டூரிங் டாக்கீஸ்!

cc

உலக அரங்கில் "பொன்னியின் செல்வன்!'

cinema

ணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் "பொன்னியின் செல்வன்'. கல்கியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்... படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால், இந்தியாவைக் கடந்து சர்வதேச அளவிலும் படத்தை பிரம்மாண்டமாக வெளியிடத் திட்ட மிட்டுள்ளதாம் தயாரிப்பு தரப்பு. இதன் காரண மாக, படத்தை "கான்ஸ்' திரைப்பட விழாவில் பிரீமியர் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். வரும் மே மாதத்தின் பிற்பாதியில் நடக்க விருக்

உலக அரங்கில் "பொன்னியின் செல்வன்!'

cinema

ணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் "பொன்னியின் செல்வன்'. கல்கியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்... படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால், இந்தியாவைக் கடந்து சர்வதேச அளவிலும் படத்தை பிரம்மாண்டமாக வெளியிடத் திட்ட மிட்டுள்ளதாம் தயாரிப்பு தரப்பு. இதன் காரண மாக, படத்தை "கான்ஸ்' திரைப்பட விழாவில் பிரீமியர் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். வரும் மே மாதத்தின் பிற்பாதியில் நடக்க விருக்கும் இந்த விழாவில் படத்தை திரையிட் டால், படத்திற்கு உலக அரங்கில் நல்ல விளம் பரம் கிடைக்கும் என நம்பும் படக்குழு, இதற் கான வேலைகளில் தற்போது இறங்கியுள்ளதாம். மேலும், செப்டம்பர் 30 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது தயாரிப்பு தரப்பு.

பிரமாண்டமாக ராமாயணம்!

பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் "ஆதிபுருஷ்'. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் இப் படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரித்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத் திலும் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்கி வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உரு வாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. "ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாகப் படத்தின் ரீலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, "ஆதிபுருஷ்'’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள 'ராதே ஷியாம்' திரைப்படம் வரும் 11-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வசூலில் "வலிமை'!

cc

ச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24 அன்று வெளியான "வலிமை' திரைப்படம் எதிர்மறை விமர்சனங் களையும் கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து வெளியான படம் என்பதால் நெகட்டிவ் ரிவ்யூக்களையும் கடந்து படத்தைக் கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். அதேபோல, வெளியான 4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து, இதற்கு முந்தைய பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது "வலிமை'. "வலிமை'க்கு கிடைத்துள்ள இந்த வரவேற்புக்கு மத்தியில், "அஜித் 61' படத்தின் பணிகளை விறுவிறுப் பாகத் துவங்கியுள்ளார் எச். வினோத். உலக அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாக சமீபத்திய நக்கீரன் பேட்டியில் இயக்குநர் எச்.வினோத் கூறியிருந்தார். இப்படத்தில் மோகன்லால் அல்லது நாகார்ஜுனா இருவரில் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நடிகை தபுவும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் "ஏகே 61' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, யோகிபாபுவும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

ஃபுல் எனர்ஜியில் வெங்கட்பிரபு!

சிம்பு - வெங்கட்பிரபு கூட்டணியில் கடந்த நவம்பரில் வெளியான "மாநாடு' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கடந்த சில வருடங்களாகப் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த சிம்பு, வெங்கட் பிரபு இருவருக்குமே மாநாடு ஃபுல் எனர்ஜியைக் கொடுத்துள்ளது. தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பல மொழிகளிலும் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கடும் போட்டி நிலவியது. அந்தப் போட்டிகளுக்கு மத்தியில் "மாநாடு' ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம். "மாநாடு' படத்தைத் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், "மாநாடு' தெலுங்கு ரீமேக் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாகசைதன்யா நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடிக்க உள்ளாராம். இயக்குநர் வெங்கட்பிரபுவே தெலுங்கு ரீமேக்கையும் இயக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

-எம்.கே.

nkn050322
இதையும் படியுங்கள்
Subscribe