டூரிங் டாக்கீஸ்! ஸ்டார்களுடன் வார்!

tt

லகம் முழுக்கவே வர்த்தகத் தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் உண்டாகிக் கொண்டிருக்கிறது. அதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் அந்தந்த துறை சார்ந்தோர். ஆனால்... திரையுலகில் மட்டும் படைப்பை மக்களிடம் சேர்க்கக கிடைத்த புதுப் புது தளங்களை பயன்படுத்துவதில் சர்ச்சைகள் நிலவியே வருகிறது.

லேட்டஸ்ட்டாக இப்படி ஒரு சர்ச்சையால் சூர்யாவுக்கு நெருக்கடி நேர்ந்திருக்கிறது.

tt

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள். கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே ஒருமாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில்... டிஜிட்டல் ஃபிளாட்பார்ம் எனப்படும் இணையம் வழியாக மக்களிடம் சேர்ப்ப தற்காக அமேசான் நிறுவனத் தின் பிரைம் வீடியோவிடம் படத்தின் வெளியீட்டு உரிமையை விற்றது சூர்யா வின் 2டி நிறுவனம். கிட்டத் தட்ட... பட்ஜெட்டைவிட இரு மடங்கு லாபத்துடன் இந்தப் படத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறது அமேசான். இது சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பை அதிருப்தி யடையச் செய்த தால், சூர்யா தயா ரித்து, நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தை திரையரங்கு களில் வெளி யிடமாட்டோம்...’’ என தமிழக திரையரங்

லகம் முழுக்கவே வர்த்தகத் தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் உண்டாகிக் கொண்டிருக்கிறது. அதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் அந்தந்த துறை சார்ந்தோர். ஆனால்... திரையுலகில் மட்டும் படைப்பை மக்களிடம் சேர்க்கக கிடைத்த புதுப் புது தளங்களை பயன்படுத்துவதில் சர்ச்சைகள் நிலவியே வருகிறது.

லேட்டஸ்ட்டாக இப்படி ஒரு சர்ச்சையால் சூர்யாவுக்கு நெருக்கடி நேர்ந்திருக்கிறது.

tt

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள். கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே ஒருமாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில்... டிஜிட்டல் ஃபிளாட்பார்ம் எனப்படும் இணையம் வழியாக மக்களிடம் சேர்ப்ப தற்காக அமேசான் நிறுவனத் தின் பிரைம் வீடியோவிடம் படத்தின் வெளியீட்டு உரிமையை விற்றது சூர்யா வின் 2டி நிறுவனம். கிட்டத் தட்ட... பட்ஜெட்டைவிட இரு மடங்கு லாபத்துடன் இந்தப் படத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறது அமேசான். இது சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பை அதிருப்தி யடையச் செய்த தால், சூர்யா தயா ரித்து, நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தை திரையரங்கு களில் வெளி யிடமாட்டோம்...’’ என தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தின் செயலாளர் ‘ரோகிணி’ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்..

’’சிறிய பட்ஜெட் படங்களுக்கு சரிவர தியேட்டர் தருவதில்லை. நன்றாக ஓடிக்கொண்டிருக் கும் சின்னப் படத்தையும்கூட... ஒரு பெரிய படம் வெளியானால்... தூக்கிவிடுகிறார்கள். மெஜாரிட்டி யான சிறுபட தயாரிப்பாளர்களை விநியோகஸ்தர் களும், திரையரங்க உரிமையாளர்களும் மதிப்பதே யில்லை. இப்போது சின்னப் படங்களுக்கு நல்ல விலை தர... இணையவழி திரைப்பட வெளி யீட்டு நிறுவனங்கள் முன்வந்தி ருப்பதால்... நாங்கள் இதை வரவேற்கிறோம்’’ என்பதே சிறுபட தயாரிப்பாளார்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் இடைக்கால கமிட்டி உறுப் பினர்களான பாரதிராஜா உள்ளிட்டவர்களும்... “தயாரிப்பாள ரின் தொழில் சுதந்திரத்தில் தியேட்டர் காரர்கள் தலையிடக் கூடாது’ என்றே அறிக்கை யாக வலியுறுத்துகிறார்கள்.

“எந்தப் படத்தை எங்கள் தியேட்டரில் போடு வது என்பது எங்களின் சுதந்திரம்...’’ என விநியோ கஸ்தர் சங்க பிரமுகரும், தியேட்டர் உரிமையாளர் சங்க பிரமுகருமான திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடி தருகிறார்.

தயாராகும் ஒரு திரைப்படத்தை தியேட்டர் மூலம்தான் ரிலீஸ் செய்யவேண்டும் என்பது... சட்டமல்ல. அது ஒரு தொழில் மரபுதான். காலத்திற்கேற்ப மாறுதல் செய்யக்கூடியதுதான் தொழில் விற்பனை உத்தி.

