Advertisment

டூரிங் டாக்கீஸ்! கிளம்பீட்டாங்க...

tt

தேர்தல் பரபரப்பு தற்காலிகமாக ஓய்ந்திருக்கிறது. தேர்தல் முடிந்ததும் உச்ச நட்சத்திரங்கள் மூவர் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டனர். அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதி காத்த சூப்பர் ஸ்டாரை "தாதா சாகேப் பால்கே' விருது தேடி வந்தது. விருது கொடுத்த பிரதமர், மத்திய அமைச்சர் ஆகியோருக்கும், வாழ்த்தியவர்களுக்கும் நன்றி மட்டுமே தெரிவித்த ரஜினி, வாக்களிக்க வந்தபோதும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மௌனம் காத்தார். தேர்தல் முடிந்த நிலையில், மீண்டும் "அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் கிளம்பிவிட்டார்.

Advertisment

கோவை தெற்கில் போட்டியிட்ட கமல் ஹாசன் தொடர் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்தார்

தேர்தல் பரபரப்பு தற்காலிகமாக ஓய்ந்திருக்கிறது. தேர்தல் முடிந்ததும் உச்ச நட்சத்திரங்கள் மூவர் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டனர். அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதி காத்த சூப்பர் ஸ்டாரை "தாதா சாகேப் பால்கே' விருது தேடி வந்தது. விருது கொடுத்த பிரதமர், மத்திய அமைச்சர் ஆகியோருக்கும், வாழ்த்தியவர்களுக்கும் நன்றி மட்டுமே தெரிவித்த ரஜினி, வாக்களிக்க வந்தபோதும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மௌனம் காத்தார். தேர்தல் முடிந்த நிலையில், மீண்டும் "அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் கிளம்பிவிட்டார்.

Advertisment

கோவை தெற்கில் போட்டியிட்ட கமல் ஹாசன் தொடர் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்தார். அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட காலில் வலி ஏற்பட, வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி நடந்தார். வாக்குப்பதிவு நாளில் கோவையில் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் தன்னைப் படம்பிடிக்க வந்த செய்தியாளரை வாக்கிங் ஸ்டிக்கால் தாக்கியதாக பரபரப்பு கிளம்பியது. மறுநாளே தனது அடுத்த பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் "விக்ரம்' பட ஷூட்டிங்குக்காகப் பறந்து சென்று விட்டார்.

Advertisment

tt

வாக்களிக்க சைக்கிளில் வந்து சலம்பல் செய்த தளபதி விஜய், தி.மு.க.விற்கு ஆதரவாகத்தான் கருப்பு-சிவப்பு சைக்கிளில் வந்தார் என்றும், பெட்ரோல் விலை உயர்வை எதிர்க்கத்தான் சைக்கிளில் வந்தார் எனவும் விவாதங்கள் கிளம்பின. "எந்த நோக்கமும் இல்லை, டிராஃபிக்கை தவிர்க்கத்தான் சைக்கிளில் வந்தார்' என அறிக்கை கொடுத்தது அவர் தரப்பு. பரபரப்பிலிருந்து விலகி அமைதியாகத் தனது அடுத்த பட ஷூட்டிங்குக்காக ஜார்ஜியா பறந்துவிட்டார். "தளபதி 65'யை இயக்குவது 'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார்.

இந்த வரிசையில் வாக்களிக்க வந்து வழக்கத்துக்கு மாறாக சர்ச்சை ஆனார் அஜித். எங்குமே பார்க்க முடியாத "தல'யை இங்கு பார்த்துவிடலாம் என ஒவ்வொரு தேர்தலின்போதும் திருவான்மியூர் வாக்குப்பதிவு மையங்களை சூழ்வது அஜித் ரசிகர்களின் வழக்கம். பெரும்பாலும் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்கும் அஜித், கூட்டம் கூடிவிடுவதால் போலீசாரால் உள்ளே அழைத்துச் செல்லப்படுவார். இந்த முறையும் அஜித்தைப் போலீஸ் அழைத்துச் செல்ல, அவரைச் சுற்றிவந்து செல்ஃபி எடுக்க முயன்றனர் ரசிகர்கள். மாஸ்க் இல்லாமல் வந்த ரசிகர் ஒருவரின் போனைப் பிடுங்கிய அஜித், அவரை எச்சரித்தார். சற்றுநேரத்தில் அவரே அந்த ரசிகரை அழைத்து போனைக் கொடுத்து மன்னிப்பு கேட்டு, அட்வைஸ் செய்தார். அஜித்தின் கோபத்தை சிலர் விமர்சிக்க, மீண்டும் அழைத்து அட்வைஸ் செய்ததைப் பலர் பாராட்டுகின்றனர். தல-தளபதி இருவருமே எலெக்ஷன் ட்ரெண்டாகினர்.

மால்தீவ்ஸ்... இப்போ ரொம்ப ஹாட்!

t

கடந்த ஆண்டு திடீரென அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக எங்கும் போக முடியாமல் தவித்த நட்சத்திரங்கள் லாக்டவுன் தளர்த்தப்பட்டவுடன் அதிகம் பறந்தது மாலத்தீவுக்குதான். உலகின் பல நாடுகளும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில்... மாலத்தீவு இந்திய விருந்தினர்களை வரவேற்றது. சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவில் பொழுதுபோக்கினார். காஜல், தனது ஹனிமூனை மாலத்தீவில் இனிதாக்கினார். ஆலியா பட்டின் பிகினி படங்கள் இன்ஸ்ட்டாவில் சென்சேஷன் ஆகின. இப்படி கடந்த ஆண்டு நவம்பர் முதல் தற்போதுவரை நம் நடிகைகளின் பிகினி தோற்றங்களால் ஹாட்டாகியிருக்கிறது மாலத்தீவு. ஷ்ரத்தா கபூர், ஸ்ரீதேவி மகள் ஜான்வீ கபூர்... என நீள்கிறது லிஸ்ட். பிக்பாஸ் ஷிவானியும் இந்த லிஸ்ட்டில் அடக்கம்.

-வீபீகே

nkn140421
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe