ஒருவர் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தால், செயல்பட்டால், அவர்கள் விசாரணை அல்லது ரெய்டுக்கு ஆளாவார்கள் என்பது நம் அரசியல் பாரம்பரியம். அதிலும் சினிமா பிரபலங்கள் என்றால் ரெய்டுதானே? மோடியின் ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே பலமுறை ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்தவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். தமிழில் "இமைக்கா நொடிகள்' பட வில்லனாக நமக்கு அறிமுகமானவர். சமீபத்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பேசிவந்தார். இதைப் போலவே "ஆடுகளம்' ஹீரோயின் டாப்ஸி பன்னுவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை ஸ்ட்ராங்காக சொல்லிவந்தார். இந்த இருவரது வீடுகள், அலுவலகங்களில் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.
டாப்ஸி வீட்டில் சில பல கோடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அனுராக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் 300 கோடிக்கு மேலாக வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள்
ஒருவர் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தால், செயல்பட்டால், அவர்கள் விசாரணை அல்லது ரெய்டுக்கு ஆளாவார்கள் என்பது நம் அரசியல் பாரம்பரியம். அதிலும் சினிமா பிரபலங்கள் என்றால் ரெய்டுதானே? மோடியின் ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே பலமுறை ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்தவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். தமிழில் "இமைக்கா நொடிகள்' பட வில்லனாக நமக்கு அறிமுகமானவர். சமீபத்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பேசிவந்தார். இதைப் போலவே "ஆடுகளம்' ஹீரோயின் டாப்ஸி பன்னுவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை ஸ்ட்ராங்காக சொல்லிவந்தார். இந்த இருவரது வீடுகள், அலுவலகங்களில் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.
டாப்ஸி வீட்டில் சில பல கோடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அனுராக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் 300 கோடிக்கு மேலாக வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. சிலர் இது 650 கோடி என்கின்றனர். அனுராக் இதுகுறித்து எதுவும் பேசாமல் தன் வீட்டில் இருப்பது இதுதான் என்று சொல்வது போல ஆயிரக்கணக்கான டிவிடி மற்றும் புத்தகங்கள் உள்ள தன் வீட்டு அலமாரி முன் நின்று ஒரு போட்டோ எடுத்து வெளியிட்டார்.
டாப்ஸியோ ""என் வீட்டில் நடந்த ரெய்டில் வருமான வரித்துறையினர் தேடியது 3 விஷயங்கள்தான். எனக்கு இருப்பதாக சொல்லப்படும் பாரீஸ் பங்களா சாவி, எனக்கு தரப்படாத 5 கோடி ரூபாய்க்கான ஆவணம், 2013-இல் என் வீட்டில் நடந்ததாக நம் நிதியமைச்சர் சொல்லும் ரெய்டின் ஞாபகம்'' என்று கிண்டலாக ட்வீட் செய்தார். அதற்கு முன்பு டாப்ஸியின் காதலரும் இந்திய தடகள பயிற்சியாளருமான மேத்தியாஸ் போ, ""இந்த ரெய்டால் எங்க வீட்டில் தேவையில்லாத டென்ஷன் ஏற்பட்டுள்ளது. ஏதாவது செய்யுங்கள்'' என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரணுக்கு ட்விட்டரில் செய்தியனுப்ப, ""சட்டம் எல்லாவற்றுக்கும் மேலானது. நாம் நமது வேலையை பார்ப்போம்'' என்று ரிப்ளை கொடுத்தார் அமைச்சர்.
இவர்களுக்கு எதிரணியான கங்கனா ரனாவத் இந்த ரெய்டை ஆதரித்தும், வெளிநாட்டுப் பணம் வருகிறது என்றும் பா.ஜ.க. பார்வையில் தொடர்ந்து ட்வீட் செய்கிறார். இவரும் மகாராஷ்டிரா மாநில சிவசேனா அரசை விமர்சித்து நடவடிக்கைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச அடையாளத்தை மாற்றிய பாசம்!