திரைப்படத்தின் வெளிநாட்டு வர்த்தக எல்லைகளை ஒட்டுமொத்தமாக விற்பது என்கிற நிலையிலிருந்து... பிரித்துப் பிரித்து விற்கும் எஃப்.எம்.எஸ். முறையை முன்னெடுத்து... தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ரூட் போட்டுக்கொடுத்தவர் கமல். தொழில் நுட்பங்களை லாபகரமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவானவர் கமல்.

அதனால்தான் தனது "விஸ்வரூபம்'’ திரைப்படத்தை வீடுதோறும் வெளியிடும் ‘டைரக்ட் டூ ஹோம்’ என்கிற டிடிஹெச் தொழில் நுட்பத்தை பயன்படுத்த விரும்பினார்.

“தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதை விருப்பமாக கொண்டவர்கள் தியேட்டர்களுக்கே வந்து பார்ப்பார்கள். அதனால்... தியேட்டர்களிலும் படத்தை வெளியிடலாம். ஒரு படம் வெளியாகும் போதே... டிவிடியிலும் வெளியிடலாம். அதுவும் ஒருவகை வியாபாரம்’’ என கமல் சொன்ன விளக் கத்தை தியேட்டர்காரர்கள் ஏற்கவில்லை. கமலின் அண்ணனும், ராஜ்கமல் நிறுவன பார்ட்னருமான சந்திரஹாசனை அழைத்து... பேச்சுவார்த்தை என்ற பெயரில் ராயப்பேட்டை திரையரங்கம் ஒன்றில் வைத்து மிரட்டுவதுபோல பேசினர் தியேட்டர் சங்கத்தினரும், விநியோகஸ்தர் சங்கத்தினரும்.

ஆனால் அந்த மிரட்டலை கமல் அலட்சியப்படுத்தியதால்... தமிழகத்தில் உள்ள திரையரங்க அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து... கமலுக்கு ரெட் கார்டு எனும் தொழில் ஒத்துழை யாமை தீர்மானத்தை போட்டனர்.

இதை எதிர்த்து... தொழில் சுதந்திரத் திற்கான இந்திய போட்டி ஆணையம் எனப்படும் "காம்ப்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா' எனும் அரசாங்க அமைப்பில் புகார் செய்தார்கள் கமலும், சந்திரஹாசனும். டெல்லியிலுள்ள இந்த அமைப்பில், முதன்முதலாக... சினிமா விஷயமாக கமல் தொடுத்த வழக்கை ஆணையம் ஏற்று விசாரித் தது. (அப்போதே இது பற்றி விரிவாக எழுதியது நக்கீரன்)

வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே... கமல்- தியேட்டர் அதிபர்ஸ் தரப்பில் சுமுக பேச்சுவார்த்தை நடந்து... "விஸ்வரூபம்'’ தியேட்டர்களில் வெளியானது. டிடிஹெச்சில் வெளி யிடும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது.

ஆணையத்தின் முதற்கட்ட தீர்ப்பு கமலுக்கு சாதகமாக அமைய, அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கும் சுமூக நிலைமையால் தள்ளுபடியானது. இந்த முன் அனுபவம் இருப்பதால்... சூர்யாவுக்கு எதிரான ரெட் நடவடிக்கையை எழுத்துப்பூர்வமாக தடாலடியாக செய்யாமல் உஷாராக செயல்படுகிறது தியேட்டர் சங்கம்.

தங்களுடைய திரையரங்குகளை... ‘ஷோ’ செய்து... லேட்டஸ்ட் டெக்னாலஜிகளுக்கு அடாப்ட் ஆகி... கார்ப்பரேட் ஸ்டைலில் மாற்றிக்கொண்டு... காபி 80 ரூவா, பாப்கார்ன் 120 ரூவா... என கார்ப்பரேட்தனமான காரணம் சொல்லி விற்கும் தியேட்டர் உரிமையாளர்கள்... திரைப்படத் தயாரிப்பாளர்கள் மட்டும் நவீன வடிவங்களுக்கு மாறக்கூடாது... என நினைப்பது எந்தவகை நியாயமோ?

-இரா.த.சக்திவேல்

_____________

புது சிஸ்டம்?

tt

"கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் தியேட்டர்கள் சேதமடைந்திருப்பதால்... திறக்கப்படுவதற்கு முன் அதை செப்பனிட பெரும் செலவு பிடிக்கும். மக்களின் வருகையும் குறையும். அதனால் பழைய அவுட்ரேட் அல்லது மினிமம் கியாரண்டி முறைக்குப் பதிலாக, படத்தை ரிலீஸ் பண்ணி கலெக்ஷனில் ‘ஷேர்’ பண்ணிக்குவோம்...' “ என தியேட்டர்காரர்களும், தியேட்டர்- விநியோகஸ்தர் இடையேயான மீடியேட்டர்களும் சொல்லியிருப்பதால்... விஜய்யின் "மாஸ்டர்' பட விநியோகஸ்தர்கள் ஷாக் ஆகியிருக்கிறார் களாம்.

nkn290420
இதையும் படியுங்கள்
Subscribe