டூரிங் டாக்கீஸ்! : BIG BOSS மேல SEX BOMB வீச்சு!

srireddy

டிகை ஸ்ரீரெட்டி!

இந்த பேரைக் கேட்டாலே... தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு உள்ளூர உதறல்.

உண்மையா? பொய்யா? என்பதைத் தாண்டி... ஸ்ரீரெட்டி சுமத்தும் செக்ஸ் குற்றச்சாட்டுகள் வியக்கவைக்கிறது... வியர்க்கவும் வைக்கிறது.

""ஹைதராபாத்தில் விடுதிகளில் தங்கி வேலைக்குச் செல்லும் பெண்கள் சிலரை ஏமாற்றி... தன் கணவர் நடிகர் டாக்டர் ராஜசேகரின் படுக்கைக்கு அனுப்பினார் ஜீவிதா'' என ஸ்ரீரெட்டி வேட்டுப்போட... ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜீவிதா.

srireddy

பலரைப்பற்றிய பரபரப்பு குற்றச் சாட்டு... புகைப்பட ஆதாரம்... வாட்ஸ் ஆப் சாட்... என எவிடன்ஸ்களை எடுத்துவிட்ட ஸ்ரீரெட்டி... இப்போது "நான் ஈ' நாயகன் நானியை குபீர் குற்றச்சாட்டுகளால் அலறவிட்டுக் கொண்டிருக்கிறார்.

""எத்தனை இளம் பெண்களை கெடுத் திருக்கிறாய். அதிலும் ஒரு இளம்பெண்... உன்னால் பட்ட வலியை நினைத்து இப்போதும் கதறிக் கொண்டிருக்கி

டிகை ஸ்ரீரெட்டி!

இந்த பேரைக் கேட்டாலே... தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு உள்ளூர உதறல்.

உண்மையா? பொய்யா? என்பதைத் தாண்டி... ஸ்ரீரெட்டி சுமத்தும் செக்ஸ் குற்றச்சாட்டுகள் வியக்கவைக்கிறது... வியர்க்கவும் வைக்கிறது.

""ஹைதராபாத்தில் விடுதிகளில் தங்கி வேலைக்குச் செல்லும் பெண்கள் சிலரை ஏமாற்றி... தன் கணவர் நடிகர் டாக்டர் ராஜசேகரின் படுக்கைக்கு அனுப்பினார் ஜீவிதா'' என ஸ்ரீரெட்டி வேட்டுப்போட... ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜீவிதா.

srireddy

பலரைப்பற்றிய பரபரப்பு குற்றச் சாட்டு... புகைப்பட ஆதாரம்... வாட்ஸ் ஆப் சாட்... என எவிடன்ஸ்களை எடுத்துவிட்ட ஸ்ரீரெட்டி... இப்போது "நான் ஈ' நாயகன் நானியை குபீர் குற்றச்சாட்டுகளால் அலறவிட்டுக் கொண்டிருக்கிறார்.

""எத்தனை இளம் பெண்களை கெடுத் திருக்கிறாய். அதிலும் ஒரு இளம்பெண்... உன்னால் பட்ட வலியை நினைத்து இப்போதும் கதறிக் கொண்டிருக்கிறாள்'' என நானி மீது ஈ மொய்ப்பதுபோல ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை மொய்க்க விட்டார் ஸ்ரீரெட்டி.

ற்கெனவே ஜூனியர் என்.டி.ஆரை பிக்பாஸாகக் கொண்டு தெலுங்கில் ‘பிக்பாஸ் சீஸன் -1’ போட்டியை நடத்திய ஸ்டார் மா டி.வி., "சீஸன் -2'வை நடத்த திட்டமிட்ட நேரத்தில்... திரையுலகினர் பற்றிய பகீர் குற்றச்சாட்டு, டாப்லெஸ் நிர்வாண போராட்டம் என பரபரக்கவைத்த ஸ்ரீரெட்டியை "சீஸன்-2'-ல் போட்டியாளராக்க முடிவு செய்து ஸ்ரீரெட்டியிடம் பேசியது சேனல் நிர்வாகம். கூடவே... காமெடி நடிகர் ஹர்ஷாவையும் உள்ளே கொண்டுவர நினைத்தது. தன்னிடம் வாட்ஸ் ஆப்பில் ஆபாச மாக சாட் செய்த இந்த காமெடி நடிகரின் சாட்டிங் விவரங்களை ஸ்ரீரெட்டி லீக் செய்திருந்தார். அத னால்... ஸ்ரீயையும், காமெடி நடிகரையும் போட்டியாளர்களாக உள்ளே கொண்டுவந்தால்... பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபைட் நடக்கும். இதனால் நிகழ்ச்சி யின் டி.ஆர்.பி. ரேட்டிங் உயரும்... எனவும் சேனல் தரப்பு கணக்குப் போட்டு வைத்திருந்ததாம்.

