தமன்னா புது அவதாரம்!

f

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் "கே.ஜி.எஃப் - சேப்டர் 1'. இப்படத்திற்கு கிடைத்த அதிரிபுதிரியான வரவேற்பைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை சூட்டோடுசூடாக ஆரம்பித்தது படக்குழு. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. கொரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட் டாலும், அவ்வப்போது படத்தின் போஸ்டர்களை மறக் காமல் ரிலீஸ் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது படக்குழு. போஸ்டர்கள் அடுத்தடுத்து வந்து எதிர்பார்ப்புகள் எகிற, படம் எப்போது வரும் என வெய்ட்டிங்கில் இருந்தனர் ரசிகர்கள்.

"கே.ஜி.எஃப் சேப்டர் 2' திரைப்படம் ஜூலை 16-ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு கடந்த ஜனவரி மாதமே அறிவித்தாலும், கொரோனா பரவலால் இந்த திட்டம் சொதப்பியது. இந்தச்சூழ -ல், ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு, இயல்புநிலை மெல்ல திரும்பிவருவதால், படத்தின் புதிய ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, "கே.ஜி.எஃப் - சேப்டர் 2' படம் 2022, ஏப்ரல் 14-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராக்கி பாயின் ரீஎண்ட்ரிக்காக காத்திருந்த ரசிகர்கள் ரிலீஸுக்கான கொண்டாட்டங்களை இப்போதே சமூகவலைத் தளங்களில் தொடங்கிவிட்டனர்.

Advertisment

மிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. 2005-ஆம் ஆண்டு பா-வுட் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான தமன்னா, அயன், பையா, வீரம் எனப் பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஹிந்தி, தெலுங்கு என சுமார் அரை டஜன் படங்களில் பிஸியாக நடித்துவரும் இவர், தற்போது எழுத்தாளராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

tamana

லைஃப்ஸ்டைல் பயிற்சியாளரும் எழுத்தாளருமான லூக் காவ்டின்ஹோ உடன் இணைந்து "பேக் டூ தி ரூட்ஸ்'’என்ற புத்தகத்தை தமன்னா எழுதியுள்ளார். இந்தியாவின் பண்டைய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகள் மூலம் நோய்களைத் தடுப்பது, ஆரோக்கியத்துடன் ஆயுளை நீட்டித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்து இப்புத்தகத்தில் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார் தமன்னா.

Advertisment

ளம்பாடகர்கள் ‘தெருக்குரல்’ அறிவு மற்றும் தீ குர-ல் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த மார்ச் மாதம் வெளியான பாடல் "என்ஜாய் எஞ்சாமி'. சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தில் வெளியான இப்பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் அடித்தது. இதுவரை யூட்யூபில் 31 கோடி பார்வையாளர்களை இப்பாடல் கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாஜா தளத்தில் ஷான் வின்சென்ட் டி பால், நவ்ஸ் -47, சந்தோஷ் நாராயணன் குர-ல் "நீயே ஒளி' என்ற பாடல் வெளியானது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ff

இந்த இரண்டு பாடல்களையும் குறித்தும் பிரபல பத்திரிகையான "ரோ-ங் ஸ்டோன்ஸ்'-ன் ஆகஸ்ட் மாத இந்திய இதழில் கட்டுரை வெளியானது. அதற்கான அட்டைப்படத்தில் பாடகி தீ மற்றும் ஷான் வின்சென்ட் டி பால் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவரான ‘தெருக்குரல்’ அறிவின் புகைப்படம் இதில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களைக் கிளப்பியது. இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், "நீயே ஒளி மற்றும் என்ஜாய் எஞ்சாமியின் பாடலாசிரியரும் பாடகருமான ‘தெருக்குரல்’அறிவு மீண்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார். ரோ-ங் ஸ்டோன் இந்தியா மற்றும் மாஜா (ஆகியோருக்கு), இந்த இரண்டு பாடல்களின் வரிகளுமே, பொதுவெளி அங்கீகாரம் அழிக்கப்படுவதற்கு எதிரான சவால்தான் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கஷ்டமா?'' எனக் கேள்வி எழுப்பி யுள்ளார்.