Advertisment

டூரிங் டாக்கீஸ்! - கசமுசா லிஸ்ட்!

maheran.

பீதி கிளப்பும் நடிகை!

தொடர்ந்து பாலியல் சர்ச்சையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது... டோலிவுட்!

Advertisment

நடிகை ஸ்ரீரெட்டியின் அதிரடி குற்றச்சாட்டுகளால் அரண்டு கிடக்கும் நிலையில்... அமெரிக்காவிலிருந்து அடுத்த சர்ச்சை.

kishan

பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளரான மொகுடுமிடி கிஷன், தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்காவில் தெலுங்கு மக்கள் நிறைய வசிக்கிறார்கள். அதனால்... தெலுங்கு சினிமா சம்பந்தப்பட்டவர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

Advertisment

அப்படி தயாரிப்பாளர் கிஷனும், அவரின் மனைவி சந்திராவும் நடத்திய கலாச்சார நிகழ்ச்சிதான் கசமுசாவாகி... சிகாகோ நகர போலீஸார் அந்த தம்பதியை கைது செய்திருக்கிறார்க

பீதி கிளப்பும் நடிகை!

தொடர்ந்து பாலியல் சர்ச்சையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது... டோலிவுட்!

Advertisment

நடிகை ஸ்ரீரெட்டியின் அதிரடி குற்றச்சாட்டுகளால் அரண்டு கிடக்கும் நிலையில்... அமெரிக்காவிலிருந்து அடுத்த சர்ச்சை.

kishan

பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளரான மொகுடுமிடி கிஷன், தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்காவில் தெலுங்கு மக்கள் நிறைய வசிக்கிறார்கள். அதனால்... தெலுங்கு சினிமா சம்பந்தப்பட்டவர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

Advertisment

அப்படி தயாரிப்பாளர் கிஷனும், அவரின் மனைவி சந்திராவும் நடத்திய கலாச்சார நிகழ்ச்சிதான் கசமுசாவாகி... சிகாகோ நகர போலீஸார் அந்த தம்பதியை கைது செய்திருக்கிறார்கள்.

கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்துவரப்பட்ட சில தெலுங்கு நடிகைகளை ஒரு சிறிய அபார்ட்மெண்ட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள் கிஷன் தம்பதி. அக்கம்பக்க புகாரின் அடிப்படையில் அமெரிக்க போலீஸார்... அவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தியபோது... ஏகப்பட்ட ஆணுறை பண்டல்களும், ‘யார்... யார்கூட... என்னைக்கி, எம்புட்டு தொகை...’ என விவரமாக எழுதி வைத்திருந்த ஒரு நோட்டும் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் கிஷன் தம்பதி.

இந்நிலையில்...srireddy

தமிழில் "நோட்டா'’என்கிற படத்தில் நாயகியாக நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சடா.. தெலுங்கில் பிரபலமான நடிகை. ஒரு தெலுங்குப் படப்பிடிப்பிற்காக கனடா நாட்டுக்குச் சென்றவர்... படப்பிடிப்பு முடிந்ததும், தன் உறவினர்களைப் பார்ப்பதற்காக அமெரிக்கா போய் இறங்கினார். விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் மெஹ்ரீனிடம் விசாரித்தபோது... கிஷன் கசமுசா பரபரப்பாக அங்கே பேசப்படுகிற செய்தி தெரியாமல்... "நான் தெலுங்கு சினிமா நடிகை'’எனச் சொல்ல... கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மெஹ்ரீனை கேள்விமேல் கேள்வி கேட்டு விசாரணை நடத்திவிட்டு... ‘"இங்க தெலுங்கு சினிமா நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தின கிஷன் தம்பதி கைது செய்யப்பட்டிருக்காங்க. நீங்க தெலுங்கு நடிகைனு சொன்னதால் விசாரிச்சோம். அசௌகர்யத்திற்கு... ஸாரி'’எனச் சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதித்திருக்கிறார்கள்.

"இந்த விசாரணை எனக்கு அதிர்ச்சியாவும், அசிங்கமாவும் இருந்துச்சு...'’என வருத்தப்பட்டுள்ளார் மெஹ்ரீன்.

இப்படி ஒரு பிரச்சினை வெடிச்சா... ஸ்ரீரெட்டி சும்மா இருப்பாரா?

maheran

ஆஜர் ஆகிட்டார்.

"அமெரிக்காவுக்கு கலாச்சார நிகழ்ச்சி நடத்துறம்னு போய்... பாலியல் தொழிலில் ஈடுபட்ட தெலுங்கு நடிகைகள், டி.வி. தொகுப்பாளினிகள் லிஸ்ட்டும், அவங்க ஜாதகமும் என்கிட்ட இருக்கு'’’என பீதி ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீரெட்டி.

ஃபங்ஷன் - கலெக்ஷன்!

திறமைக்கான அங்கீகாரம் என்பது விருதுகள்தான். ஆனால் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் பெரும்பாலான விருது விழாக்கள்... ஸ்பான்ஸர் பிடித்து சேனல்களில் வர்த்தக நோக்கத்தோடு ஒளிபரப்பப்படுகின்றன. இதனால்... நடிகர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது.

"இப்படிப்பட்ட விருது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்கள்... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பணம் வாங்க வேண்டும். ஒருவேளை பணம் வாங்குவது பிடிக்காவிட்டால்... நடிகர் சங்க அறக்கட்டளைக்கு உங்களுக்குரிய பணத்தை செலுத்தச் சொல்லுங்கள். இதன்மூலம் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த கலைஞர்களுக்கு உதவ முடியும்'’என வேண்டுகோள் விட்டதுடன்... “ஹைதராபாத்தில் ஒரு பத்திரிகை நடத்தும் விருது விழாவில் நட்சத்திரங்கள் கலந்துகொள்ள... நடிகர் சங்க அறக்கட்டளைக்கு ஒரு தொகை தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் அதற்கு பதில் சொல்லவில்லை...’எனவும் தெரிவித்தது நடிகர் சங்கம்.

இந்த வேண்டுகோளை ஏற்று... நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்ட சிலர்... ஹைதராபாத்தில் நடந்த ஆங்கில பத்திரிகையின் விருது விழாவுக்குச் செல்லவில்லை.

-ஆர்.டி.எ(க்)ஸ்

touringtalkies nkn22.06.18
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe