Advertisment

டூரிங் டாக்கீஸ்! படிச்சு... களிச்சாங்க!

tt

லக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ஆம் தேதி கொண்டாடப்படுது. வெறித்தனமா புத்தக வாசிப்பு செய்றவங்க நம்ம நாட்டுல இருந் தாங்க... இருக்காங்கன்னாலும்... நம்ம மக்கள் தொகையை அளவா வச்சு பார்த்தா... சின்னச் சின்ன நாடுகளை விட புத்தகப் பிரதிகள் விற்பனைல நாம ரொம்ப மோசம்னு ஒரு சர்வே சொல்லுது.

Advertisment

அத விடுங்க... எந்த வருஷமும் இல்லாதபடி... இந்த வருஷம் கொரோனாவால் வீடடங்கி இருக்கிறதால... பிஸியான பிரபல நடிகைகளுக்கும் புத்தகம் படிக்க நேரம் கிடைச்சிருக்கு. உலக புத்தக தினத்தை யொட்டி... என்ன புத்தகங்களைப் படிச்சுக் களிப்படைஞ்சாங்கனு பார்க்கலாமா?

Advertisment

tt

மலா பால் படிச்ச புத்தகம்... ரஜ்னீஷ் ச

லக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ஆம் தேதி கொண்டாடப்படுது. வெறித்தனமா புத்தக வாசிப்பு செய்றவங்க நம்ம நாட்டுல இருந் தாங்க... இருக்காங்கன்னாலும்... நம்ம மக்கள் தொகையை அளவா வச்சு பார்த்தா... சின்னச் சின்ன நாடுகளை விட புத்தகப் பிரதிகள் விற்பனைல நாம ரொம்ப மோசம்னு ஒரு சர்வே சொல்லுது.

Advertisment

அத விடுங்க... எந்த வருஷமும் இல்லாதபடி... இந்த வருஷம் கொரோனாவால் வீடடங்கி இருக்கிறதால... பிஸியான பிரபல நடிகைகளுக்கும் புத்தகம் படிக்க நேரம் கிடைச்சிருக்கு. உலக புத்தக தினத்தை யொட்டி... என்ன புத்தகங்களைப் படிச்சுக் களிப்படைஞ்சாங்கனு பார்க்கலாமா?

Advertisment

tt

மலா பால் படிச்ச புத்தகம்... ரஜ்னீஷ் சாமியார் என இன்னொரு பெயர் கொண்ட ஓஷோ எழுதிய "தி புக் ஆஃப் வுமன்'’என்கிற புத்தகம். இந்த புத்தகத்த படிச்சிட்டுத்தான்.... களிப்பு அடைஞ்ச அமலா... கிழிகிழினு கிழிச்சி ருக்காங்க... ஆண்களை. “பெண் மேல ஆண் வச்சிருக்கிறதா சொல்றது அன்பு இல்லை. அவளை பாலியலுக்காக பயன்படுத்திக்கிறான். பெண் மேல ஆண் உண்மையான அன்பு வச் சிருந்தா உலகத்துல இம்புட்டு ஜனத் தொகை வந்திருக்குமா? ஆண் அவளை மறுபடி மறுபடி கர்ப்பமாக்கி... அவளை தொழிற் சாலையாத்தான் ஆக்கு றான்....’’ என்றெல்லாம் சொல்லீருக்கார் அமலா.

ஸ்வர்யா ராஜேஷ் காமிக்ஸ் புத்தகங்களை படிச்சிருக் கார். தொடர்ந்து படிச்சிக்கிட்டிருக்காராம். ""சின்ன வயசுல காமிக்ஸ் படிச்சது. இப்போ காமிக்ஸ் படிக்கும்போது... மறுபடி சிறுமியா கிட்ட மாதிரி இருக்கு'' என உற்சாகப்படுகிறார்.

fyy

’பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால்... உலக புத்தக தினத்தையொட்டி "பவர் ஆஃப் சப்கான்ஷியஸ் மைண்ட்' என்கிற புத்தகம் உட்பட நான்கு புத்தகங்களை படித்துவருகிறாராம். ""இந்த ஊரடங்கு நேரத்தில் என்னை நானே பிஸியாக வைத்துகொள்ள பல்வேறு விஷயங்களை செய்து வருகிறேன். அதில் முக்கியமானது இப்போது... புத்தகங்கள் படிப்பது. நீங்களும் இணையத்தில் டவுண்லோட் செஞ்சு புத்தகங்களைப் படிங்க'' என்கிறார் சாக்ஷி.

ருந்ததிராய் எழுதிய புத்தகம் உள்ளிட்ட நான்கு புத்தகங்களை படித்து வருகிறார் ஸ்ரத்தா கபூர். அதோடு... "டோனி'யாக நடித்த சுஷாந்த், உலக புத்தக தினத்தையொட்டி ஸ்ரத்தாவுக்கு "தி சீக்ரெட் பிரின்ஸிபிள்ஸ் ஆஃப் ஜீனியஸ்'’என்கிற புத்தகத்தை பரிசளித்தளித்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் ஸ்ரத்தா.

லியா பட் "ஸ்மால் ஃப்ரை' என்கிற புத்தகத்தையும், உலகப்புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் எழுதிய, "மால்குடி டேஸ்' புத்தகத்தை நித்யா மேனனும், "பீஸ் இஸ் எவரி ஸ்டெப்' என்கிற புத்தகத்தை அனுஷ்கா சர்மாவும் வாசித்திருக்கிறார்கள்.

மின்சாரப்பூவே’ கஜோல் படித்த புத்தகம்.... ராவணனைப் பற்றிய ‘ராவண்’(Raavan: Enemy of Aryavarta by Amish Tripathi) என்கிற புத்தகம். (ராவணனை விடாம வில்லனா சித்தரிச்சுக்கிட்டே இருக்காங்க...)

"தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடித்துவரும் கங்கனா ரணவத் ஈஷா யோகா மைய சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய "டெத்'’(Death by Sadhguru) என்கிற புத்தகத்தை படித்திருக்கிறார்.

’’பிக்பாஸ்’’ பிரபலமும், நடிகையுமான மீரா மிதுன்... படித்துவ ரும் புத்தகம்.... நித்தியானந்தா எழுதிய "Living Enlightenment' என்ற புத்தகம்தான். ""இந்த புத்தகத்தை படித்தவுடன் எனக்கு சோகங்கள் குறைந்து என் இதயம் சுத்தமாக இருக்கிறது'' என மீரா தெரிவித்துள்ளார்.

படிக்கிற புத்தகம் எதுங்கிறது முக்கியமல்ல. படிச்சதிலிருந்து நாம எதை எடுத்துக்கணும்? எதை எடுக்கக்கூடாதுங்கிறதுதான் முக்கியம். அதைவிட முக்கியம்... புத்தகங்கள் படிக்கிறது.

படிங்க... படிங்க... படிங்க! வாழ்க்கைல முன்னேற அதுதான் படிங்க....!

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn020520
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe