டூரிங் டாக்கீஸ் டிரைலர்தான் விட்டிருக்காங்க!

tt

அது கல்யாணமே இல்ல... சும்மா விளையாட்டுக்கு...

நடிகர் விஜயகுமாரின் நட்சத்திர குடும்பத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் எப்போதும் பரபரப்பும் விறுவிறுப்புமாக லைம் லைட்டிலேயே இருப்பது வனிதாதான். சினிமாவில் பெரிய ரவுண்டு வராவிட்டாலும், பிக்பாஸ் பெர்ஃபார் மன்ஸால் சில மாதங்களுக்கு முன் ட்ரெண்டானார் வனிதா. அதற்கு முன்பு வரை தந்தை மீது குற்றச்சாட்டு, சொத்துத் தகராறில் பேட்டி என ஹார்டாகவே வலம்வந்த வனிதாவுக்கு அவரது மகள்களுடனான எமோஷனல் பந்தத்தால் மக்கள் மனதில் ஒரு சாஃப்ட் கார்னர் கிடைத்தது. பிக்பாஸ் புகழை அப்படியே மெயின்டெயின் செய்த வனிதா யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். அடுத்து வனிதா - பீட்டர் பால் திருமண, முத்த புகைப்படங்கள் வெளிவந்து வைரல் ஆகின. தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத், தன்னிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே வனிதாவுடன் தன் கணவர் திருமணம் செய்திரு

அது கல்யாணமே இல்ல... சும்மா விளையாட்டுக்கு...

நடிகர் விஜயகுமாரின் நட்சத்திர குடும்பத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் எப்போதும் பரபரப்பும் விறுவிறுப்புமாக லைம் லைட்டிலேயே இருப்பது வனிதாதான். சினிமாவில் பெரிய ரவுண்டு வராவிட்டாலும், பிக்பாஸ் பெர்ஃபார் மன்ஸால் சில மாதங்களுக்கு முன் ட்ரெண்டானார் வனிதா. அதற்கு முன்பு வரை தந்தை மீது குற்றச்சாட்டு, சொத்துத் தகராறில் பேட்டி என ஹார்டாகவே வலம்வந்த வனிதாவுக்கு அவரது மகள்களுடனான எமோஷனல் பந்தத்தால் மக்கள் மனதில் ஒரு சாஃப்ட் கார்னர் கிடைத்தது. பிக்பாஸ் புகழை அப்படியே மெயின்டெயின் செய்த வனிதா யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். அடுத்து வனிதா - பீட்டர் பால் திருமண, முத்த புகைப்படங்கள் வெளிவந்து வைரல் ஆகின. தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத், தன்னிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே வனிதாவுடன் தன் கணவர் திருமணம் செய்திருக்கிறார் என்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஆவேசமாகக் கூறியதை பற்றி சென்ற இதழில் கூறியிருந்தோம். எதிர்ப்புகளையும் சட்டத்தையும் பார்த்து ஜெர்க்காகி தங்கள் காதல் வேகத்துக்கு சற்று ப்ரேக் போட்ட வனிதா - பீட்டர் பால் ஜோடி, ""அய்யயோ... நீங்க எல்லாம் தப்பா நினைச் சுட்டீங்க. நாங்க இன்னும் திருமணமே பண்ணிக்கல. எங்க திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்படல. நாங்க முறையா எல்லா சிக்கலையும் தீர்த்துவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்வோம்'' என்று வனிதாவின் வழக்கறிஞர் மூலம் தெரிவித்தனர். அதாவது, இது கல்யாணப்படமல்ல, டிரைலர்தான் என்கிற ரேஞ்சில் விளக்கம் வந்தது.

tt

அடுத்த ஷாட்டாக, ""லாக்டவுன் காரணமாக, எங்க திருமண மோதிரமே வந்து சேரல... இப்போதான் என் கைக்கு கிடைத்தது. இனிமேல்தான் நிஜமான திருமணம் நடக்கப் போகுது. கடைசி மூச்சு வரை எங்க காதல் இருக்கும். அதுவரைக்கும் யாராலும் எங்களை பிரிக்க முடியாது... எதுவும் புடுங்க முடியாது...'' என்று கூறியிருக்கிறார் வனிதா. மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல என்று வனிதா ஆர்மிக்காரர்கள் அதை ஆமோதிக்கின்றனர். மறுமணம், உண்மையில் அவரவர் விருப்பம், உரிமை. அதில் உள்ள தில்லாலங்கடிகள்தானே இவ்வளவு சர்ச்சைகளுக்குக் காரணம்?

