டூரிங் டாக்கீஸ்! அப்பா எப்பவுமே டக்கர்தான்!

tt

ஷூட்டிங்... ஷாப்பிங்... அவுட்டிங்... டேட்டிங்... என வீடு தங்காமல் வெளியே அலைவது இளம் வயதினருக்கு ஜாலியான அனுபவம்தான். ஆனால் அனுபவஸ்தர்களான பெற்றவர்கள்... "இப்படியே அலைஞ்சிட்டிருக்கக்கூடாது' என அட்வைஸ் செய்தால் பிள்ளைகளுக்கு பிடிக்காது... பெரும்பாலும்.

இப்போது... ‘கொரோனா தடுப்பு நடவடிக்கையால்’வீட்டுக்குள்ளேயே அடங்கியிருக்கும் பிள்ளைகளைப் பார்த்து சில பெற்றோர்கள் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.

இளம் நட்சத்திரங்களும் இந்த வீடடங்கா போக்கிற்கு விதிவிலக்கில்லையே...

மறைந்த மயிலு ஸ்ரீதேவியின் மகளும், கதாநாயகியுமான மயிலுக்குட்டி ஜான்வி கபூர் பிரபல தயாரிப்பாளாரான தன் அப்பாவின் அருமையை உணர்ந்து கட்டுரையே எழுதியிருக்கிறார்.

இந்த ஊரடங்கல்... வீடடங்கல் ... மூலம் வாழ்க்கை குறித்த சில பாடங்களை கற்றுக்கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

""லாக்

""லாக்-டவுண் காலத்திற்கு முன்பு... எனக்காகவும், என் தங்கை குஷி கபூருக்காகவும்... இரவு எந்நேரம் ஆனாலும் ஹாலில் சோபாவில் எதிர்பார்ப்போடு காத்திருப்பார் அப்பா. எங்களுடன் நேரம் செலவிடவேண்டிய தந்தையின் கடமையைச் செய்யவேண்டியதற்காக காத்திருப்பார். ஆனால்... அப்பாவுடன் நேரத்தை செலவிடவேண்டிய கடமையை மறந்த பிள்ளைகளாக... நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்டுவிட்டு வருவோம்.

tt

ஆனால்... இந்த லாக்-டவுண் நேரத்தில் எங்கள் அப்பா மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். ஏனென்றால்... நாங்கள் முழுநேரமும் அவருடன்தான் நேரத்தைச் செலவிடுகிறோம்.

நான் ஆடம்பரமாக வாழ்வதற்கு அப்பா ஒருபோதும் தடை சொன்ன தில்லை. நான் சில விஷயங்களை அத்தியாவசியம் என நினைத்து வாழ்ந்து வந்தேன். ஆனால் இந்த ஊரடங்கல் நேரம் என்பது... நான் அத்தியாவசியம் என நினைத்ததெல்லாம் ஆடம்பரம்... என்கிற உண்மையை உணர்த்தியுள்ளது. நான் சுயநலமாக வாழ்ந்து வந்திருப்பதை யும் பாடமாகச் சொல்லி உணரவைத் துள்ளது. அப்பா எவ்வளவு முக்கியம்... தங்கை எவ்வளவு முக்கியம்... குடும்ப உறவுகள் எவ்வளவு முக்கியம்... இந்தக் குடும்பம் எனக்கு எவ்வளவு முக்கியம்... என்பதையும், அவர்களை நான் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப் பையும் கற்றுக்கொண்டிருக்கிறேன்...’’

-இப்படி அப்பாவின் அருமை, குடும்பத்தின் அருமைகுறித்து அறிவாகப் பேசியுள்ளது இந்த அழகு மயிலுக்குட்டி!

மைனா அமலாபாலின் அப்பா பால் வர்க்கீஸ் கடந்த பிப்ரவரி மாதம்... உடல்நலக் குறைவால் இறந்துபோனார். அதிலிருந்து மீண்டதையும்... கூடவே அம்மாவின் அவசியத்தையும் உருக்கமாக எழுத்தில் வடித்திருக்கிறார் அமலா.

tt

""பெற்றோரை இழப்பது என்பது விவரிக்கமுடியாத உணர்ச்சி. பிள்ளை களுக்கு அது பெரிய வீழ்ச்சி.... அது மட்டுமில்லை... அது உங்களை இருட்டி லும் தள்ளும். நீங்கள் வித்தியாசமான உணர்வுகளை எதிர்கொள்வீர்கள்.

என் அப்பாவின் இழப்பு, என் வாழ்வில் புதிய பரிமாணத்தை எற்படுத் தியது. அது என்னை பல விஷயங்களை உணரவைத்தது.

நாம் பெரிய அழகிய உலகில் வாழ்கிறோம். அதே சமயம்... நாம் சமூக விதிமுறைகளால் செதுக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம். அதுவே... நமது ஒவ்வொரு செயலையும்... சிந்தனையையும் சொல் கிறது.... ஆணையிடுகிறது''’என அப்பாவின் இழப்பால் பல பொறுப்புகளை கற்க முடிந்ததாக தெரிவித்திருக்கும் அமலா... அம்மாக்களுக்காகவும்.... புரிந்து, பரிந்து பேசியிருக்கிறார்.

“""அம்மாக்கள் தங்கள் மீது அன்பு செலுத்த மறந்துவிடுகிறார்கள். கணவர்- குழந்தைகள்- குடும்பம்... என்றே தங்கள் வாழ்க்கையை செலவிடுகிறார்கள். ‘அம்மாக்களே... உங்களையும் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்’என அம்மாக்களுக்கு கற்றுத்தரவேண்டும்.

என் அப்பா இறந்தபோது... நானும், என் அம்மாவும் மிகவும் மனரீதியாக பாதிக்கப்பட்டோம். அன்பால்தான் பீனிக்ஸ் பறவை போல நாங்கள் மீண்டெழுந்தோம்...''’ என மனமுருகியுள்ளது மைனாக்குட்டி.

’துள்ளுவதோ இளமை’ ஷெரீன் இப்போது "பிக்பாஸ்'’மூலம் மறுபடி பிரபலமானார். புகழ், வசதி... என இருந்தாலும் தன் அப்பா தன்னைவிட்டுச் சென்ற வலியை அவரால் தாங்கமுடிய வில்லை. ஷெரீன் சிறு குழந்தையாக இருந்தபோதே... மகள் ஷெரீனையும், மனைவி யசோதாவையும் விட்டுவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாராம் ஷெரீனின் அப்பா அலி ஷ்ருங்கார்.

தன் பெற்றோருடன் சிறு குழந்தையாக தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு... ""நாங்கள் சேர்ந்து இருக்கும் ஒரே ஒரு குடும்பப் புகைப்படம் இதுதான்''’என ... அப்பா இல்லாத வலியை விஷுவலாகச் சொல்லியுள்ளார் ஷெரீன்.

ஊரடங்கல்... வீடடங்கல் ஒருவகையில் உறவின் அருமையை உணர உதவுதே....

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn150420
இதையும் படியுங்கள்
Subscribe