எத்தனை நாளைக் குத்தான் பூனைக்குட்டியை... அதிலயும் காதல் பூனைக் குட்டியை மறைக்க முடியும்? அதான்... சட்டுனு வெளிய வந்திருச்சு.
டாப்ஸி பலநாட்களாக தான் மறைத்து வந்திருந்த "காதலர் யார்?' என்கிற சஸ்பென்ûஸ சமீபத்தில் உடைத்தார்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ தன்காதலர் என்பதைச் சொல்லிவிட்டார்.
--------------------------------
‘பாகுபலி’ ராணா டகுபதி, தன் காதலியை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
ராணாவும், த்ரிஷாவும் பலவருடங்களாக காதலித்து வந்தனர். த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்த ஹைதராபாத் பிரியாணியை விமானம் மூலம் பார்சலில் அனுப்பிவைக்கிற அளவுக்கு இவர்களின் பிரேமம் பிரசித்திபெற்றாதாகத்தான் இருந்தது. ஆனால்... இவர்களின் காதலுக்கு ராணாவின் தாத்தாவும், ‘வசந்தமாளிகை’ உட்பட 150 படங் களை தமிழ்- தெலுங்கு- இந்தியில் தயாரித்தவரு மான ராமாநாயுடு ஏற்கவில்லையாம். இதனால் தான் த்ரிஷா- ராணா காதல் பிரேக்-அப் ஆனது.
இப்போது தனது புது காதலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராணா.
ஹைதராபாத்தில் ஈவன் மேனேஜ்மெண்ட் நடத்தும், வடமாநிலத்தைச் சேர்ந்தவரான மிஹீகா பஜாஜ் என்கிற பெண்ணுடன் ராணாவுக்கு காதல் ஏற்பட்டது.
இருவீட்டாரும் இவர்களின் காதலுக்கு ஒப்புதல் அளித்த நிலையில்... அதிகாரப்பூர்வமாக தன் காதலியை அறிமுகம் செய்திருக்கிறார் ராணா. வரும் டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது.
--------------------------------
"மேயாத மான்' படம் மூலம் அறிமுகமாகி... கமலுடன் "இந்தியன் -2' படத்தில் நடித்துவரும் பிரியா பவானி சங்கர் தன் காதலரை அறிமுகம் செய்துள்ளார்.
‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஏ.சூர்யாவும், பிரியா பவானியும் சேர்ந்து நடித்தனர். அதனால் பிரியா மீது சூர்யாவுக்கு லவ் ஏற்பட்டதாகவும், ஆனால் சூர்யாவுக்கு தன்னைவிட வயது ரொம்ப அதிகம் என்பதால் அந்த காதலை பிரியா ஏற்க மறுத்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதை சூர்யாவும் மறுத்தார். பிரியாவும் மறுத்தார். இருப்பினும் வதந்தியின் வீரியம் குறையவில்லை. இதனால்... சமீபத்தில்... தான் ஒருவரை சில வருடங்களாக காதலிப்பதாகச் சொன்ன பிரியா இப்போது தன் காதலர் யார் என்பதை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
காதலருடன் இருக்கும் புகைப் படத்தை வெளியிட்டிருப்பதுடன்... "மாப்பிள்ளை இவர்தான்... இவர் போட்டிருக்க கண்ணாடி என்னோ டது'’ என காதலரை கலாய்த்து... அறிமுகப்படுத்தியுள்ளார் பிரியா.
--------------------------------
ரஷ்யக்காரரான... ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் தொழிலதிபரை காதலித்து மணந்துகொண்டு... சமீ பத்தில் ஸ்பெயினில் குடியேறியிருக் கிறார் ஸ்ரேயா. இதே பாணியில்... ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து வருவ தாகச் சொல்லி.... காதலரை அறிமுகப் படுத்தியுள்ளார் இஷா குப்தா.
--------------------------------
விஜய்யின் ‘துப்பாக்கி’ சூர்யாவின் ‘அஞ்சான்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கும் வித்யூத்... ஆதா சர்மாவின் மனசிலும், ஆதா சர்மா... வித்யூத் மனசிலும் இடம்பிடிக்க காதல் கர்சீப் போட்டு வைத்திருக்கிறார்கள் போல.
""ஆதா சர்மாவும் நானும்... அன்பானவர்கள்... வெளிப்படையானவர்கள்... ஒருவர் மீது ஒருவர் அக்கறையானவர்கள்... எங்கள் இருவரிடையே இருக்கும் பழக்கும்.... நட்பையும் தாண்டியது'' என வித்யூத் சொல்ல...
""வித்யூத் சொல்வதை ஏற்கிறேன்...''“என ஆதாவும் சொல்லியுள்ளார்.
--------------------------------
இப்படி பூனைக் குட்டிகள் வெளியே வந்திருக்கிற... ஊரடங்கல் நேரத்தில்... தன்னுடைய காதல் பூனைக்குட்டி எப்படி இருக்கணும்? என்கிற எதிர் பார்ப்பைச் சொல்லியிருக்கிறார் காஜல் அகர்வால்.
“எனக்கு ராஜ குமாரன் வேண்டாம். என்னை புரிந்து கொண்டு... என்னோட உணர்வுகளுக்கு மதிப் பளிக்கிற சராசரியானவர் போதும்’எனச் சொல்லியுள்ளார்.
பூனை வெளியே வந்திருச்சு... கவர்ந்திழுக்கிற கருவாடுவை நோக்கி பூனை பாய்ஞ்சிராம பத்திரமா பாத்துக்கங்க.
-ஆர்.டி.எ(க்)ஸ்