தனிமையில் கீர்த்தி!
நடிகை கீர்த்தி சுரேஷ், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
"அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கை களையும் மேற்கொண்டும், லேசான அறிகுறிகளு டன் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இது வைரஸ் பரவும் வேகம் தொடர் பான பயமுறுத்தும் ஒரு நினைவூட்டல். அனைத்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறை களையும் பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும். தற்போது, நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தயவுசெய்து பரிசோதனை செய்துகொள்ளவும்.
நீங்கள் இன்னும் தடுப்பூசி போட வில்லை என்றால் தீவிரமான கொரோனா அறிகுறிகளைத் தவிர்க்கவும், உங்களுடைய நலனுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கி யத்திற்காகவும், தயவுசெய்து தடுப்பூசிகளை விரைவாக போட்டுக் கொள்ளுங்கள். விரைவில் இதிலிருந்து குணமடைந்து மீண்டும் செயல்படத் தொடங்குவேன்'' என்று நம்புகிறேன்.
இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
"கைதி' இந்தி ரீமேக் தொடக்கம்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான "கைதி' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.
"கைதி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில், தான் நடிக்கவுள்ளதாக கடந்த 2020-ஆம் ஆண்டே பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் தெரிவித்திருந்த நிலையில்... தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தியில் "போலா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தர்மேந்திர சர்மா இயக்க, "ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனமும் "அஜய் தேவ்கன் பிலிம்ஸ்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தாண்டு தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவரும் திட்டத்தில் படக்குழு உள்ளதாம்.
களையிழந்த பொங்கல் திருவிழா!
கொரோனா, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. "திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்' என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, "வலிமை', "ஆர்.ஆர்.ஆர்.', ராதே ஷியாம் உள்ளிட்ட பெரிய படங்கள் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கின.
சசிகுமார் நடிப்பில் உருவான "கொம்பு வச்ச சிங்கம்டா', காமெடி நடிகர் சதீஸ் நாயகனாக நடித்துள்ள "நாய் சேகர்', "குக் வித் கோமாளி' பிரபலம் அஷ்வின் நடிப்பில் "என்ன சொல்ல போகிறாய்', விதார்த் நடிப்பில் "கார்பன்' ஆகிய படங்கள் போகி தினத்தன்று வெளியாகின. பிரபுதேவா நடிப்பில் உருவான "தேள்' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகியது. சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை எந்தப் படமும் பெறாவிட்டாலும்கூட திரையரங்கில் படம் பார்க்காமல் பண்டிகை நாள் முழுமையடையாது என கருதும் சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படங்கள் வெளியானதே ஆறுதல்தான்.
விஸ்வரூபம் எடுக்கும் சித்தார்த் விவகாரம்!
பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதியிலேயே திரும்பினார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்... பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து, சாய்னா நேவாலை விமர்சிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டார். அப்பதிவில் இரட்டை அர்த் தம் தரக்கூடிய வார்த்தைகள் இருந்ததால் சித்தார்த்தின் அந்த ட்வீட் பெரும் சர்ச்சையானது. இந்திய அளவில் கடும் கண்டனங் கள் எழுந்ததையடுத்து, நடிகர் சித்தார்த் தன்னு டைய கருத்திற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரினார். இதற்கிடையே, சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை கேட்டுக்கொண்ட தேசிய மகளிர் ஆணையம், சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறைக்கு கடிதமும் அனுப்பியது. அதேபோல மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.யிடம் புகார், ஹைதராபாத் சைபர் க்ரைம் பிரிவில் புகார் என, தனி நபர்களும் அடுத்தடுத்து சித்தார்த் மீது புகார் அளித்த நிலையில்... ஹைதராபாத் சைபர் க்ரைம் போலீசார் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சமூகப் பொறுப்புடன் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவரும் நடிகர் சித்தார்த், சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறார். தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக நடிகை சமந்தா அறிவித்த நேரத்தில் நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
-இரா.சிவா