தன்னோட பழைய காதல் வாழ்க்கையைப் பத்தி பிரேக்-அப் ஆனதுக்கான காரணம் பத்தி மூச்சு விடாமல் இருந்த சமந்தா... சில தினங்களுக்கு முன்னாடி அதுபத்தி சொல்லீருக்கார்.
ஆனா... சமந்தா சொன்ன காரணம் "பகீர்'னு இருக்கு.
எப்படின்னா...?
ஏற்கனவே திருமணமான குடும்பஸ்தர் ஜெமினி கணேசன்... சாவித்திரியை தன் காதல் வலையில் வீழ்த்தி... திருமணம் செஞ்சுகிட்டதாவும், ஜெமினிகிட்டருந்து பழகின மதுப்பழக்கம்... நாளடைவில்... சொத்து சுகத்தை இழந்து... சாவித்திரியை மது அடிமையாகவும் மாத்தியது... எனச் சொல்வார்கள்.
கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிச்ச "மகாநடி' படத்துல... இந்த விபரங்களை காட்சிப்படுத்தியிருப்பாங்க.
இந்தப் படத்துல... சாவித்திரியோட வாழ்க

இந்தப் படத்துல... சாவித்திரியோட வாழ்க்கை மர்மங்களை கண்டுபிடிச்சு... பத்திரிகைல தொடரா எழுதுற நிருபரா சமந்தா நடிச்சிருந்தார்.
இப்ப சமந்தாவோட... காதல் கதைக்கு வருவோம்.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற சித்தார்த்தும், வளர்ந்து வரும் நடிகையாக இருந்த சமந்தாவும் காதலிச்சாங்க. சமந்தா தெலுங்குல பிஸியான நிலையில் சமந்தாவோட சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட விஷயங்களை சித்தார்த்தோட குடும்பஸ்தர்தான் பார்த்துக்க ஆரம்பிச்சாங்க.
சித்தார்த்-சமந்தா திருமணம் செய்ய... ஜாதகத்துல தடை இருக்குனு ஜோஸியர்கள் சொன்னதும்... காளஹஸ்தி கோயில்ல போய்... பரிகார பூஜையும் செஞ்சாங்க.
ஒரு கட்டத்துல... சித்தார்த் குடும்பத்த கேட்காம எதுவுமே செய்யக்கூடாதுங்கிற நிலமைல சிக்கினார் சமந்தா.
அதன்பிறகுதான் சித்தார்த்துடனான காதலை முறித்துக் கொண்டார். ஏற்கனவே தன்மேல ஈர்ப்பா இருந்த நாகசைதன்யாவை காதலிச்சு ரெண்டு வருஷத்துக்கு முன்ன திருமணம் செஞ்சுக்கிட்டார்.
தன்னோட மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிருந்த சித்தார்த் துடனான பிரேக்-அப்பை இப்போது சொல்லியிருக்கார்... "சித்தார்த்'துனு பேரை குறிப்பிட்டுச் சொல்லலேன்னாலும் சமந்தா சொல்லியிருக்க விஷயம் "பகீர்'னுதான் இருக்கு.
""நான் சரியான நேரத்துல பிரேக்-அப் முடிவை எடுத்தேன். இல்லேன்னா... சாவித்திரியம்மா வாழ்க்கை போல... என்னோட வாழ்க்கையும் பரிதாபகரமா இருந்திருக்கும். நான் சைதன்யாவை சந்திச்சது... கடவுளோட ஆசிர்வாதம்''
இப்படி "பகீர்'ந்திருக்கிறார் தன் பழைய காதல் பற்றி!
"சுப்பிரமணியபுரம்' சசிகுமார் ஜோடியாக "பிரம்மன்' படத்தில் அறிமுகமான லாவண்யா த்ரிபாதி, தெலுங்கில் மிகவும் பிரபலமான கதாநாயகி. தெலுங்கு நடிகர் சுனிசித் வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு தகவல் "பகீர்'னு பதற வச்சிருக்கு. ""நானும் லாவண்யாவும் காதலிச்சோம். ஒண்ணா வசிச்சோம். அப்புறம் பிரேக்-அப் ஆயிடுச்சு. நாங்க சேர்ந்து வாழ்ந்தப்ப... மூணு முறை அபார்ஷன் செஞ்சுக்கிட்டார் லாவண்யா'' எனச் சொல்லியிருக்கார்.
இது லாவண்யாவ கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கு. ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் லாவண்யா புகார் செஞ்சிருக்கார்.
"சிலம்பாட்டம்' சானாகான் சமீபத்தில் தன் காதலை பிரேக்-அப் செய்து கொண்டார். "தன் காதலனாக இருந்த டான்ஸர் மெல்வின் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பவன்... என ஏற்கனவே சொல்லியிருந்த சானாகான் இப்போது சொல்லியிருக்கும் தகவல் பகீர் ரகமாக இருக்கு.
""அவன் என்னை அடிச்சு மண்டய உடைச்சிருக்கான். மூக்கை உடைச்சிருக்கான். இப்படி ரத்தம் வழிய வழிய என்னை துன்புறுத்தினான். இதுக்கெல்லாம் போட்டோ ஆதாரங்கள் இருக்கு. சமீபத்துல என்னைச் சந்திச்ச ஒரு மைனர் பொண்ணு "மெல்வின் என்னை கற்பழிக்க முயற்சி செஞ் சான்'னு சொல்லி அழுதா. "அவன் பார்வையே சரியில்ல... அவன் ஒரு பொம்பள பொறுக்கி மாதிரி இருக் கான்'னு எங்கம்மா சொன்னாங்க. நான்தான் நம்பல. இப்பத்தான் அவனோட சுயரூபம் தெரியுது'' எனச் சொல்லி அதிர வைத்திருக்கிறார் சானா.
-ஆர்.டி.எ(க்)ஸ்