ஹீரோக்களை பீதியாக்கிய ஆன்லைன் ஆலோசனை!

தமிழ் திரைப்பட தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த பல நிறுவனங்கள் இன்று ஒதுங்கி நிற்கின்றன. கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே சொல்லும் காரணம் "முன்ன மாதிரி இல்லப்பா... இப்போ தயாரிப்பு செலவு ரொம்ப அதிகம்' என்பதுதான். அந்தத் தயாரிப்பு செலவில் பெரும்பங்கு வகிப்பது ஹீரோவின் சம்பளம். முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேலே அந்த ஸ்டாரின் சம்பளத்துக்கே செல்கிறது. இது, சில ஆண்டுகளாகவே சத்தமில்லாமல் பேசப்பட்ட விஷயம்தான். நூறு கோடி, இருநூறு கோடி என வசூல் சாதனை கணக்கு காட்டப்பட்ட படங்கள் பல தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்தான் என்கிறார்கள்.

பல துறைகளிலும் மாற்றத்தை கொண்டுவந்த கொரோனா லாக்டவுன், தமிழ் சினிமா உலகிலும் மாற்றத்தை கொண்டு வரும் என்கிறார்கள். இந்த லாக்டவுனுக்குப் பிறகு, ஹீரோக்களின் சம்பளம் பெருமளவில் குறைக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட ஆன்லைன் ஆலோசனை சமீபத்தில் நடந்ததாம். அதில், "இவுங்க எல்லாம் சம்பளத்தை வாங்கிக்கிட்டு, லாக்டவுனை வெக்கேஷனா கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. விதவிதமா போட்டோ போடுறாங்க, பேட்டி குடுக்குறாங்க. நம்மதான் வட்டி கட்டிக்கிட்டு இருக்கோம்' என்று பொங்கித் தீர்த்துவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள். டாப் நடிகர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே சம்பளம் குறைக்கப் படவேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். சம்பள விஷயத்தில் ஏற்கனவே சில பஞ்சாயத்துகள் நடக்கிறதாம். இந்த ஆன்லைன் ஆலோசனையால் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள் ரெக்கார்ட் கலெக்ஷன் நாயகர்கள்.

நான் இப்போ வெயிட்டை குறைச்சுட்டேன்... நீங்க என்ன செய்ய போறீங்க?

tt

பிக்பாஸ் மூலம் செகண்ட் ரவுண்ட் புகழ் பெற்ற இன்னொரு நடிகை ஷெரீன். 'துள்ளுவதோ இளமை'யென 'விசில்' அடித்து வலம் வந்தபோது கிடைக்காத வரவேற்பு இவருக்கு தற்போது கிடைத்திருக்கிறது. ஆனால், இவர் பல வருடங்கள் கழித்து டிவியில் தோன்றிய போது இவரது எடையையும் உடல்பருமனையும் பலர் கிண்டல் செய்தனர். இதனால் மனவருத்தப்பட்ட ஷெரீன் தற்போது கடும் முயற்சியின் மூலம் உடல் எடையை குறைத்து 90ஸ் கிட்ஸ் பார்த்த நாயகியாக திரும்பி வந்திருக்கிறார். ""நான் குண்டா இருந்தப்போ எப்படியெல்லாம் பேசுனீங்க? இப்போ நான் குறைச்சுட்டேன். நீங்க பேசுனத திரும்ப வாங்க முடியுமா? இப்போ என்ன பண்ணுவீங்க"" என்று ஆதங்கத்துடனும் ஆனந்தத்துடனும் கேட்கிறார்.

-வி.பி.கே.

nkn110720
இதையும் படியுங்கள்
Subscribe