மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
"என்னப் பெத்த ஆத்தா... ஒன்னப்போல வருமா?' என பிரபல நடிகைகள் தங்கள் அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்தை வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கியிருக்கிறார்கள்.
சில நடிகைகளின் அம்மாக்களோ... "நாம் பெத்த மக்கா...' என பாசமழை பொழிந்திருப்பதுடன்... "கல்யாணம் கட்டிக்க...'’ என தங்கள் மகள்களை எதிர்கால அம்மாக்களாக்கிப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்கள்.
""அம்மா... இது உங்கள் நாள், நான் உங்களை எந்தளவு நேசிக்கிறேன் என்று என்னால் சொல்ல இயலாது. எங்களின் எல்லா கதைகளுக்கும் பின்னால் எங்கள் தாய்மார்களின் கதை இருக்கிறது, ஏனென்றால் தாயே... எங்கள் கதை உங்களிடமிருந்துதான் தொடங்குகிறது. என் கதையை எழுதியதற்கும், வாழ்க்கைப் பயணம் முழுவதும் என் பலமாக இருப்பதற்கும் நன்றி அம்மா. தன்னலமற்றவராக, கனிவாக, அன்பைப் புரிந்துகொள்பவராக, அச்சமற்ற சுதந்திரமான பெண்ணாக இருப்பது... மிகமிக முக்கியமாகச் சொல்வதானால்... சமநிலையுடன் இருப்பது எப்படி என்பதை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். என்னால் எப்போதுமே தாங்கள் காட்டும் அன்பிற்கு... தியாகத்திற்கு... போதுமான நன்றியைச் சொல்ல முடியாது... உன்னை நேசிக்கிறேன் அம்மா'' என ரகுல் பிரீத் சிங் உருகியிருக்கிறார்.
""எப்போதும் முன்மாதிரியாக இருந்து... வழிநடத்தும் பெண்மணியை, என் இதயம் பெருமையுடன் விம்மி, வணங்குகிறது. அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா’’ என தன் அம்மாவுக்கு வாழ்த்துச் சொல்லியுள்ளார்'' காஜல் அகர்வால்.
""நான் எப்பவுமே சோர்வடை வேன்னு நினைக்கவில்லை, ஏன்னா... ஒவ்வொரு முறையும் நான் உங்க முகத்தைப் பார்த்து, உங்கள் குரலைக் கேட்கும்போது, உங்கள் மகளா நான் ரொம்ப அதிர்ஷ்டசாலியா உணர்றேன். நீங்கள் எனக்கு வழங்கிய நிபந்தனையற்ற அன்பின் சக்தியை எந்த மொழியாலும் வெளிப்படுத்த முடியாது! ஹேப்பி மதர்ஸ் டே...’’ என அம்மாவைப் பெருமைப்படுத்தியிருக்கிறார். இந்த அன்னையர் தினத்திலிருந்து தன் தாய் மொழியான சிந்தி மொழியை சரளமாகப் பேச...'' தன் அம்மாவிடமிருந்து கத்துக்கப்போறாராம் தமன்னா.
""அம்மா... நீங்கள் என்னை வியக்க வைக்கிறீர்கள்...என்னோட அஸ்தி வாரம்... ஆணிவேர்... தாங்கிப் பிடித் தல்... மன்னித்தல்... எல்லையற்ற காதல்...'' என அம்மாவின் அருமை சொல்லி மகிழ்ந்திருக்கிறார் அமலா பால்.
""என்னுடைய சூப்பர் உமன், எனது முன்மாதிரி... என் அம்மாதான். கருணையும் இருக்கும் தைரியமும் இருக்கும் ஒரே பெண்மணி அவர் தான்'' என்றும், தனது துணிச்சலுக் குக்காரணம் தன் தாயார்தான் என்றும் வரலட்சுமி சரத் தன் தாயை வாழ்த்தியுள்ளார்.
