வாய்ப்பளிக்கும் டாப்ஸி!
கோலிவுட், பாலிவுட் என இந்தியா முழுவதும் தனது நடிப்பின் மூலம் பிரபலமானவர் டாப்ஸி. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள், வித்தியாசமான கதைக்களங் களை உடைய படங்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள டாப்ஸி அண் மையில் தயாரிப்பு துறை யிலும் கால்பதித்தார். "நெப் போட்டிசம்' எனப்படும் வாரிசு நடிகர்களுக்கு வாய்ப் பளிக்கும் பாலிவுட்டின் பழக்கத்தைக் கடுமையாக விமர்சித்து வந்த டாப்ஸி, "அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி, அதன் மூலம் பின்புலம் இல் லாத திறமைசாலி களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
அந்த வரிசை யில் இவருடைய தயாரிப்பில் நாயகியை மையப் படுத்திய த்ரில்லர் படம் ஒன்று தயாராக வுள்ளது. இதில் நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளதாகக் கூறப் படுகிறது. இதற்கான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளி யாகும் என்றும் தெரிகிறது. நடிகை சமந்தா விவாகரத்தின் போது அவருக்கு ஆதரவாக நின்றவர்களில் முக்கியமானவர் டாப்ஸி என்பது குறிப்பிடத் தக்கது.
ஷாக் மேனன்!
கவுதம் மேனன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் படங்கள் டிசைன் டிசைனாக பல சிக்கல்களைச் சந்திப்பது வழக்கம். படம் பாதியில் கைவிடப்படுவது, ஷூட் முடிந்தும் ரிலீஸ் செய்ய முடியாமல் இருப்பது எனச் சிக்கல்கள் சுழற்றி அடித்தாலும், நடிகராக கவுதம் மேனன் பெரிதாக சிக்கல்கள் எதுவும் இல்லாமல்தான் பணியாற்றி வருகிறார். இவர் நடித்த பல படங்களிலும் இவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது. இப்படி நன்றாகச் சென்று கொண்டிருந்த ஆக்டிங் கரியரி லும் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது "அன்புச் செல்வன்' படம்.
கவுதம் மேனன், அறிமுக இயக்குநர் வினோத்குமார் என்பவரது இயக்கத்தில் "அன்புச் செல்வன்' படத்தில் நடிக்கவுள்ள தாகக் கூறி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. பல்வேறு திரை பிரபலங்களும் இந்த போஸ்டரை ஷேர் செய்துவந்தனர்.
இந்நிலையில், "அன்புச் செல்வன்' என்ற படம் உருவாவது தனக்கே தெரியாது எனத் தெரிவித்த கவுதம் மேனன், "இந்த செய்தி எனக்கு அதிர்ச்சி யளிக்கிறது. நான் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தைப் பற்றி எனக்கே தெரியாது'' எனக்கூறி ரசி கர்களுக்கு அதிர்ச்சியளித் தார். "தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை வெளியிடு கிறது. ஆனால், நடிகர் அந்த படம் குறித்துத் தெரியாது என்கிறாரே' என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பம் குறித்து பதிலளிக்கும் சினிமா வட்டா ரங்கள், "வேறொருவரின் இயக்கத் தில் வேறொரு தலைப்பில் படம் நடிக்கவே கவுதம் மேனன் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால், இயக்குநர் மற்றும் படத்தின் தலைப்பை திடீரென மாற்றியதாலேயே இந்த குழப்பம்' எனவும் கூறுகின்றன.
கோல்டன் திரிஷா!
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டுத் துறை, கலைத்துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய "கோல்டன் விசாவை வழங்கு கிறது. வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கக் கூடிய இந்த விசா'வை இந்தியா வில் ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன்லால், துல்கர் சல்மான், மம்மூட்டி உள்ளிட்ட பலர் பெற்றிருக்கிறார்கள்.
அதேபோல ஊர்வசி ரவுடெல்லா, ஆஷா ஷரத், ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிகைகளும் இந்த கோல்டன் விசாவை பெற்றிருந்தாலும், தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகை களில் யாரும் இந்த விசாவை இதுவரை பெறாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், முதன் முதலாக அமீரகத்தின் இந்த கோல்டன் விசாவை பெற்றுள் ளார் த்ரிஷா. இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஐக்கிய அரபு அமீரகத் தின் கோல்டன் விசாவைப் பெறும் முதல் தமிழ் நடிகை என்பதில் பெருமைப்படுகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவுக்கு கிடைத்த இந்த கௌரவத்திற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-எம்.கே.