ஷகிலா... இந்தப் பேரை கேட்டவுடன் வரும் ரியாக்ஷன் முன்பு வேறு. மலையாள சினிமா உலகில் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு டஃப் கொடுத்து வந்தன இவரது படங்கள். "சாஃப்ட் பார்ன்' எனும் வகையில் இவர் நடித்த பல படங்கள் தென்னிந்தியா மட்டுமன்றி வடக்கிலும் கொடிகட்டியவை. பின்பு அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதை நிறுத்தி பிற படங்களில் நடித்தபோதும் அவர் வரும் காட்சிகளில் ஒரு மாதிரியான இசை, இரட்டை அர்த்த வசனங்கள் என்று அவரது அடையாளம் தொடர்ந்தது. ஆனால் இப்போது அவரது அடையாளத்தை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மாற்றியிருக்கிறது.
"குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற ஷகீலாவை "அம்மா' என்று பாசமாக அழைத்தனர், பிற போட்டியாளர்களும் கோமாளிகளும். போட்டியாளர்கள் மதுரை முத்து, பாபா பாஸ்கர் போன்றோரும் கோமாளிகளாக வந்த புகழ், ஷிவாங்கி போன்றோரும் காமெடியில் கலக்கினர். இப்படி ஒரு பிரபலமான நிகழ்ச்சியில் தனது அடையாளமே மாறும் வகையில் பங்கேற்றதற்காக மகிழ்ச்சியில் இருக்கிறார் ஷகீலா. அது மட்டுமல்ல, வளர்ந்து வரும் காமெடி கலைஞரான புகழ், கார் வாங்கியதை தாங்கள் கார் வாங்கியதைப் போல கொண்டாடினர் சோசியல் மீடியா தமிழர்கள். அஷ்வின்-ஷிவாங்கி ஜோடியையும் ஆராதிக்கின்றனர்.
போட்டோ "பைத்தியம்'!
முன்பெல்லாம் சினிமா வாய்ப்பு தேடும் நடிகர்கள் போட்டோ ஷூட் நடத்தி ஆல்பம் தயார் செய்து தயாரிப் பாளர்கள், இயக்குனர்களிடம் கொடுப்பார்கள். இப்போது அது சுலபமாகி இருக்கிறது. ஒரு போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் போட்டுவிட்டால் அது சேரவேண்டியவர்களை சேர்கிறது. அதன் மூலம் வாய்ப்புகளும் கிடைப்பதால் வளரும் நடிக நடிகைகள் போட்டோ ஷூட்டில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
அதிலும் "கிரேஸி' (பைத்தியக்காரத்தனம்) என்று சொல்லும் அளவுக்கான புகைப்படங்கள் சீக்கிரம் பரவுகின்றன, கவனத்தைப் பெறுகின்றன. நடிகைகள் கவர்ச்சியாக எடுக்கும் போட்டோக்களுக்கு இன்னும் அதிக வரவேற்பு. 2019-இல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி அவருக்கு பல வாய்ப்புகளை பெற்றுத்தந்தன. "யதார்த்தமாதான் எடுத்தோம், இவ்ளோ வைரலாகும்னு நினைக்கவே இல்லை' என்று அப்பாவியாக சிரித்தார் ரம்யா. இப்போது அதே போலவே டி.வி. நடிகை பவித்ராவின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
புடவையைக் கட்டி, அதை கத்திரிக்கோலால் வெட்டி போட்டோ எடுத்திருக்கிறார் இவர். ""அது நான் ஒரு வருஷத்துக்கு முன்பு எடுத்த போட்டோ. இப்போ எனக்கே தெரியாம அதை திரும்ப ஷேர் பண்ணிட்டாங்க'' என்று இவரும் அப்பாவியாக சிரிக்கிறார்.
-வீ.பீ.கே.