ஆக்ஷனையும், கிளாமரையும் வச்சு மக்களை எண்டர்டெயின் பண்ற பிரபலங்கள்... இந்த வீடடங்கல் நேரத்துல தங்களை எண்டர்டெயின் பண்ணிக்கிறதுக்கு யாரை வச்சிருக்காங்க....?
அஞ்சலி புதிதாக ஒரு நாய்க்குட்டியை வாங்கியிருக்கிறார். குட்டி புதுசுன்னாலும், நல்லா ஒட்டிக்கிச்சாம் அஞ்சலிகிட்ட. "போலோ'னு அதுக்கு பேர் வச்சு... செல்லம் கொஞ்சுகிறார் அஞ்சு.
அஞ்சலி குட்டிய கொஞ்சுறத பார்த்து... ஆடியன்ஸ் காதுல பொறாமைப் புகை!
பாலிவுட் சின்னத்திரை பெரியதிரை நடிகையான ஆஞ்ச்சல் குரானா... வீடடங்கல் காரணமாக டெல்லியில் இருக்கிறார். அவரோட பொழுதுபோக்கே ‘லியோ’ நாய்க்குட்டிதான்.
கடந்தவாரம்... தனது செல்ல நாய்க்குட்டியுடன் தெருவில் வாக்கி
ஆக்ஷனையும், கிளாமரையும் வச்சு மக்களை எண்டர்டெயின் பண்ற பிரபலங்கள்... இந்த வீடடங்கல் நேரத்துல தங்களை எண்டர்டெயின் பண்ணிக்கிறதுக்கு யாரை வச்சிருக்காங்க....?
அஞ்சலி புதிதாக ஒரு நாய்க்குட்டியை வாங்கியிருக்கிறார். குட்டி புதுசுன்னாலும், நல்லா ஒட்டிக்கிச்சாம் அஞ்சலிகிட்ட. "போலோ'னு அதுக்கு பேர் வச்சு... செல்லம் கொஞ்சுகிறார் அஞ்சு.
அஞ்சலி குட்டிய கொஞ்சுறத பார்த்து... ஆடியன்ஸ் காதுல பொறாமைப் புகை!
பாலிவுட் சின்னத்திரை பெரியதிரை நடிகையான ஆஞ்ச்சல் குரானா... வீடடங்கல் காரணமாக டெல்லியில் இருக்கிறார். அவரோட பொழுதுபோக்கே ‘லியோ’ நாய்க்குட்டிதான்.
கடந்தவாரம்... தனது செல்ல நாய்க்குட்டியுடன் தெருவில் வாக்கிங் போயிருக்கிறார்.
சும்மா நேரத்துல... தெருவிட்டு தெருவர்ற பிற நாய்களை அந்தத் தெரு நாய்கள் தாக்கும். ஊரடங்கு நேரத்துல ஒய்யாரமா ஆஞ்ச்சல்கூட வந்த லியோவைப் பார்த்ததும் நாலைந்து தெருநாய்கள் டென்ஷனாகிவிட்டது.
போலோவை ரவுண்ட்டு கட்டி தாக்க முயல... செல்லத்தை தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் ஆஞ்ச்சல். இதனால் தெருநாய்களின் கோபம் ஆஞ்ச்சல் மீது திரும்பியது. அவரின் கால் மற்றும் தொடைபகுதியை பிராண்டி பதம்பார்த்துவிட்டன.
ஒருவழியாக தப்பித்து... மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கும் ஏஞ்ச்சல்... தன் செல்லம் லியோவை சிறு கீறலும் இன்றி காப்பாற்றியதால் மகிழ்ச்சியடைந் திருக்கிறார்.
ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோவும், அமெரிக்க அரசியல்வாதியுமான அர்னால்ட்... எல்லோரையும் போல... வீடடங்கலில் இருக்கிறார். அவரின் பொழுதுபோக்கே... லூலூவும், விஸ்கியும்தான்.
லூலூ என்பது குதிரைக்குட்டி.
"அப்புறமென்னங்க... ரெண்டு பெக் விஸ்கிய போட்டுட்டு... லூலூகூட விளையாடினா... அர்னால்டுக்கு மட்டுமில்ல... எங்களுக்கும் நல்லாவே பொழுதுபோகும்'னு நினைக்காதீங்க.
"விஸ்கி'ங்கிறது கழுதைக்குட்டி.
இந்த ரெண்டு குட்டிகளையும்... குளிப்பாட்டி... சாப்பாடு ஊட்டிவிட்டு... செல்லங்களைக் கொஞ்சுற தோட... காலைலயும், சாயங்காலத்துலயும்... தன் வீட்டின் முன்பகுதியில் இருக்கிற பிரமாண்டமான புல்வெளியில்... சைக்கிள் சவாரி செய்தபடியே... இரண்டுகுட்டிகளையும் மேய்க்கிறார்.
இதனால் குட்டிகளின் உடல் ஆரோக்கியத்தையும், தனது உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்கிறார். ஆனா... டென்ஷன் பார்ட்டியான அர்னால்டு அந்தக் குட்டிகள என்ன பாடுபடுத்துவாரோ....? என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
கோலிவுட் சின்னத்திரை, பெரிய திரை நடிகையான ரம்யா சுப்பிரமணியன்... தன் வீட்டில் குட்டி நாய், பெரிய நாய் என பிராணிகளை வளர்த்துவருகிறார்.
வீடடங்கல் நேரத்தில் ரம்யாவுக்கு தாங்கமுடியாத சோகம் எற்பட்டுள்ளது. ஜெர்மன் செப்பட் வகை நாயான... மைலோ மீது மிகவும் பிரியம்காட்டி வளர்த்துவந்தார். ஆனால்... சமீப காலமாக மைலோவுக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டு... சில முறை ஆபரேஷன் செய்திருக்கிறார்கள். மைலோவை எப்படியாவது காப்பாறிவிடலாம்... என்கிற ரம்யாவின் ஆசை நிறைவேறாமல் போனது. ஆமாம்... மைலோ இறந்துவிட்டது.
“மைலோவின் மரணம்... என்னை மனதளவில் மிகவும் பாதித்திருக்கிறது...’’ என வருத்தத்தை வெளிப்படுத்திய ரம்யா... அதிலிருந்து மீள்வதற்காக... தன் அன்றாட நடவடிக்கைகளை வீடியோவாக வெளியிட்டு பொழுதைப் போக்கிவருகிறார்.
கவர்ச்சி சர்ச்சைக் கிளியான மீரா மிதுன்.... "டினா' என்கிற செல்லக் கிளியை வளர்த்து வருகிறார். கிளிக்கு முத்தம் கொடுப்பதும், அதோடு பேசுவதுமாக... தன்னை எண்டர் டெயின் செய்து கொள்கிறார் மீரா.
கிளிக்கு முத்தம் கொடுப்பதற்காக மீரா தன் உதடுகளை குவிக்கும் விதம்... ஒரு மாதிரி இருப்பதாக கமெண்ட்டும் கிளம்பியுள்ளது.