ஆனால்...’படப்பிடிப் பில் பிஸியாக இருப்பதால் "பிக்பாஸ் சீஸன் -2' நிகழ்ச்சி யை நடத்த முடியாது’ என ஜூனியர் என்.டி.ஆர். மறுக் கவே... பிக்பாஸாக நானியை தேர்வு செய்தது சேனல்.

நானி இருக்கிற இடத்தில் ஸ்ரீரெட்டியை எப்படி சேர்க்க முடியும்? இதனால் ஸ்ரீயை கழற்றிவிட்டது சேனல்.

"நானியால் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை'’ எனச் சொல்லிவரும் ஸ்ரீ, அடுத்து சொன்னதுதான் அதிர வைக்கிற குற்றச்சாட்டு.

nani-vishal

நானியால் பாதிக்கப்பட்டு இன்றளவும் கதறிக் கொண்டிருக்கும் பெண், தான்தான்’ என்பதுபோல அந்த குற்றச்சாட்டைச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீ.

""நானி பெரிய ஹீரோவாக ஆவதற்கு முன்பிருந்தே எனக்குத் தெரியும். தான் பெரிய ஹீரோவானதும், எனக்கும் நல்ல வாய்ப்புகளைத் தருவதாகச் சொன்னார். என்னுடன் உடல் ரீதியாக அடிக்கடி தொடர்பும் ஏற்படுத்திக்கொண்டார் நானி. ஆனால் பெரிய நடிகரானதும் அவர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை'' என்று சொல்லியிருப்பதுடன்... ""நானி.. நீ என்னுடன் உறவு கொள்ளவில்லை என்று உன் குடும்பத்தார்மீது நீ சத்தியம் செய். குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன்... உனக்குத்தான் "டாக்கி ஸ்டைல்' உறவு பிடிக்குமே'' என அதிரடியாகச் சொல்லியுள்ளார் ஸ்ரீ.

ஸ்ரீயின் இந்த குற்றச்சாட்டில் அதிர்ந்துபோன நானி... "இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் சமூகத்திற்காக நான் எதிர் நடவடிக்கையாக அவர் மீது அவதூறு வழக்குத் தொடுக்க நோட்டீஸ் அனுப்பி யுள்ளேன். அமைதியாக இருப்பவர்களை துன் புறுத்துவது சிலருக்கு வேலையாக இருக்கிறது' என மறுப்பை தன் சமூக வலைப்பக்க கணக்கில் தெரிவித்துள்ளார்.

""என் கணவர் அப்ப டிப்பட்டவரல்ல...'' என நானியின் மனைவி அஞ்சனா தெரிவித்திருக்கிறார்.

""நானி எனது நல்ல நண்பர். அதற்காக நான் சொல்லவில்லை... நானியை அறிந்தவர்களுக்குத் தெரியும்... அவர் மற்றவர்களை... குறிப்பாக பெண்களை எந்த அளவுக்கு மதிக்கக்கூடியவர் என்பது. ஆதாரம் இல்லாமல்... ஸ்ரீரெட்டி புகார் கூறக்கூடாது. யார் மீதும் யார் வேண்டுமானாலும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறலாம் என்கிற நிலை இருக்கிறது. ஸ்ரீரெட்டி அடுத்து என்மீதும்கூட குற்றச்சாட்டுகளை கூறலாம்'' எனச் சொல்லியுள்ளார் விஷால்.

து எப்படியோ... ஸ்ரீ போட்ட செக்ஸ் பாம், பிக் பாஸை மிரள வைத்திருப்பதுடன்... பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

-ஆர்.டி.எ(க்)ஸ்

கமலின் சீசன்-2

தமிழில் ஸ்டார் விஜய் டி.வி.யில் கமல் நடத்திய "பிக்பாஸ் சீஸன் -1' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா- ஆரவ் காதல் கிளுகிளு கதைகள் அந்த வீட்டுக்குள்ளிருந்து வந்தன. வீட்டை விட்டு வெளியே வந்தபின்... அந்த காதல் முறிந்துபோனதும் நடந்தது.

கமல் நடத்தும் "பிக்பாஸ் சீஸன் -2' இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பாக விருக்கிறது. இதில் என்னென்ன கதைகள் கிடைக்க காத்திருக்கிறதோ...

nkn19.06.18
இதையும் படியுங்கள்
Subscribe