""கொரோனா வைரஸ் பரவல் நேரத்தில்... மதுக்கடையை மீண்டும் திறக்கா தீங்க...'' என ஏற் கனவே டைரக் டர் தங்கர்பச்சா னும், ""மதுபழக்கத் துலருந்து விடுபட இந்த லாக்-டவுனை நல்ல வாய்ப்பா பயன்படுத்திக் கங்க'' என சேரனும் சொல்லியிருந்தனர்.
டாஸ்மாக் திறக் கப்படுவதாக அறிவிப்பு வந்ததும்... மீண்டும் அவர் கள் இருவரும் "வேண்டாம்'’கோரிக்கையை விடுத்தனர்.
’கடை திறந்ததும்... மடைதிறந்த வெள்ளம் மாதிரி.... குடிமக்கள் வரிசை கட்டிவிட்டனர் சரக்கு வாங்க. இது... இத்தனை நாட்களாக கடைப்பிடிக்கப்பட்ட சோஷியல் டிஸ்டன்சையே... போதைக்கு ஊறுகாயாக ஆக்கிவிட்ட
""கொரோனா வைரஸ் பரவல் நேரத்தில்... மதுக்கடையை மீண்டும் திறக்கா தீங்க...'' என ஏற் கனவே டைரக் டர் தங்கர்பச்சா னும், ""மதுபழக்கத் துலருந்து விடுபட இந்த லாக்-டவுனை நல்ல வாய்ப்பா பயன்படுத்திக் கங்க'' என சேரனும் சொல்லியிருந்தனர்.
டாஸ்மாக் திறக் கப்படுவதாக அறிவிப்பு வந்ததும்... மீண்டும் அவர் கள் இருவரும் "வேண்டாம்'’கோரிக்கையை விடுத்தனர்.
’கடை திறந்ததும்... மடைதிறந்த வெள்ளம் மாதிரி.... குடிமக்கள் வரிசை கட்டிவிட்டனர் சரக்கு வாங்க. இது... இத்தனை நாட்களாக கடைப்பிடிக்கப்பட்ட சோஷியல் டிஸ்டன்சையே... போதைக்கு ஊறுகாயாக ஆக்கிவிட்டது. இதனால்... கமல், பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள்... "ஓப்பன் தி சரக்கு ஷாப்'ப்பிற்கு எதிராக ஹாட்டாகியிருக்கிறார்கள். அதிலும் கமல் ரொம்பவே ராவாக அரசையும், ஆளும் கட்சியையும் திட்டியிருக்கிறார். ஆனாலும் ‘எதிர் கட்சிகளின் டாஸ்மாக் ஷாப் திறப்புக்கு எதிரான கருப்புக் கொடி போராட் டத்தில்’ மதுபான தொழிற்சாலை நடத்தும் சில தலைவர்களே கலந்துகொண்டதைப் போல... கடையையும் திறந்துவச்சிட்டு... கொரோனா தடுப்பு நடைமுறையையும் உபதேசித்திருக்கிறது அரசு.
அதெல்லாம் நமக்கெதுக்கு...
சரக்குக் கடைகள திறக்குறதுக்கு முன்னாடி... மது விரும்பிகள் பலரையும் வயிறெரிய விட்டவர் ஸ்ரீ ரெட்டிதான்.
லாக்-டவுன் நேரத்துல ஸ்ரீக்கு மட்டும் எங்கருந்துதான் ஃபுல்லு ஃபுல்லா சரக்கு கிடைச்சதோ... தினமும் ஒரு ஃபுல் பாட்டில ஓபன் பண்ணி... சரக்கடிச்சபடியே போடோக்களைப் போட்டு குடியர்களை குமுறவைத் தார்.
"உங்களுக்கு மட்டும் எங்கருந்து கிடைக்குது... சொல்லுங்க...' என கெஞ்சாத குறையாக கேட்டுப்பார்த் தும் மூச்சுவிடவில்லை ஸ்ரீ.
அடைச்சிருந்த நேரத்துலயே அம்புட்டு ஃபுல்லு வச்சிருந்த ஸ்ரீ... திறந்திருக்க இந்த நேரத்துல எம்புட்டு ஃபுல்லு வச்சிருப்பாரோ...?
"குடிச்சிருக்கேன்... ஆனா... கொஞ்சமாத்தான் குடிச்சிருக்கேன்...' என நேரடியாகச் சொல்லவில்லை. ஆனாலும் இதே அர்த்தத்தை... சுற்றிவளைத்து சொல்லியிருக்கிறார் காஜல் அகர்வால்.
தன் வலைப் பக்கத்தில் காஜல் தெரிவிச்சிருக்கது என்னன்னா...
“என்னோட ஈரல் அறிந்த ஆல்கஹால் அளவைவிட... கடந்த மூன்று நாட்கள்ள என்னோட கைகள் அறிந்திருக்கிறது’’
ஆல்கஹால் கலந்த சரக்கை குடித்ததைவிட.... அதிகமாக ஆல்கஹால் கலந்த சானிடைசர் போட்டு தன் கைகளைக் கழுவியதைத்தான் இப்படி கவிதையாக பாடியிருக்கார் காஜல்.
இந்தக் கொரோனா இப்படி ஒரு உண்மையை ‘போட்டு... வாங்கீருச்சே..’
அமலா பால் தன் சகோதரர் அபிஜித்தின் பிறந்தநாளையொட்டி.... வீட்டுக்குள்ளயே பார்ட்டி கொடுத்திருக்கார். வெளியாட்கள் யாருக்கும் அழைப்பில்லை. சோஷியல் டிஸ்ட்டென்ஸ்!
ஒரு கடைக்குள்ளிலிருந்து கையில் எதையோ பிடித்தபடி... சாலையக் கடந்து வரும் ரகுல் பிரீத் சிங்கின் வீடியோ வைரலாகியுள்ளது.
"சரக்கு வாங்கிட்டு வர்றாரு' என போதை யேறுனமாதிரி விஷயம் ஏற...
"மெடிகல் ஷாப்ல மது விற்பாங்கனு தெரி யாதே எனக்கு...' என மிக்ஸிங் இல்லாமல் குடித்துவிட்டதைப் போல... எரிச்சலாக மறுத்திருக்கிறார் ரகுல்.
ஆல்கஹால் சானிடைசர் வாங்கியிருப்பார்... என அதுலயும் ‘சரக்கு’ வச்சு பேசுறாங்க.
-ஆர்.டி.எ(க்)ஸ்