கொரோனா வுக்கு எதிரான "சுய ஊரடங்கல்' விழிப்புணர்ச்சி வீடியோவை தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டார் ரஜினி.
"கொரோனா மூன்றாம் நிலை பரவலை தடுக்க... சுமார் 14 மணி நேரம் மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்' என்ற கருத்து ரஜினியின் வீடியோவில் சொல்லப்பட்டி ருந்தது.
"இது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத கருத்து' எனச் சொல்லி ரஜினியின் வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கிவிட்டது.
இதே கருத்தை வலியுறுத்தியிருந்த டோலிவுட் ஹீரோ பவன் கல்யாணின் டுவிட்டர் பதிவையும் டுவிட்டர் நிர்வாகம் நீக்கிவிட்டது.
""பொதுமக்கள் ஒரே நேரத் தில் கைதட்டுவதால்... அந்த ஒலி மந்திரம் போல் மாறி கொரோனா வைரஸை அழிக்கும்'' என மோகன்லால் ஒரு கருத்தைச் சொல்ல... "கைதட்டினா வைரஸ் அழியுமா?' என லால் சேட்டனை நையாண்டி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
"மீ டூ' இயக்கத்தைப் பிரபல மாக்கியதுடன்... உலக அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற் படுத்தியது... ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் விவகாரம்.
பிரபல நடிகைகள், பிரபல தொழில்நுட்பத்துறை பெண்கள், மாடலிங் பெண்கள்... இப்படி ஹாலிவுட்டின் பலதுறைப் பெண்கள் என சுமார் 80 பேர்கள் ஹார்வி மீது கற்பழித் தல், ஓரல் செக்ஸ் உள்ளிட்ட பலவித மாக... பல வருடங்களாக பாலியல் தொல்லை தந்ததாக புகார் அளித்தனர்.
1980-களிலிருந்து இந்த வேலையைச் செய்த ஹார்வி, "மீ டூ' இயக்கத்தால் வசமாகச் சிக்கி... வழக்கைச் சந்தித்தார்.
நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஹார்விக்கு 23 ஆண்டுகள் தண்டனை தரப்பட்டது. புடுச்சு ஜெயில்ல போட்டாங்க... ஒரு தீவுச் சிறையில் ஹார்விக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு... இப்போ வேறொரு தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் ஹார்வி. சிகிச்சை பண்ணிக்கிட்டிருக்காங்க.
""நீங்க கொரோனா வைரஸ் மாதிரி... அப்படியே என்னை ஆக்கிரமிக்கிறீங்களே...'' என டைரக்டர் ராம்கோபால் வர்மா மீதான ஏக்கத்தை கொரோனாவுடன் ஒப்பிட்டார் ஸ்ரீரெட்டி.
அடுத்ததாக... ""நல்லவேள... எனக்கு ஃபாரீன் பாய்ஃபிரண்ட் கிடையாது... கொரோனா தாக்காது'' எனச் சொன்னதுடன் தெலுங்கு ஹீரோ பவன் கல்யாணை மீண்டும் வம்பிழுத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
""வீட்லயே ஃபாரின் சிக் வச்சிருக்கீங்களே... உங்களுக்கு கொரோனா வரலையா?'' எனக் கேட்டுள்ளார்.
ஏன் இப்படி கேட்டுள்ளார் ஸ்ரீ?
தன் இரண்டாவது மனைவி ரேணுதேசா யையும் பிரிந்துவிட்ட பவன் இப்போது வெளிநாட்டு மாடலிங் நடிகை ஒருவருடன் குடும்பம் நடத்திவருகிறார். இதைத்தான் சூசகமாக குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீ.
அதுமட்டுமில்லாமல்... ""தொடர்ந்து செக்ஸ் வச்சுக்கிட்டாக்க... கொரோனா வைரஸ் தாக்காது'' என ஒரு கருத்தை பதிவிட்டு... எதிர்ப்பு காரணமாக பதிவை டெலிட் செய்திருக்கிறார் ஸ்ரீ.
-ஆர்.டி.எ(க்)ஸ்
தமிழி
விசு பாணி!
"சுத்தி வளச்சு பேசாம... நேரா விஷயத்துக்கு வா' என்பார்கள் பொதுவாக. ஆனால் சுற்றி வளைத்துப் பேசுவதையே தனது வசன பாணியாகக் கொண்டு... "விசு பாணி' என்கிற அடையாளத்தை தமிழ்த்திரையில் அழுந்தப் பதித்தவர் விசு.
கதாசிரியர் -வசனகர்த்தா -திரைக்கதை அமைப்பாளர் -நடிகர் -இயக்குநர் என பன்முகத் தன்மையுடன் திகழ்ந்த விசு, கே.பாலசந்தரிடமும் பயிற்சி பெற்றவர். நாடகத்துறையிலிருந்து திரைக்கு வந்தவர் என்பதால் விசுவின் படங்களில் நாடக பாணி இருந்தாலும்... அது மிக சுவாரஸ்யமாகவே இருக்கும்.
விசுவின் படைப்புகளில் பெண்கள் கதாபாத்திரம் உயர்த்திப் பிடிக்கப்படும். இதுபற்றி ஒருமுறை கருத்து தெரிவித்த விசு... ""என்னோட பேனா... ஒரு போதும் பெண்களை தாழ்த்தி எழுதாது'' என்றார்.
"சம்சாரம் அது மின்சாரம்' படத்திற்காக தேசிய -மாநில அரசுகளின் விருதையும், மக்களின் பேரன்பையும் பெற்றார் விசு. விசுவின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்றான "மணல் கயிறு' திரைப்படம் மதுரையில் ஒரு வருடம் ஓடி சாதனை நிகழ்த்தியது.
தான் ஏற்று நடிக்கும் கேரக்டர்களில் மனவலிமை மிக்கவராக நடித்தாலும்... எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அந்த அளவு பார்த்தால் பசு... பேசினாத்தான் விசு.
கடந்த சில ஆண்டுகளாக... சிறுநீரகங்கள் செயலிழந்ததால்... டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த விசு... 22-ந் தேதி மாலையில் இயற்கை எய்தினார்.