடிப்படையில் மதிப் பிடுவதை நிறுத்திவிட்டு நமது சுயமுன்னேற் றத்தில் சற்று கவனம் செலுத்தலாமே? இவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் நம்மை நாமே சுய மதிப்பீடு செய்து கொள்வதே பரிணாம வளர்ச்சி. நமது எண்ணங்களை வேறொருவர் மீது முன்னிறுத்துவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. ஒரு நபரை நாம் மதிப்பிடும் விதத்தையும் புரிந்து கொள்ளும் விதத்தையும் திருத்தி எழுதுவோம்'' என்று கூறினார் சமந்தா. இந்த பதிலடி பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
-எம்.கே.