கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க... மக்கள் 21 நாட்களுக்கு தங்களின் வீடுகளுக் குள்லேயே இருக்க மத்திய - மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. மக்கள் இதை சுயகட்டுப்பாடுடன் கடைப்பிடிக்க வேண்டும் என பிரபலங்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

''இந்துக்கள் பல்லாண்டு காலமாகவே... கைகூப்பி வணங்குதல், வெளியே சென்றுவிட்டு வந்தால் கை-கால் கழுவுதல், இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டுவிட்டு வந்தால் குளிப்பது... என பல நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்கள்.

tt

இதைப் பார்த்து முன்பு சிரித்தவர்கள்... இப்போது சிந்திக்கிறார்கள். இதை மதம் சார்ந்த விஷயமாக பார்க்காமல்... வாழ்வியலுக்கான வழிமுறையாகப் பார்க்க வேண்டும்..'' என பிரணிதா சொல்லியுள்ளார்.

Advertisment

இப்படி சில பிரபலங்கள் சில பழக்க வழக்கங்களை வலியுறுத்துகிறார்கள்!

''எனக்குச் சொந்தமான வீடுகளை தற்காலிக மருத்துவ மனைகளாக பயன்படுத்திக்கொள்ளலாம்'' என பார்த்திபன் மற்றும் கமல் ஆகியோர் அரசுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

''அப்பா - அம்மா - குடும்பம் நமக்கு முக்கியம். என்னுடைய அப்பா - அம்மாவின் நலத்திற்காக நான் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பேன். நீங்களும் வீட்டிலேயே இருங்கள்!'' என 'மாஸ்டர்' நாயகி மாளவிகாமோகனன் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisment

''ஊருக்கு போய்விடலாம்... என கிளம்பிப்போய்... ஊரிலுள்ள அப்பா - அம்மாவுக்கு ஏதேனும் ஒரு வகையில் வைரஸ் பரவ காரணமாகி... பெற்றோரின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்காதீர்கள்!'' ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படி வீட்டில் இருப்பதன் அவசியத்தை சில பிரபலங்கள் வலியுறுத்தியுள்ளனர்.

tt

'வீட்ல இருந்தா போரடிக்குமே...' என்கிற இளைஞர்களுக்கு எண்டர்டெயின்மென்ட் தரவும் செய்கிறார்கள் சில பிரபலங்கள்.

சினிமாவில் தேவதை போலவே ஃப்ரெஷ்ஷாக வரும் கனவுக்கன்னிகள் வீட்டில் எப்படி இருப்பார்கள்? பொதுவாக பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை நடிகைகளும் செய்வார்களா? என்கிற சந்தேகம்... ஆண்களுக்கு மட்டுமல்ல... பெண்களுக்கும் உண்டு!

அதற்கு விடை தந்திருக்கிறார்கள் பிலபர நடிகைகள். அதில் மிக முக்கியமானவர் கத்ரினா கைஃப்.

வீட்டில் பாத்திரம் தேய்த்து கழுவுவதையும் கவர்ச்சி ட்ரெஸ்ஸில் துடைப்பத்தால் வீடு சுத்தப்படுத்துவதையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

'குனிந்து கூட்டினாய்... வீடு சுத்தமாச்சி மனசு குப்பையாச்சு' என்று எண்ணியபடியோ.. எண்ணாதபடியோ... சுமார் 40 லட்சம் பேர்கள் அந்த வீடியோக்களைப் பார்த்து பொழுது போக்கியிருக்கிறார்கள்.

நடிகையும், ஆர்யாவின் மனைவியுமான சாயீஷா... 'டுவிட்டர் மூலம் என்கூட சாட் செய்யுங்க' என பொழுதுபோக்கிற்கு வழி சொல்லியுள்ளார்.

இன்னொரு பக்கம் வளர்ப்புப் பிராணிகளால் கொரோனா வைரஸ் பரவுவதா வந்த புரளிகளால் சிலர் வளர்ப்புப் பிராணிகளை கைவிட்டு வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள வரலட்சுமிசரத் ''பிராணிகளால் வைரஸ் பரவுவதாக வரும் புரளியை நம்பி அவைகளை கைவிடாதீர்கள்... அவைகளுக்கு உணவளியுங்கள்'' எனக் கேட்டுள்ளார்.

பொதுவாகவே செல்லப் பிராணிகளை உயிராய் நேசிக்கும் சில நடிகைகள்... வரலட்சுமியின் கருத்தை ஆமோதிப்பதுபோல... செயல்பட்டுள்ளனர்.

தனது கணவர் சைதன்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க... நாய்க்குட்டி அவர் மேல் விழுந்து உறங்குவதையும் பிடித்துப் போட்டுள்ளார் சமந்தா.

அமலாபால் தன் செல்லப் பூனையுடன் விளையாடுவதை படம் போட்டு காட்டியுள்ளார்.

இது ஒரு புறமிருக்க... வீட்டுக்குள்ளேயே இருக்கும் நயன்தாரா தன் ஒருகையும், அவரின் காதலர் விக்னேஷ்சிவன் ஒரு கையையும் இணைத்து இருகை ஓசை எழுப்பி... கொரோனா தடுப்பு மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது காதல் என்றால்... பூனம் பாண்டே தன் பாய் ஃப்ரெண்ட்டுடன் போட்டிருக்கும் குளியல்... காமமாக இருக்கிறது. இப்படி பல விஷயங்கள் நடந்துக்கிட்டிருக்கு! ஆக... வீட்டோட இருந்தாலும்... அதை விசேஷமாக்கிறது அவங்கவங்க கைலதான்... ஸாரி சானிடைசர் போட்டு கழுவுன கைலதான் இருக்கு!

-ஆர்.டி.எக்ஸ்

________

அழகாக்கும் டாக்டர்... அழவைத்தார்!

tt

ரஜினியுடன் மீண்டும் நடிக்க 'அண்ணாத்தே' படத்தில் நடிக்க ஒப்பந்த மான குஷ்பு... ஒப்பந்தமான கையோடு நடிகரும் - தோல்நோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சேது ராமன் என்கிற சேதுவின் 'சி கிளினிக்'கிற்கு சென்றார்.

குஷ்பு, வரன்ஸிகா, ரைஸா, சந்தானம் உள்ளிட்ட நட்சத்திரங் கள் பலருக்கும் தோல் பளபளப்பு சிகிச்சைளிக்கும் டாக்டர் சேது, சந்தானத்தின் நட்பால் சினிமா விலும் நடித்தார். 'கண்ணா லட்டுதின்ன ஆசையா', 'வாலிப ராஜா' படங்களில் கதாநாயகனாக வெகு இயல்பாக நடித்து நல்ல ஆக்டராகவும் பேர் பெற்றார்.

36 வயதான சேது கடந்த 26ந் தேதி இரவு மார டைப்பால் காலமானார். இது சேதுவின் குடும்பத்தை நிலை குலையைச் செய்திருப்பதுடன் திரையுலகினரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. ''என்னோட ஸ்கின் ட்ரீட்மென்ட் டாக்டர் சேது ரெண்டு நாள் முன்னாடி கூட போன செய்து... விசாரித்தார். நல்ல மனிதன்.. நல்ல மருத்துவர்...'' எனத் தெரிவித் துள்ளார் குஷ்பு!