தங்களின் பாசக்கார மகளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு... அம்மாவாக்கிப் பார்க்கும் ஆசை... அன்னைக்கு இருக்கும். அன்னையர் தினத்தையொட்டி... தன் அந்த ஆசையை வெளியிட்டிருக்கிறார்கள் இரண்டு பிரபல நடிகைகளின் அம்மாக்கள்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ’மத்தியாஸ் போ’ இந்தியாவில் சில போட்டிகளில் விளையாட வ்ந்தார். உ.பி.யில் லக்னோ நகரில்... போட்டியில் சிறப்பு விருந்தினராக கல்ந்துகொண்ட டாப்ஸியை பார்த்த்தும்... போவின் லப்-டப் டாப் கியரில் எகிற ஆரம்பித்தது. அடுத்து டெல்லியில் நடந்த போட்டியில் காட்சி ஆட்டமாக போவுடன் பேட்மிண்டன் விளையாடினார் டாப்ஸி.அப்போதுதான் போவின் காதல் டாப்ஸியை ‘வா’ என்றது. டாப்ஸியின் இந்த காதல் குறித்து 2015-ஆம் ஆண்டிலேயே நக்கீரனில் ‘லவ் லப்-டப்’ தொடரில் விரிவாக எழுதியிருந்தோம். ஆனால்... மீடியாக்களிடம் தன் காதலை மறுத்தே... மறைத்தே...வந்த டாப்ஸி... அன்னையர் தினத்தையொட்டி... தன் அம்மா பச்சைக்கொடி காட்டியதால்... மத்தியாஸýடனான காதலை பகிரங்கமாக ஒப்புகொண்டிருக்கிறார்.
""அவளோட திருமணப் பேச்சை எடுத்தாலே... ‘இப்ப என்ன அவசரம்’கிறா. அவளுக்குனு ஏதாவது ஆசை இருக்கலாம்கிறதுனால... ’உனக்கு தகுந்தமாதிரி ஒரு நல்ல பையனை நீயே பாரு’னு சொன்னேன். அதையும் செய்யல. அதனால... நாங்க அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை தேடப் போறோம். நல்ல பையனா இருந்து... ஒருவேளை அவளைவிட வயசு குறைஞ்ச பையனா இருந்தாலும் ஓ.கே.தான் எங்களுக்கு. ஆனா அவளோ... குறைஞ்சது என்னைவிட ஒரு வயசாவது மூத்த மாப்பிள்ளையா பாருங்க’’னு சொல்றா...''’ என ரகுல் பிரீத்தின் தாயார் சொல்லியிருக்கிறார்.
இப்ப சொல்லப்போறதுதான் கொஞ்சம் ஸ்பெஷலான அன்னையர் தின வாழ்த்து!
“உலகத்துக்கு நீங்க அம்மா. ஆனா.. குடும்பத்துக்கு நீங்கதான் உலகம்’’ என தன் தாயாருக்கு முத்தமிட்டு... அன்னையர் தின வாழ்த்தைச் சொல்லியிருக்கிறார் நயன்தாரா.
’தன்னலமில்லா உள்ளம் கொண்ட உலகின் ஒரே ஜீவன் அம்மா’’ என தன் அன்னைக்கு வாழ்த்தை பதிந்துள்ள நயன் தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்...நயன் தாராவுக்கும் அன்னையர் தின வாழ்த்தைச் சொல்லியுள்ளார். கூடவே.... “என் எதிர்கால குழந்தை களின் அன்னையின் கையிலிருக்கும் குழந்தையின் அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்து கள்’’ என நயன் ஒரு குழந் தையை தூக்கிக் கொஞ்சம் ஒரு புகைப்படத்திற்குக் கீழே பதிவிட்டுள்ளார்.
அன்னை ஆகிற அன்னிக்கி வாழ்த்துச் சொல்லிக்கலாம்னு இல்லாம... அட்வான்ஸ்ஸôவே வாழ்த்து சொல்லியிருக்கிறார் விக்னேஷ்.
இதன் மூலம்... ‘வீட்டுல விசேஷமோ?’ என பரபரப்பாக பேசவச்சிருக்கார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்