டூரிங்டாக்கீஸ்! : சூடாகுது பூமி... காப்பாத்துடா சாமி!

tt

ந்த பிரபஞ்சத்தை வெப்பமும், குப்பையுமா பாழாக்கிக் கிட்டிருக்கு மனித இனம்.

பொறுமைக்கு உதாரணமா சொல்லப்படுற இந்த பூமித்தாயோட பொறுமைக்கும் எல்லை உண்டுதானே... அதான்... அப்பப்ப... ஏதாவது சிம்டம்ஸ் மூலமா பூமி தன்னோட எதிர்ப்பைப் லைட்டா காட்டிக்கிட்டு வருது.

பூமியைப் பத்தின அக்கறை ஒவ்வொரு மனுஷனுக்கும் வேணும்னுதான்... ஏப்ரல் 22-ஆம் தேதி பூமி தினம் உலமமெங்கும் கொண்டாடப் படுது. ஆசாமிகள "ஹாட்'டாக்குற நடிகைகள்... பூமி ஹீட்டாகுறதுக்காக ரொம்ப கவலைப்பட்டிருப்பதோட.

ந்த பிரபஞ்சத்தை வெப்பமும், குப்பையுமா பாழாக்கிக் கிட்டிருக்கு மனித இனம்.

பொறுமைக்கு உதாரணமா சொல்லப்படுற இந்த பூமித்தாயோட பொறுமைக்கும் எல்லை உண்டுதானே... அதான்... அப்பப்ப... ஏதாவது சிம்டம்ஸ் மூலமா பூமி தன்னோட எதிர்ப்பைப் லைட்டா காட்டிக்கிட்டு வருது.

பூமியைப் பத்தின அக்கறை ஒவ்வொரு மனுஷனுக்கும் வேணும்னுதான்... ஏப்ரல் 22-ஆம் தேதி பூமி தினம் உலமமெங்கும் கொண்டாடப் படுது. ஆசாமிகள "ஹாட்'டாக்குற நடிகைகள்... பூமி ஹீட்டாகுறதுக்காக ரொம்ப கவலைப்பட்டிருப்பதோட... பூமியை... மரங்களை... பசுமையை... நேசிக்கணும்னு வலியுறுத்தியிருக்காங்க.

tt

“பூமிக்கு போதுமான பொறுப்போட நாம இல்ல. அதை உணர்ந்து நல்ல குடிமகனா செயல்பட இது உகந்த நேரம். பொதுவா இயற்கை நமக்கு பாடம் கற்பிக்கும்னு சொல்வாங்க. இப்ப இருக்கிற... (கொரோனா) சூழல்கூட இயற்கையோட எச்சரிக்கையாத்தான் இருக்கும். புத்திசாலித்தனமான இந்த பூமிகிட்ட நாம சரணடைஞ்சிட்டா... மரங்கள் போல நாம வேரூன்றி நிற்கலாம் என ரகுல் பிரித்சிங் பூமியின் பெருமை சொல்லியிருக்கிறார்.

tt

""பூமியில சூழல் மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதோட முதல் கட்டத்தத்தான் இப்ப நாம அனுபவிச்சிக்கிட்டிருக்கோம். அதனால... பூமியை காப்பாத்துவோம்னும், சுத்தமாவும், பசுமையாவும் வச்சிக்கிறதாவும் நாம் உறுதி ஏற்போம்'' என பூமியின் சீற்றத் திலிருந்து தப்பிக்க... பரிகாரம் சொல்கிறார் தமன்னா.

tt

விஜய்யின் ‘மாஸ்டர்’ நாயகியான மாளவிகா மோகனன்... வழக்கம்போலவே கிளாமர் போஸில் கிளுகிளுப்பாகவே இயற்கையின் அருமையை வலியுறுத்தியிருக்கார். பழமையான... மெகா சைஸ் மரம் ஒன்றினை "ஹக்' செய்தபடி நிற்கும் மாளவிகா... ""எங்கெல்லாம் மரம் இருக்கோ.... அங்கெல்லாம் அந்த மரத்தை நான் கட்டிப்பிடிச்சுக்கிட்டு நிற்கிறதை நீங்க பார்க்கலாம்'' எனச் சொல்கிறார்.

""எங்கள் வீட்டின் முன்புறம் இருக்கும் இந்த மாமரம்... நான் சிறுவயதிலிருந்தே இருக்கிறது. ஆனால் ஒருநாளும் அந்த மரத்திற்கு நான் ஒரு "ஹாய்' சொன்னதில்லை. தன்னையும், அந்த இடத்தையும் அழகாக்கி நிற்கும் அதன் அழகை நான் சிலாகித்ததில்லை. இப்போதுதான் அதன் அருமை தெரிகிறது...''’’ எனச் சொல்லி... தாயின் மேல் ஏறிவிளையாடும் குழந்தைபோல மரத்தின் மீதேறி... மாங்காய் பறித்திருக்கிறார் லட்சுமி மஞ்சு.

Heart என்பதற்கும், Earth என்பதற்கும் ஒரே மாதிரி ஸ்பெல்லிங்தான். அதை உணர்ந்தாலே... பூமியோட அருமையை உணர முடியுமே...’’ என சிம்பா லிக்காக சொல்லியிருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா.

“உங்களால ஒரு மரத்தை நட்டு வளர்க்க முடியலேன்னாலும்... இருக்கிற மரங்களுக்கு கெடுதல் பண்ணாம இருந்தாலே... உங்களுக்கு புண்ணியமாப் போகும்...

இப்படிச் சொல்றது யாருன்னா... ஹி... ஹி... நாமதான்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn250420
இதையும் படியுங்கள்
Subscribe